மீள்குடியேற்றப் பணிகளில் உலக சாதனையைப் புரிந்து விட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போரளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு சிறந்த வாழ்க்கையொன்றைப் பெற உதவி வருவதாகவும் அமைச்சர்கள் பல இடங்களிலும் பேசி வருகின்றார்கள்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து கேட்ட போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் சுதந்திரமாக நடமாட முடியும் என்றும் இவர்களுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர பல தடவைகள் தெரிவித்திருந்தார். ஆயினும் யாழ்.நகரில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் இராணுவ முகாம்களில் கைச்சாத்திட வேண்டும் என இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு புறம் ‘வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை” என தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பென்கமுவ நாலக தேரர் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த போதே தேசப்பற்றுள்ள தேரர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மட்டக்களப்பிறகும், திருகோணமலைக்கும், யாழ். பொன்னாலைப் பகுதிக்கும் தான் சென்று வந்ததாகக் கூறியுள்ள தேரர் அங்குள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றில்லை என அம்மக்கள் கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.
பேரினவாத அரசியல் வியாபாரம் காரணமாக மக்கள் கருத்துக்களை செவிமடுக்க முடியாத நிலையில் இனவாத சிங்கள தலைவர்கள் பலர் இருந்து வருவதை இதன் மூலம் அறிய முடிகிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அவா கொண்டிருந்ததாக இனங்காட்டிய பலர் இப்போது இனப்பிரச்சினை என்ற ஒன்று இருந்ததே இல்லை எனக்கூறத் தொடங்கியிருக்கிறதனையும் அவதானிக்க முடிகிறது. புலிகளை வீழ்த்திய பெருமித உணர்வில் வாழும் சிங்கள தலைவர்கள் பலரும் தமிழர்களின் இனரீதியான அடையாளத்தினை – எழுச்சியை இல்லாதொழிக்க இதுவே தக்க தருணம் எனக்கருதிவருகிறார்கள்.
இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு இராணுவம் அனுமதி மறுத்த பல சம்வங்கள் இடம்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் தமிழில் தேசிய கீதத்தைப் பாட ஆரம்பித்த போது அங்கிருந்த இராணுவத்தினர் அதனை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களுக்கு கட்டளை இட்டுள்ளனர். சிங்கள மொழி மூலமான தேசிய கீதத்தை கசற் மூலம் ஒலிக்கவும் செய்துள்ளனர்.
இதற்கிடையில் பூநகரியில் தனிமையில் வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயாரொருவரை கடந்த சனிக்கிழமை இரண்டு இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ள செய்தி வெளிவந்துள்ளது.
மேலும் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் மடத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் தங்கியுள்ள படையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூநகரி 4ம் கட்டை விக்னேஸ்வரா வித்தியாலயம் தொடர்ந்தும் இராணுவ முகாமாக இயங்கி வருவதனால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பூநகரி மகாவித்தியாலயத்திற்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை பூநகரி – இரணைமடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் தாக்கியிருப்பதுடன், அவர்கள் பிடித்து வைத்திருந்த 400 கிலோ மீனையும் பறித்துச் சென்றதாகவும், பச்சை மீனை உண்ணச் செய்து முழந்தாளிட்டு வைத்திருத்தாகவும் தெரிவிக்கபடுகிறது. இந்தச் சம்பத்தையடுத்து கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இச்செய்திகள் வட-கிழக்கு தொடர்ந்தும் இராணுவ ஆட்சியதிகாரத்தின் கீழ் ஆளப்பட்டு வருகிறது என்பதனையும் இதனால் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலை இருந்து வருவதனையும் அதற்கு மேலாக இராணுவ அடக்குமுறைகள் தொடர்கின்ற நிலையினையும் அறிந்து கொள்ள முடிகிறது. வட-கிழக்கில் மக்கள் எவ்வாறானதொரு சூழலிலே வாழவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
கிழக்கிலும் வன்னியிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் பெளத்த மயமாக்குதலும், இராணுவக் குடியிருப்புக்களும் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன.
நிலைமைகள் இவ்வாறு தொடர்கையில், கடந்த ஆறு நாட்களில் பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக்கருதப்படும் 81 அகதிகளுடன் 7 படகுகள் அவுஸ்திரேலியவைச் சென்றடைந்துள்ளன எனவும் இதையடுத்து இந்த வருடம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த படகு அகதிகளின் எண்ணிக்கை 5547 எனவும் செய்தி வெளிவந்துள்ளது. இவ்வாறு செல்லும் அகதிகளால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கவலை தெரிவித்து வரும் இலங்கை அரசு, இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும் தொடர்ந்தும் அகதிகள் செல்லும் நிலை காணப்பட்டு வருகிறது.
