‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கடந்த கால அரசியல் தலைவர்களை போல செயற்படாமல் அதிகாரப்பகிர்வு என்ற இடத்தில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் வரலாறு காணாத போராட்டத்தினை அரசு சந்திக்க நேரிடும் என தேசிய பிக்கு முண்ணனி எச்சரித்துள்ளது.
நேற்று புதன்கிழமை கொழும்பு குணசிங்கபுர பூர்வாராம விகாரையில் நடைபெற்ற தேசிய பிக்கு முன்னணியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர் அமில தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தமிழீழத்தை சட்டபூர்வமாக வழங்குவதாக இருந்தால் புலிகளை ஏன் அழிக்க வேண்டும்?, இராணுவ வீரர்களை யுத்தத்திற்கு பலியாக்காமலே பிரபாகரனிடம் தமிழீழத்தை கையளித்திருக்கலாம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் வாயே திறக்காத அரசியல் கட்சிகளை பயன்படுத்தி அவற்றுடன் கூட்டமைப்பு வைத்து கோமாளித்தனமான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ.
தற்போது அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியின் மௌனம பல சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது. தமிழர்களின் உண்மையான பிரச்சினையை ஜனாதிபதி இணம்கண்டுள்ளாரா? அப்படியானால் அதற்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பில் தனது மௌனத்தை கலைத்து விட்டு, அதனை வெளிப்படுத்த வேண்டும். நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிவிட்டு அரசாங்கம் செயற்பட நினைத்தால் தேசிய பிக்கு முன்னணியின் போராட்டத்தினால் ஆட்சியை விட்டு அரசாங்கம் ஓட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.