குறித்த பள்ளிவாசல் நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் பேரினவாதிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.
இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை இலங்கை பாசிச ராஜபக்ச அரசும் அதன் துணை இனவாத நிறுவனங்களும் முடுக்கிவிட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான அதிகரிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் சிங்கள ஒடுக்கப்படும் மக்களோடும் இணைந்து முன்னெடுப்பதனூடாகவே ராஜபக்ச பாசிசத்தை எதிர்கொள்ள முடியும்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மேலெழும் அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதன் ஊடாகவே இலங்கை அரசு எதிர்கொள்ள முற்படுகிறது.
1915 ஆம் ஆண்டில் முதலாவது தேசிய இன வன்முறை முஸ்லீம்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டது.
பேரினவாத்திற்கு எதிரான திட்டமிட்ட அரசியலை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் முன்வைக்கத் தவறினால் இன்னும் பல முள்ளிவாய்க்கல்களைச் சந்திக்க நேரிடும்.