பல வருடங்களாக நிறுவன மயப்பட்ட பேசின வாதத்தின் நச்சு வேர்களுக்கு இலங்கை அரசியல்வாதிகள் திட்டமிட்டு நீர்வார்க்கிறார்கள். ஒரு புறத்தில் உருவாக்கி வளர்க்கப்படும் பேரினவாதத்தை மறு புறத்தில் குறுந்தேசிய வாதத்தினால் எதிர்கொள்ள முடியாது என்பதை முள்ளிவாக்கால் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
மக்களை அமைப்பாக்குவதும், சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதிகளை பலவீனமடையச் செய்யும் வகையில் அங்கிருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை வென்றெடுப்பதும் இன்றைய எமது அரசியல் தேவையாகும். இலங்கையில் வாழ்கின்ற ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களான மலையக மக்கள், மூஸ்லீம் மக்களும் வட கிழக்குத் தமிழர்களைப் போலவே ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்களுடனான பரஸ்பர உடன்பாடும் புரிந்துணர்வும் அவசியமாகிறது.
ஒடுக்கப்படுகின்ற மக்கள் பகுதியினரான தமிழ்ப் பேசும் மக்களைப் போன்றே காஷ்மீரிகளும், பழங்குடிகளும், இன்னும் உலகம் முழுவதும் பெரும்பான்மையாக வாழும் ஜனநாயக சக்திகளும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நாம் நேசக்கரன் நீட்டினால் எம்மை யாரும் இலகுவில் அழித்துவிட முடியாது. நேர்மையான நண்பர்களை அடையளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதும் உலகில் அரசுகளுக்கு அழுத்தம் வழங்கப்பட்டே நாம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதும் நாம் கற்றுக்கொள்ளும் புதிய பாடங்களாகும்.
இலங்கைக்கு வெளியால் வாழ்கின்றவர்கள் இந்த இணைவுகளுக்கு ஆரோக்கியமான பங்களிப்பு வழங்கமுடியும். இலங்கையில் உருவாகின்ற வெகுஜன அமைப்புக்களையும் அவற்றின் அணிதிரள்வையும் தம்மாலான அளவிற்கு ஆதரிக்க வேண்டும். இந்த அடிப்படைகளிலிருந்தே புதிய போராட்டம் வித்திடப்படலாம்.
புலிகளின் அழிவினை தீபாவளியாகக் கொண்டாடவேண்டும் என விடாப்பிடியாக கர்ச்சித்து திரிகிற கூட்டம் இதனை வாசித்தும் மகிழ்ந்திருப்பார்கள். புலிகளின் அழிவிலும்,அதனுடைய எச்சசொச்சங்களினுடைய அழிவிலும், அதிக அக்கறை கொண்டுள்ள அந்த தேசிய முற்போக்குக் கனவான்கள் வானவீதியைக்கடந்து பல்வேறு இடங்களில், விருந்துமண்டபங்களில், கேளிக்கைவிடுதிகளில்,இலங்கை இணக்கப்பாட்டோடு கருத்தரித்துவிட்டது என்று அக்கறையோடு பேசுகிறார்கள்.அவ்ர்கள் தமிழர்களின் நியாயமான பிரச்சனைகளைக் கூட தமது அரசியல்,அல்லது பகை போன்றவற்றால் புறம் தள்ளி நிற்கிறார்கள். உண்மையில்
சிறிலங்கா அரசுக்குரிய பேரினவாத ஆக்கிரமிப்பு இப்போதுதான் ஏற்பட்டதொன்றல்ல.அதன் அடித்தளமானது ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பிற்குப் பிற்பட்ட காலத்திருந்தே படிப்படியாக காலத்திற்குக் காலம் விதைக்கப்பட்டு வந்தது . அப்போதைய மிதவாத தமிழர்தலைமை தங்களின் பொருள்சேர்க்கைகளில் அதிகம் அக்கறைபட்டிருந்தார்களே தவிர தியாக உணர்வுள்ள ஒரு தமிழருக்கான தலமையாகத் தம்மை அடையாளப்படுத்தவில்லை. அக்கால கட்டங்களில் உருவான சிங்கள தொழிலதிபர்களும், ஏற்கனவே சிங்கள மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பண்ணையார்களும் தமது அரசியல், பொருளாதார நலன்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றோருடன் முரண்படுபவர்களாக இருந்தனர். சிங்கள மக்களின் அரசியல் தலைமையாக தம்மை நிறுவிக் கொண்டு, தமிழர் சமூகத்தை எப்போதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றேரை வந்தேறியவர்களாக, சிங்கள மக்களின் எதிரிகளாக, சிங்கள மக்களை சுரண்டுபவர்களாக, சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்களாக அடையாளம் காட்டினர் இன்றைக்கும் அதையே செய்கின்றனர்.
