Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிமுக 171 வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழகம் முழுக்க தொண்டர்கள் போராட்டம்!

171 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பல தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கு தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 3 அமைச்சர்களைத் தவிற மற்ற அனைவரும் ஏற்கனவே போட்டியிட்டு அமைச்சர்களாக இருப்பவர்கள். கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான அதிமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த முறை போட்டியிட்ட அதெ தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.


தற்போதைய அமைச்சர்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், வளர்மதி, கதர் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகிய மூவரும் பட்டியலில் இடம்பெறவில்லை. முஸ்லீம் அமைச்சரான நிலோப்ஃபர் கபிலின் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அவர் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் என்று கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், செம்மலை, அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.பா.ம.கவுக்கு 23 தொகுதிகளும் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இன்றும் 14 தொகுதிகள் மீதமுள்ளன.
தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியில் நிலை என்ன என்று தெரியவில்லை. எஞ்சியுள்ள 14 தொகுதிகளையும் பெற்று தாமக போட்டியிடுமா அல்லது அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு எதிராக கோவை தெற்கு, பல்லடம், கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், உட்பட பல பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தொகுதிகளில் இப்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நிராகரித்து விட்டு கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்கியதைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆனால் அதே நேரம் திமுகவிலும் அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்று திமுக தொண்டர்களும் போராட்டம் நடத்தினார்கள்.

Exit mobile version