Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதி உத்தம ராஜபக்சவைப் போல தேசமும் வளர்ச்சி பெறும் : பில் கேட்ஸ்

billgatesஉலகம் முழுவதும் தனது ரவுடித்தனத்தால் சாரி சாரியாக மக்களைக் கொன்று குவிக்கும் அமரிக்க அரசை வழி நடத்தும் நிறுவனங்களில் மைக்ரோ சொப்ட் பிரதானமானதாகும். மைக்ரோ சொப்ட் இற்கு மாற்றான மென்பொருட்களை எந்த நாடாவது பயன்படுத்த முற்பட்டால் அமரிக்க அரசு நேரடியாகத் தலையிட்டு அழுத்தங்களை வழங்கும். ஆரஜன்டீனா என்ற நாட்டில் மைக்ரோ சொப்டிற்கு மாற்றான திட்டடம் உருவாக்கப்பட்ட போது அமரிக்க அரசு நேரடியாகத் தலையிட்டது. தமிழ் நாட்டில் இலவசக் கணணித் திட்டத்தை லினுக்ஸ் என்ற மென்பொருள் இயக்கியுடன் ஆரம்பித்த போது கில்லாரி கிளிங்டனை அமரிக்க அரசு அனுப்பி வைத்தது.
இவ்வாறான நூற்றுக்கணக்கான உதாரணங்களைக் காணமுடியும். அமரிக்க அரசினதும் அதனை வழி நடத்தும் பல்தேசிய நிறுவனங்களதும் பொருளாதாரப் பயங்கரவாதம் உலகில் அடிமைகளை உருவாக்குவதற்குத் துணைசெல்கின்றது.
யுத்தங்களின் பின்னணியில் மைக்ரோ சொப்ட் போன்ற பல்தேசிய நிறுவனங்களில் இலாப வெறியை பொதிந்திருப்பதைக் காணலாம்.
இந்த நிலையில் ‘அதி உத்தம மகிந்த ராஜபக்சவினதும்’ அவரது அரசாங்கத்தினதும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான நடவடிக்கைகளால் தான் பூரிப்படைந்துள்ளதாக மைக்ரோ சொப்டின் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவைப் போன்று அவரது தேசமும் மகத்தான வளர்ச்சி பெறும் என்கிறார் பில்கேட்ஸ்.
இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டு சில மாதங்களுக்குள்ளாக வெளியிடப்பட்ட பில்கேட்சின் இச் செய்தி வெறுமனே வியாபாரம் என்பதற்கு அப்பால் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அமரிக்க அரசும் அதன் நிறுவனங்களும் வன்னிப் படுகொலைகளை தமது பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்காகவே திட்டமிட்டன என்பதை பில்கேட்சின் செய்தி சொல்கின்றது.
கடந்தவாரம் அமரிக்காவில் நடைபெற்ற ஐ.எம்.எப் இன் கலந்துரையாடல் ஒன்றில் தெற்காசியாவில் மலேரியாவை அழித்த நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது என்று மீண்டும் பில் கேட்ஸ் பெருமைப்பட்டுக்கொண்டார்.
அமரிக்க அரசு ராஜபக்சவைத் தண்டித்து இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் என்று தமிழ் மக்களை நம்பக் கோரும் தலைவர்கள் தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

http://www.microsoft.com/srilanka/MessageFromBillGates.aspx

Exit mobile version