புதுடில்லி, ஜூலை 26-
இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிற் போக்கான நடவடிக்கைகளை செயல் படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயத்தமாகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மன் மோகன் சிங் அரசு வெற்றி பெற்ற பின் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு கூட்டத் தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் துறை களில் அன்னிய முதலீட்டை அதிகரிப்ப தற்கான சட்டம், அன் னியப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி வழங்கும் சட்டம் ஆகிய வற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற் றவும் சில்லரை விற்பனையில் 100 சத வீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த மாதம் கூடுகின்ற நாடாளு மன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் இதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவதே அரசின் திட்ட மாகும். இடதுசாரிக் கட்சிகள் ஆத ரவை வாபஸ் பெற்ற சூழ்நிலையில், ஆளும் கூட்டணிக்குள் எதிர்ப்பின்றி இவற்றையெல்லாம் நிறைவேற்றி விட முடியும் என்று அரசு கருதுகிறது.
வங்கித்துறையில் அன்னிய முத லீட்டிற்கு இப்போது உள்ள கட்டுப் பாடுகளை அகற்றி முழுமையாக பன் னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்து விடு வதற்காகவே வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம் கொண்டு வரப்படுகி றது. அன்னிய முதலீடு எவ்வளவு இருக் கிறதோ, அதற்கு ஏற்ப வங்கிகளின் இயக் குனர்கள் குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்க திருத்தம் வகை செய்கிறது. தற்போது அன்னிய முதலீட்டாளர் களுக்கு அவர்களின் முதலீடு எவ்வளவு இருந்தாலும் இயக்குனர்கள் குழுவில் 10 சதவீதமே பிரதிநிதித்துவம் அளிக்கப் படுகிறது. இந்திய வங்கிகளை எளிதாக விழுங்கி விட அன்னிய மூலதன சக்தி களுக்கு கதவு திறந்துவிடுகிறது இந்தச் சட்டத்திருத்தம்.
இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே இதுவரை இச் சட்டம் நிறைவேறாமல் இருந்தது. வங்கி கள் இணைப்பு நடவடிக்கையை முடுக்கிவிடவும் முயற்சி நடக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அசோசியேட் வங்கிகளின் இணைப்பு, இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங் கங்களின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.
ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்டி ராவை எஸ்பிஐயுடன் இணைக்க அரசு வியாழனன்று முடிவு செய்தது. இதற் கான சட்டத் திருத்தங்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். பின்னர் துணை வங்கிகளை எஸ்பிஐயுடன் இணைப்ப தற்கான நடவடிக்கைகள் துவங்கப் படும்.
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க தேவையான திருத்தங்களைக் கொண்டுவர முடியும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம் பிக்கை தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக் கதாகும்.
இன்சூரன்ஸ் துறையில் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள அன்னிய முதலீடு 26 சதவீதம் ஆகும். இதை 49 சதவீதமாகவும், பின்னர் 50 சதவீதத் திற்கும் மேலாகவும் அதிகரிக்க அரசு விரும்புகிறது. இன்சூரன்ஸ் துறையில் இப்போது இருக்கிற பாதுகாப்பான சூழ்நிலையை ஒழித்துக் கட்டும் நடவ டிக்கையை இடதுசாரி கட்சிகள் கடு மையாக எதிர்த்தன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆயுள் காலம் முடிவதற்குள் ளாகவே வங்கி, இன்சூரன்ஸ் துறை களை அன்னிய முதலீட்டாளர்களுக்கு முற்றிலுமாக திறந்து விடும் சட்டத்திருத் தம் நிறை வேற்றப்படும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சிதம்பரம் கூறினார்.