இலட்சியங்களும் தர்மங்களும் உலக அரசியலிருந்தும் உலக மக்களிடமிருந்தும் மெல்லநளுவிக் கொள்ளும் இத் தருணத்தில்யாருடன் யார் சேர்வது என்பது மிகப் பெரிய கேள்வி??????/வலுவுள்ளவனே உண்மையாளனாகவும், போரில் வெல்பவனே புனிதமானவன் நேர்மையாளன் என்பதாகவே இன்றைய உலக ஒழுங்கு.இதில் ஒடுக்கப்படுகின்ற மக்களின் ஏக்கங்கள்,அழுகைகள் அனைத்தும் அர்த்தமற்ற வெறும் கேலியாகவே இருக்கின்றன.
//”மீள்குடியேற்றப் பணிகளில் உலக சாதனையைப் புரிந்து விட்டதாகவும்”// பிந்திய செய்திகளின் படி யாழ் புகையிரத நிலையத்தில் தங்கி இருந்த சிங்களவர்கள் நாவற்குளியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்….. இதுதான் அந்த உலக சாதனை சிங்கள தேசத்தில் எந்த முகாந்திரத்தில் அரச உதவிகளை எதிர்பார்க்கலாம்? வேணும் எண்டால் எலும்புத்துண்டுகள் மட்டும் போடப்படும் அவையும் பொறுக்கித்தின்னும் ௬ட்டத்துக்கு மட்டுமே
புலிகள் செய்த மனித உரிமைமீறல்களைக் கண்டித்த தமிழ்த் தலைவர்கள் பேரினவாத அராஜகங்களைக் கண்டும் காணாதவர்போல் இருக்கின்றனர். அல்லது பெருந்தேசியவாதிகளுக்கு நோகாமல் மென்மையாகச் சிலவற்றைக் கூறுகின்றனர். பிடுங்கி கூறியதைப் போன்று மனிதாபிமானம் என எதுவும் இன்றில்லை. பலம்பொருந்தியவன் செய்வதே நியாயமானது. தொடர்ந்து நாம் ஒரே கொள்கை ஒரே தலைமை என இருக்காது எம்முள் மோதாது பல பக்கங்களாலும் பணிசெய்தாலென்ன? சீனாவுக்கு ஆதரவாகவும் சிலர் பணியாற்றிப் பார்த்தால் என்ன? பெருந்தேசியவாதிகள் போகும் போக்கில் நாமும் போகமுடியாதா?
விடுதலைப் போரை பயங்கரவாதப்போர் என்று கூறி அழிக்க ஒன்றிணைந்து செயல்படும் நாடுகளிற்கு எதிராக , விடுதலைக்காகப் போராடும் இனங்கள் ஏன் தமக்குள் ஒரு இணைவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த வகையில் ஈழத்தமிழினம் , பாலஸ்த்தீனம் , காஸ்மீர் , குர்திஸ் இனம் போன்ற விடுதலைக்காகப் போராடும் இனங்கள் எதிர்காலத்தில் தமக்குள் ஒரு இறுக்கமான இணைவை கொண்டிருத்தல் மிக மிக அவசியாமனது.இல்லையேல்நாம் மீண்டும் மீண்டும் பலமான எதிரிகளால் இலகுவில் அழிகப்படக் கூறிய சாத்தியங்களே தென்படுகின்றன.மீண்டும் மீண்டும் புலிகளை இழுத்துக்கொண்டே இருப்பதை விட்டுவிட்டு , இப்படியான ஒரு முயற்யியை யாராவது செய்வீர்களா..?
அற்புதமான கருத்து.. ஆனால் யாரும் கேட்பதாக இல்லை என்பதுதான் சோகத்துக்குரியது. ஆளாளுக்கு அடிபட்டுக் கொள்வதில் தான் நம் சமூகங்கள் அக்கறை கொண்டிருக்கின்றன. எதிர்காலம் குறித்தோ.. எமது அடுத்த சந்ததி பற்றியோ யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.
