Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது ஏன்?

நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக வெற்றி பெற்று. எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரும் ஆனார். ஆனால் அதன் பின்னர் விஜயகாந்துக்கும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாக 2016-சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெப்பாசிட் இழந்தது.

தேமுதிக தனித்து போட்டியிட்டு 10% வாக்கு வங்கியைப் பெற்று வளர்ந்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்தது முதல் அதன் சரிவு துவங்கியது. இன்னொரு பக்கம் விஜயகாந்தின் உடல் நலக்குறைவும் தேமுதிகவை அரசியல் களத்தில் பலவீனமாக்கியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, என அனைத்துக் கட்சிகளும் தோல்வியடைய காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது.

இந்நிலையில் இப்போது நடைபெற இருக்கும் சட்டதேர்தல் தொகுதி உடன்பாட்டில் அதிமுக தேமுதிகவுக்கு துவக்கம் முதலே உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. முதன் முதலாக பாட்டளி மக்கள் கட்சிக்கு மட்டுமே அதிமுக அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதற்கு 23 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்த அதிமுக வன்னியர் இட ஒதுக்கீட்டையும் பிரித்துக் கொடுத்தது. அடுத்து பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக தேமுதிகவுக்கு வெறும் 13 முதல் 15 தொகுதிகளை மட்டுமே கொடுப்பதாகச் சொன்னது.

40 தொகுதிகள் வேண்டும் என்று கேட்ட தேமுதிக தங்களை பாமகவை விட கீழாக நடத்த வேண்டாம் என்றும். பாமகவை விட தமிழகம் முழுக்க பரவலாக வாக்கு வங்கியைக் கொண்ட கட்சி தேமுதிக என்றும் கூறியதோடு தங்களுக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்று இறங்கியும் வந்தது. ஆனால், 13 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக கூறியதால். தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சயின் செல்வாக்கு மண்டலங்கள் ஆன வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கும் செல்வாக்கு உள்ளது. வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

Exit mobile version