அமெரிக்கா வந்து தம்மைக்காப்பாறும் எனக் காத்திருந்த புலிகளின் தலைவரும் போராளிகளும் இறுதியில் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
போரின் பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையை அழிப்பிற்குத் துணைசென்ற அமெரிக்காவே கைகளில் எடுத்துக்கொண்டு சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரித்து ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. குறைந்த பட்சம் தேசிய இனம் என்று குறிப்பிடப்படுவதைக்கூட கோராமல் போர்க்குற்றத்திற்கு எதிரான தீர்மானம் மட்டுமே போதுமானது என அமெரிக்க அரசின் நயவஞ்சகத்தை இலங்கை மற்றும் புலம்பெயர்த் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொண்டன.
இப்போது அமரிக்க காங்கிரஸ் சபையில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானத்தின் இறுதியில், அமெரிக்காவின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்தல், சனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பொருளாதார நலன்கள், பாதுகாப்பு நலன்கள் தொடர்பான, பொருத்தமான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தும்படியும் இந்த தீர்மான வரைவு சிறிலங்கா அதிபரைக் கேட்டுக் கொள்கின்றது எனக் குறிப்பிடப்படுகிறது.
ஜெனீவாத் தீர்மானமும் இவ்வாறான கோரிக்கையையே முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசு அமெரிக்காவின் விருப்பங்களைப் பிரதிபலிக்க முன்வரும் போது தீர்மானங்கள் வலுவிழந்து போகும். இலங்கையின் சூழலுக்கு ஏற்ப மக்களமைப்புக்களை தோற்றுவிப்பதும் போராட்டத்திற்கான தயாரிப்புக்களை மேற்கொள்வதுமே இன்று அரசியல் இயக்கங்கள் முன்னாலுள்ள கடமை.