முன்பு துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட பலர் இன்று அக்கறையுடன் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். ஆனால் பிரச்சனை கொடுப்பது பிளவுபட்ட புலிகள்தான். புலித்தலைமையொன்று இன்று இல்லை நீங்கள்தான் அதாவது உங்களை போன்றவர்கள்தான் அந்த சக்தியை ஒன்றிணைக்க பாடுபட வேண்டும்.
இலங்கை இராணுவம் விட்டுசென்ற வலிக்கு ஒப்பான வடுவை புலிகளும் விட்டுசென்றனர் என்பதை நீங்கள் உணராதவரை நீங்கள் நேர்மையாக இந்த போராட்டத்தில் இணையமுடியாது. அதேநேரத்தில் அந்த குறைகள் ஏதோ ஆதங்கத்தில் சொல்லப்படுகின்றன என வைத்து கொண்டு உங்கள் கடமையை செய்யுங்கள்.
விடுதலப் புலிகளின் அழிவால் சில விடயங்கள் பேரினவாதிகட்கு எளிதாக இயலுமாகியுள்ளன.
ஆனால் விடுதலிப் புலிகளின் அழிவிற்கு விடுதலைப் புலிகளின் அடிப்படையான தவறுகள் காரணமாய் இருந்த்ததை நாம் மறக்கலாகாது.
முக்கியமாக, மக்கள் என்றுமே போராட்டதில் பங்காளிகளாய் இருக்கவில்லை.
“ஈழம் என்றல் புலிகள்; புலிகள் என்றால் பிரபாகரன்” என்ற அணுகுமுறையின் விளைவுகளை விளங்கிக் கொன்டால் மட்டுமே எதிர்நோக்கியுள்ள முன்னிலும் பாரிய பிரச்சனைகட்குச் சரியாக முகங்கொடுக்க இயலும்.
முதலில் விமர்சனங்களை பகைமையாய் நோக்கும் பழக்கத்தை நாம் விட்டொழிக்க வேண்டும்.
சுயநலமற்ற தலைமை ஒன்றினால் வழிநடத்தப்படும் எல்லோரும் ஒன்றிணைந்த மக்கள் போராட்டத்தின் மூலமே இனிமேல் உலகின் கவனத்தை நம்மை நோக்கி திசைதிருப்பலாம்.
குமார்: “உலகின் கவனம்” நம்மை நோக்கித் திசை திரும்பிப் பட்டது போதாதா?
நமக்கு யாருடைய நட்பும் கவனமும் தேவை என்று நமக்கு இன்னமும் விளங்கவில்லைப் போலுள்ளது.
வன்னியன்: புலிகள் தான் பிரதான போராட்டச் சக்தியாக இருந்தனர்.
கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்பதானால் அவர்களதும் அவர்களது தலைமையினதும் தவறுகள் பற்றிப் பேசாமல் இருக்க இயலுமா?
வலிந்து நிந்திப்போரையும் அரசாங்கதின் கூலிப் படைகளையும் புறக்கணிப்பது நியாயம். எல்லா விமர்சனங்களையுமல்ல.
திரு.கராம்மசால அவெர்களெ….புலிகளும் , தலைவரும் தவறே செய்யவில்லை என்று சொல்லவில்லை…. தவறு செய்கிறார்கள், தவறு செய்கிறார்கள் என்று எல்லாரையும் ஒதுக்கினால்,நாம் யாரைத்தான் ஆதரிப்பது. எல்லா இயக்கமும், இயக்கத்தலைமையும் கொலை செய்தது, கொள்ளை அடித்தது, உள்ளகக்களையெடுப்பைநடத்தியது.ஆனால் புலிகள் எல்லாம் செய்தாலும் தமிழீழம் என்ற இலட்சியத்தை விட்டு அவெர்கள் கடசிவரை விலகவே இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அவெர்கள் எல்லாவற்றையும் ” ஈழம்” என்ற ஒன்றுக்காகவே செய்தார்கள்: எனக்கும் , எல்லா ஈழத்தமிழனுக்கும் ஒரு கனவு,ஒரு இலட்ச்சியம் , ஓர் பேராசை இருந்தது. அது ஈழமே. அந்த ஈழதேசத்துக்காக இதுவரையும் வெற்றிகளை, தங்கள் உயிரைக்கொடுத்து எமக்குத் தந்தபோதுநாம் ஆர்ப்பரித்தோம்,ஆனந்தக்கூத்தாடினோம், சந்தோசப்பட்டோம். ஆனால் அவெர்கள் முதல் முதலாக, முற்று முழுதாகத்தோற்றுவிட்டார்கள் என்ற வுடன், அவெர்களை தூற்றவோ, பழிபோடவோ விரும்பவில்லை. ஏனெனில் புலிகளின் தோல்வியே, தமிழ்மக்களின் தோல்வியும்.