Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அத்வானி ஜெயலலிதா விற்குப் மீண்டும் பாராட்டு

திராவிட சீர்த்திருத்தப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழகத்தில் இந்துத்துவ பார்பன அதிகாரத்தை மீளமைப்புச் செய்ய ஜெயலலிதா ஊடாக முயற்சிசெய்யப்படுகிறது.

அதிமுக உடன் இயல்பான கூட்டணி எனத் தெரிவித்திருந்த அத்வானி மற்றும் இனப்படுகொலையாளி மோடி கும்பல் மீண்டும் ஜெயலலிதாவிற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது. அத்வானியின் இணையச் செய்தி:
மாநில அரசுகளுடன் எதேச்சதிகார போக்குடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்து வருவது கண்டனத்துக்குரியது. வலுவான மத்திய-மாநில அரசு உறவில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். மாநில அரசை வலுப்படுத்த வேண்டும் என்பதால், மத்திய அரசை பலவீனப்படுத்த வேண்டும் என்ற அர்த்தம் அல்ல.

அதே நேரத்தில் மாநிலங்கள் பலம் பொருந்தியதாக மாறாதவரை மத்திய அரசும் பலம் பெற முடியாது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையை முன்னெடுத்து சென்று இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு மாநில அரசுகளை சம பங்குதாரர்களாக நடத்த வேண்டும் என்றும், மாநில அரசின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தது பாராட்டுக்குரியது.

மாநிலங்களில் லோக்பால், லோக் அயுக்தா சட்டத்தை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு தனது சொந்த கருத்தை பலவந்தமாக திணிக்கும் அணுகுமுறையை கையாண்டு இருக்கிறது.

பா.ஜனதா, அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசுக்கு மட்டுமே இந்த நாட்டை ஆளும் உரிமை இருப்பதாக அது நினைத்துக்கொண்டு இருக்கிறது. ஜனநாயகம் மற்றும் ஆரோக்கியமான மத்திய-மாநில உறவில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் காங்கிரசின் இந்த ஆணவ போக்கை முறியடிக்க முன்வர வேண்டும்

Exit mobile version