Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிபர் புஷ் மீது செருப்பு எறிந்தவர் தடுப்புக் காவலில் துன்புறுத்தப்பட்டாரா?

16.12.2008.

அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் மீது செய்தியாளர் சந்திப்பின்போது காலணிகளை வீசிய முன்தசார் அல் சைதி என்கிற செய்தியாளர் ராணுவத்தின் காவலில் இருப்பதாக வெளியான செய்திகளை இராக்கிய ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி மறுத்திருக்கிறார்.

அதேசமயம் அந்த செய்தியாளர் எங்கு இருக்கிறார் என்பதை சொல்ல அவர் மறுத்துவிட்டார்.

சைதி நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும், அவரை சந்திக்க தமக்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும், இராக்கிய செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அதேசமயம் சைதியின கைகள், விலா எலும்புகள் முறிக்கப்பட்டதாகவும், அவரின் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் சைதியின் சகோதரர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தமது சகோதரர் அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

BBC.

Exit mobile version