புலிகளின் தோல்விக்கு , தமிழ் மக்கள் ஆகியநாமுமே காரணம்.வென்றால் வாழ்த்தும் , தோற்றால் தூற்றும் உலகம் என்ற பதத்துக்குள்நான் வரவே இல்லை.விமர்சிப்பதால் இங்கு தமிழ் மக்கள் ஒரு போதும் திருந்தப்போவதே இல்லை. தமிழ் மக்கள் முதலில், பிரதேசவேறு பாடு , சாதிய வேறு பாடு, சமய வேறு பாடுகளை விடுழிக்க வேண்டும். காட்டிக்கொடுப்புகளையும்,துரோகத்தனங்களையும் தூர எறிய வேண்டும். இவைநடக்காதவரை எந்த விமர்சனங்களும் தமிழ் மக்களை மாற்றப்போவதே இல்லை. அதாவது ” தமிழ் மக்கள் , முதலில் தமிழ் மக்களிடமிருந்துதான் விடுதலை பெற வேண்டும்.அதுநடக்காதவரை தமிழ் மக்களுக்கு எதுவுமேநடக்கப் போவதில்லை. ” சாவினைத் தோழ்மீது தாங்கியே நடந்திட்ட சந்தணப் பேழைகளே…..உங்கள் ஆவி அடங்கிடும் அக்கணநேரத்தில் நீ…. வீர் யாரை நினைத்தீரோ” தமிழ் ஈழம் என்ற இலட்சியத்துக்காக தன்னுயிரை ஈந்த அத்தனை மாவீரர்களுக்கும் ,நாம் வீர வணக்கம் செலுத்துவோம்.எமது ” மாவீரச்” செல்வங்களை மறக்காதுநினைவு கூருவோம் உறவுகளே
“சாவினைத் தோழ்மீது தாங்கியே நடந்திட்ட சந்தணப் பேழைகளே…
உங்கள் ஆவி..” இதே பாடல்களை ரொலே இயக்கப் போராளிகள் அவர்களின் உறவினர்கள் தாய் தகப்பன் 1986-ல் இருந்து இது போலத் தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடினால் உங்களால்
ரசிக்க முடியாதா?
ஆகமொத்தத்தில் தமிழினத்திற்கான போராட்டம் குரங்கின் கை பூமாலை
ஆகிவிட்டது. இனி புதிதாக பூ பறித்து மாலை கட்ட முற்படாதீர்கள்.
வர்கங்களாக பிளவுண்டுடிருக்கிற சமூகத்தில் எல்லோரையும் மக்கள்..
மக்கள் என்று சொல்வது அபத்தம். விவசாயி தொழிலாளி முதாலித்துவ
அரசியல்வாதி அரசுக்காரியாளர்கள் மந்திரிகள் தூதுவர்கள் ஜனாதிபதி
எல்லோரும் மக்களுக்குள் தான் அடங்குவார்கள்.
தமிழ்-மூஸ்லீம்மக்களிக்குள்ளும் சிங்களமக்களுக்குள்ளும் பெரும்
பான்மையினர் உழைப்பாளிகளே! இதில் எந்தயொரு இனமும் எந்த
விசேஷயத் தன்மையும் பெற்றுவிட முடியாது.அப்படி பெற்றிருப்பதாக
நினைத்தால் அது முதாலித்துவ அரசியல்வாதிகளின் முரட்முக் கூத்தே.
தமிழரும் தமிழ் முஸ்லீம்மக்களும் ஏன்?எல்லையோரங்களில் இருக்கிற சிங்கள விவசாயிகளும் கடந்த மூன்றுசகாப்தமாக பெரும்
விலையை கொடுத்துவிட்டார்கள்.ஊனம் அரைப்பையித்தியம் என்ற
நிலைக்கே தள்ளப் பட்டிருக்கிறார்கள்.நான் இங்கு குறிப்பிடுவது இலங்கையில் உழைத்து வாழத்துடித் கொண்டிருக்கிற உழைப்பாளர்களே என்பதை தாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.
