பீஜிங்:சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, முதன்முறையாக பொதுமக்களுடன் ஆன்-லைனில் கலந்துரையாடி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.ஹூ ஜிண்டாவோ, கடந்த 2003ல் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை ஆன்-லைன் மூலமாக பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடியது இல்லை. சீனாவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆன்-லைன் மூலம் கலந்துரையாடியுள்ளனர்.
குறைந்த நேரமே நடந்த, இந்த உரையாடலின்போது சிக்கலான கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அவர் தவிர்த்தார். அப்போது அவர் பேசுகையில், “உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்திகளை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இதுவரை ஆன்-லைனை பயன்படுத்தி வந்தேன். நண்பர்களும், அதிகாரிகளும் ஆன்-லைனில் உரையாடுவதை பார்த்து, நாமும் அதுபோல் செய்து பார்ப்போமே என்ற ஆவல் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய அளவில் இந்த உரையாடல் இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, “இணைய தள வசதி குறித்து என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் அதை விரும்புகிறீர்களா’ என்பது தொடர்பான கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டன.சீன அதிபர் ஆன்-லைனில் பொதுமக்களுடன் கலந்துரையாடியது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.