Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அந்தமான் தீவு எங்களுக்கே சொந்தம் : இலங்கை

இந்தியாவின் அந்தமான் தீவு, ஐ.நா.வின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ்தங்கள் நாட்டு கடற்படுகைக்குள் வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், இதுகுறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐ.நா. ஆணைக் குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறினார்.

இலங்கையின் கடல்படுக்கை உரிமைகள் குறித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்கா கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரோகித மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் ஐ.நா ஆணைக்குழுவுக்கு இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது,தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும்,ஐ.நா இதை 2025 ஆம் ஆண்டுவாக்கில் கவனத்தில் என்றும் கூறினார்.

மேலும் ஐ.நா. வின் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோகித போகொல்லாகம வெளியிட்டார்.

Exit mobile version