Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிக தொகுதிகள் கிடைக்காததால் தேர்தலைப் புறக்கணிக்கும் வைகோ

கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர அதிமுக மறுத்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள மதிமுக, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது. அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது.அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தருகிறோம் என்றது.

இதனால் அதிருப்தியடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்தார்.

இதையடுத்து மதிமுகவை கூட்டணியில் சேர்க்காமல் அதிமுக தொகுதிகளை அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கூட்டணிக்கட்சியினர் மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து நேற்று அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், வைகோவை நேரில் சந்தித்து, 12 சீட் தருவதாக கூறினர்.

ஆனால் அதை ஏற்க வைகோ மறுத்துவிட்டார்.

இதனையடுத்து நள்ளிரவு தாண்டியும் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த வைகோ, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்தார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை என்றும்,21 தொகுதிகள் கேட்ட நிலையில் 12 தருவதாக அதிமுக கூறியதால் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version