2009 மே மாதம் தமிழினப் படுகொலைகளை நடைபெற்ற போது இலங்கைப் பேரினவாத அரசின் தமிழ் நாட்டு முகவராகச் செயற்பட்ட கருணாநிதி மாநாட்டை ஏற்பாடுசெய்திருப்பது கேலிக்குரியதாகக் கருதப்படுகிறது.
வன்னிப் படுகொலைகள் நடந்து முடிந்ததும், அதனை எவ்வாறு நடத்தினோம் என இலங்கை பாதுகாப்புச் செயலாளரும் பயங்கரவாதியுமான கோத்தாபய ராஜபக்ச அறிக்கை ஒன்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்திய அரசு, கருணாநிதி மற்றும் இலங்கை அரசு ஆகியன எவ்வாறு இணைந்து செயற்பட்டன எனத் தெளிவாகக் கூறியிருந்தார். இவையெல்லாம் குறித்து எந்தப் பதிலும் கூறாத கருணாநிதி டெசோ மாநாடு நடத்துவது கொல்லப்பட்டவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.