Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணு மின் உற்பத்தி பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது : ஜப்பானிய தொழில் அமைச்சர்

ஜப்பானிய தொழில் அமைச்சர் புதிய நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

அணு மின் உற்பத்தியை எவ்வளவு விரைவில் முடிவிற்குக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் நிறுத்த வேண்டும் என ஜப்பானிய தொழில் அமைச்சர் தனது நூலில் தெரிவித்துள்ளார். யூக்கியோ எடானோ மேலும் தெரிவிக்கையில், கடந்தவருடம் நடைபெற்ற புகுஷிமா விபத்தின் பின்னர் அணு மின் உற்பத்தி அதிக பணச் செலவாகும் பாதுகாப்பற்ற ஒன்று என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என்றார். மிகவும் சிறந்தது என நம்பியிருந்த அணுசக்தி தொழில் நுட்பம் இலகுவில் இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது எனப் புரிந்துகொண்டோம் என்றார்.

புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளால் பத்தாயித்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து நிரந்தரமாக வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகள் மக்கள் வசிப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலமும் மரங்களும் செடிகளும் கூட அசுத்தமானதாகிவிடது. அந்தப் பகுதியை சுத்தப்படுத்துவதற்கு எதிர்பாராத பெரும் பணம் செலவிடப்பட்டது.

என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கூடங்ககுளத்தில் போராட்டம் தொடர்கிறது. இன்று தூத்துக்குடியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

‘தமிழக அரசே !

கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப்போராடும் மக்கள் மீதான போலீசு ஒடுக்குமுறையை நிறுத்து !
பொய் வழக்குகளை ரத்து செய் ! கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்

மணப்பாடு அந்தோனிராஜ், இடிந்தகரை சகாயராஜ் படுகொலைகளுக்கு காரணமான போலீஸ் மற்றும் கடலோர விமானப்படை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய் !
ஜனநாயக ஆர்வலர்களே, பொது மக்களே !
அணு உலை வேண்டாம் என்று போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை !
போராடும் மக்கள் மீதான அரசு அடக்குமுறையை எதிர்ப்பது நம் ஜனநாயகக் கடமை !
அணி திரள்வீர் !’

என்ற சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.

Exit mobile version