உரிமைப் பிரச்சினைக்காக தமிழர்கள் ஆயுதமேந்தவில்லை எனவும், அதிகார மோகம் காரணமாக ஆயுதமேந்தியதாகவும் ஜாதிக ஹெல உறுமய கொழும்பு மாவட்ட வேட்பாளரும், சுற்றாடல் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாத கோரிக்கைகள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜன சபா மற்றும் கிராம சேவகர் பிரிவு ஆகிய அலகுகளின் ஊடாக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டு, அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதாரம் பிரேசில் ரஷ்யா இந்தியா சீனா ஆகியவற்றின் கூட்டமைப்பை (BRIC) நோக்கி மாறிவருகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமரிக்காவையும் வலுப்படுத்துவது குறித்துப் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.