நாடுகடத்தப்பட்டோரில் சிங்கள மற்றும் தமிழர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய அரசின் தொடர்ச்சியான நாடுகடத்தல்களை ஏனைய ஐரோப்பிய அரசுகளும் பின்பற்றும் வாய்ப்புகள் காணப்படுகிறது. இலங்கைக்கு நாடுகடத்தப்படுவோர் பாசிச அரசின் பிடியில் பாதுகாப்பற்றவர்களாவே காணப்படுகின்றனர். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பையும் மனித உரிமை மீறல்களையும் நடத்திவரும் இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டோரும் ஏனைய சட்டத்திற்கு அப்பாற்பட்ட குடியேற்றவாசிகளும் பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றனர்.
போராட்டங்களைச் சிதைப்பதற்காகவும், மலிவான கூலிக்காகவும் அகதிகளை உள்வாங்கிக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் அதற்கான தேவை அற்றுப்போன நிலையில் இன்று அகதிகளை திருப்பி அனுப்புவதில் தீவிரம் காட்டுகின்றன. இதற்கு எதிராக ஐரோப்பிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை குர்தீஷ் மக்களும், துருக்கியர்களும் முன்னரே பலதடவைகள் நடத்தியுள்ளனர்.
தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான எந்த போராட்டங்களையும் ஒழுங்கமைக்கத் தயாரற்ற நிலையியில் அகதிகள் திருப்பியனுப்பப்படுவது தொடரும்.
நாடுகடத்தப்படுவோர் அனாதரவான நிலையிலேயே காணப்படுகின்றனர்.