Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிமுகவில் இருந்து அன்றாடம் விலகும் முக்கிய பிரமுகர்கள்!

தமிழகத்தில் நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது. இந்த தேர்தலில் தோற்றால் ஸ்டாலின் தன் புதிய தலைமையின் கீழான திமுகவை தக்க வைப்பதில் பல சிரமங்கள் ஏற்படும் என்பதால் எப்படியும் வென்றே ஆக வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறது திமுக.

இன்னொரு பக்கம் அதிமுக இன்னும் அதிக சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் அதிமுக மூன்று அணிகளாக இப்போதும் பிளவு பட்டுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் ஒரு அணியும், தினகரன் தலைமையின் கீழ் ஒரு அணியுமாக செயல்படுகிறார்கள். இதில்  ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து இருந்தாலும்  தனித் தனியேதான் பணி செய்கிறார்கள். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் வென்று காட்ட வேண்டும் என நினைக்கிறார். வென்றால்தான் அதிமுக என்ற கட்டமைப்பு தன் கைக்கு வரும் என நினைக்கிறார். தினகரனோ அதிமுக தோற்றால்தான் அதிமுகவைக் கைப்பற்ற முடியும் என நினைக்கிறார்.  ஓபன்னீர்செல்வமோ தனது ஆதரவாளர்கள்  வென்றால் தனது எதிர்காலத்திற்கு நல்லது என நினைக்கிறார்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுக்க அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகப் பணி செய்து வருகிறார்கள். தன் ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி  சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கொடுக்கவில்லை. இந்நிலையில் பலரும்  கட்சிக்கு எதிராக வேலை செய்வதால் அன்றாடம் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் எம்.எல்.ஏ. வட சென்னை (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்கள். நேற்று ஒரே நாளில் 13 பேர் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.வி.ரஞ்சித்குமார், முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் என்.எஸ்.வாசன், மணிகண்டன், ராமராஜ் பாண்டியன், வேல்முருகன் ஆகியோரும் கட்சியில் இருந்து கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

 வடசென்னை தெற்கு (மேற்கு)மாவட்டம் பி.எஸ்.பழனி, கே.சகுந்தலா,தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் ஸ்டார் எம்.குணசேகரன், இ.பாவண்ணன், ஈரோடு புறநகர் மாவட்டம் வி.எஸ்.சரவணபவா, திருப்பூர் புறநகர் கிழக்குமாவட்டம் கே.ஏ.காஜாமைதீன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் யுஜிகே சற்குணசாமி, கவிதா சிதம்பரநாதன், பி.சிதம்பரநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் எம்.திருநாவுக்கரசு, வெங்கட்ராமன், திருச்சி மாநகர் மாவட்டம் ஆர்.கே.விக்னேஷ், ஆர்.ஞானசேகர் ஆகியோர் நீக்கப்பட்டார்கள்.

இன்று  அறந்தாங்கி எம்.எல்.ஏ  ரத்தினசாபாபதி நீக்கப்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.முன்னாள் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் என பலரும் நீக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய அதிமுக பிரமுகர்கள் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக பேசி வருவதால் இந்த தேர்தலின் அதன் வெற்றியை அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு கடும் பின்னடைவை உருவாக்கும் என தெரிகிறது.

Exit mobile version