Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனைத்துக் கட்சி, பத்திரிகையாளர் குழுவை அனுப்ப வேண்டும்,கோரிக்கையை நிராகரிக்கத்தது இந்தியா.

நேற்றும் ஈழத்தமிழர் நிலை தொடர்பான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, இலங்கைத் தமிழர்களுக்காகவே ராஜிவ் உயிரை விட்டார். அப்படிப்பட்ட ராஜிவ் போட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. அதை நிறைவேற்றாமல், வெறும், 500 கோடி ரூபாயை அளிப்பதால், தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடாது. தமிழர்களுக்கு சம உரிமை கிடைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். தமிழர் பிரச்னையை ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கையை பார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆளும் கூட்டணி எம்.பி.,க்களை மட்டும் அழைத்துச் சென்று அந்நாட்டு அதிபரிடம் நினைவுப்பரிசுகளை வாங்கி வரச் செய்வதை விட, பத்திரிகையாளர்கள், சர்வகட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை அறிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இந்த விவாதத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சி, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள் இலங்கைக்கு அனைத்து கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு வை அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அயல்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ‘’அனைத்துக்கட்சி குழுவினர் இலங்கை செல்வதற்கு சரி யான நேரம் இதுவல்ல என்று கோரிக்கையை நிராகரித் தார். இந்தியா, இலங்கைக்கு அளித்த நிதி தமிழர்கள் மறுவாழ்வுக்கு பயன்படுத் தப்படுகிறதா என்ற கேள்விக்கு இந்திய அரசு தொடர்ச்சியாக கண்கா ணித்து வருகிறது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறி னார். இலங்கை தமிழர் பிரச் சனை குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது தமிழ கத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் பேசினர்.இதற்கு பதிலளித்த எஸ். எம்.கிருஷ்ணா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மறு வாழ்வுப் பணிகள் குறித்து கண்காணித்து வருகிறது. இந்திய அரசும் இந்த பணி யை மேற்கொண்டுள்ளது என்றார். திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, இந்திய அரசு வழங்கிய உதவி இலங்கைத் தமிழர் களுக்கு முறையாக சென்று சேர்கிறதா என்று ஐயப்பாடு இருப்பதாக கூறினார். இதே கருத்தை அதிமுக உறுப்பி னர் தம்பிதுரையும் கூறினார்.எல்டிடிஇஉடனான போரின் போது இலங்கைத் தமிழர்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள் ளனர். இன்னமும் முகாம்க ளில் பெரும்பகுதி மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவா ரண உதவி அளிக்கப்பட வில்லை. தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் பெரும்பான் மை சிங்கள மக்கள் குடிய மர்த்தப்படுகிறார்கள் என்று எம்.பி.க்கள் குற்றம் சாட் டினர்.மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் பேசும்போது, .நா. குழுவை கூட அனுமதிக்க இலங்கை அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பி னார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண ராஜீய ரீதியில் இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதே கருத் தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொ.லிங் கமும் எடுத்துரைத்தார்.மதிமுக உறுப்பினர் கணேச மூர்த்தி பேசும் போது, இலங்கையில் நடப் பது என்ன என்பதை அறிந்து கொள்ள முடியவில் லை. அந்த நாடு இரும்புத் திரைபோட்டு உண்மை களை மறைப்பதாக கூறி னார். விவாதத்தில் பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை ஜனாதிபதி ராஜ பக்சே அண்மையில் இந் தியா வந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான உடன்பாடும் வடக்குப்பகுதி யில் ரயில்வே கட்டமைப் பை உருவாக்குவதற்கான உடன்பாடும் எட்டப்பட்ட தாக கூறினார்.

Exit mobile version