மீனவனுக்கு தேவை கடல். விவசாயிக்கு தேவை நிலம். தொழிலாளிக்குதேவை தொழில்சாலை.அரசியல் கைதிக்கு தேவை
விடுதலை. அகதிக்கு தேவை குடியிருக்க வீடு. இந்தமுறையிலேயே
நாம் அரசியலை அணுகமுடியும்.அதுவே நியாயமானதும் கூட.
புலம்பெயர் தமிழரின் எண்ணங்கள் அபிலாஷைகளுக்காக ஈழத்தமிழர்கள் வாழமுடியாது.முடிந்தால் ஈழத்தமிழருக்காக நீங்கள்
வாழப்பழகிக் கொள்ளுங்கள்.அது நியாயமானது அர்த்தமுள்ளது.
இலங்கைஅரசியல் இலங்கையில் தீர்மானிக்கப் படுகிறதில்லை என்பதை
கவனத்தில் எடுங்கள்.இன்று முக்கியமான அரசியல் முடிவுகள் இந்தியா-சீனா அரசுகளாலேயே முடிவெடுக்கப்படுகிறன.இது இருபது
வருடகாலத்தில் மிகப்பெரிய மாற்றமே!. வணிகப்போட்டிகளும் இந்த
போட்டியால் வருகிற தீர்க்கமுடியாத பிரச்சனைகளும் இறுதியில் ஒரு
பரந்த மோதல்-யுத்தத்திற்கே இட்டுச் செல்லும். இதையெல்லாம் கவனத்தில் எடுத்ததால் இலங்கைக்கு “இலங்கை தொழிலார்-விவசாயி” கட்சி அவசியமாகிறது என்பதும் இருக்கக் கூடிய தொழிலாளர் கட்சிகளை இனங்கண்டறியப் படவேண்டுமென்பதும் புலனாகிறது.இது வரலாற்று ரீதியாக இந்தியா- சீனாவிலும் ஏற்பட்டிருக்கும்.இவர்கள் தம்முள் புரிந்துணர்வை ஏற்படுத்தி உழைப்பாளிமக்களை விடுதலை செய்கிற திறவுகோலாக மாற்றி அமைக்கப் படும்.
ஆகவே வரப்போகும் மாவீரர்நாட்களில் குட்டிமுதாலித்துவ சிந்தனை
யாளர்கள் விடுதலை என்ற பெயரில் உழைப்பாளர் அனுபவித்த கொடுமைகளை எண்ணி ஒரு ஐக்கியபட்ட இலங்கையை நோக்கி
முன்னேற ஆவல் கொள்ளுவோம் வன்னியான்.
வன்னியன்,
நான் சொல்லுவதெல்லாம், எல்லா விமர்சனங்களையும் ஒரே விதமாகப் பார்க்கக் கூடாது என்பதைத் தான்.
சில விமர்சனங்கள் கடுமையாக இருப்பினும் நேர்மையானவை.
அவை புலிகளைப் பூரண வில்லன்களக்குகிறவை அல்ல: தவறுகளைக் கொஞ்சம் கடுமையான மொழியில் சுட்டிக் காட்டுகின்றவை.
அதற்கு அவரவரது சொந்த அனுபவங்கள் கூடக் காரணமாக இருக்கலாம்.
வேறு சில, வன்மமான, சுயநல உள்நோக்கமுடையவை. அவற்றை அடையாளங் காண்பது கடினமல்ல.
எல்லாக் கருத்துக்களையும் பொறுமையுடன் கேட்டுப் பயனுள்ளவற்றிலிருந்து படிக்கக் கற்போம்.
நமக்குப் பிடித்தோரைப் பிறர் விமர்சிப்பதை கேட்பது இனிய அனுபவமல்ல.
ஆனால் நாம் தனிமனித விருப்பு வெறுப்புக்கட்கும் அப்பால் நோக்க வேண்டி உள்ளது.
பொய்க் குற்றச்சாட்டுக்களைத் தயங்காது கண்டியுங்கள்.
இது யாரையும் ஒதுக்குவது பற்றிய விடயமல்ல. இன்றைய நிலையில் எங்கே தவறு நடந்தது என்று அறியும் தேவை முக்கியமானதால் பாதகமான பக்கங்கள் வலியுறுத்தப் படுகின்றன.
நீங்கள் சொல்வது போல, புலிகளைத் தூற்றித் தப்பமுனவோர் புனிதர்களல்ல.
எனினும், போற்றுவோரை விட இடித்துரைப்போர் நம்பகமான நண்பர்களாயிருப்பர்.