காணி போலிஸ் அதிகாரங்களை வட மாகண சபைக்கு வழங்கக்கூடாது எனதேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதிகாரங்களை கோருவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வன்னியில் இனப்படுகொலையை நடத்திவிட்டு இன்றும் பல்வேறு வடிவங்களில் அதனையே நடத்திக்கொண்டிருக்கும் இலங்கை அரசை மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கோராத இலங்கையின் மேட்டுக்குட்டி போலி இடது சாரி வாசுதேவ நாணயக்கார. மக்களை பாசிச அரசு நம்புமாறு நடந்துகொள்ளுமாறு கூறி ஒரு மக்கள் கூட்டத்தையே பயங்கரவாதியாக்கிறார் வாசுதேவ நாணயக்கார என்ற அப்பட்டமான பிழைப்புவாதி. இவை அனைத்துக்கும் மேலாக வாசுதேவ நாணயக்காரவுடன் வர்க்க உடன்பாட்டிற்கு வரக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேட்டுக்குடித் தலைவர்களும் அரசாங்கத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தப் போகிறோம் பேர்வழிகள் என்று நாளை துணைக்குழுவாக மாறினாலும் வியப்படைவதற்கில்லை.