Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணு சோதனை தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் : அணு விற்பனை நாடுகள் நிர்ப்பந்தம்

22.08.2008.

அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இந் தியா கையெழுத்திட வேண் டுமென்று அணு விற்பனை நாடுகளில் சில கட்டாயப் படுத்துகின்றன.

அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடாத நாடுகள் அதில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத் துவதாக அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிர்வாகச் செய லாளர் டைபோர் டோத் கூறியுள்ளார்.

ஆனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட முடியாதென்று இந் நாள் வரை அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறது.

ஆனால் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் முன்னாள் பிரதமர் நேரு வின் கனவு என்று இப் போது மற்ற நாடுகள் இந் தியாவிடம் நினைவூட்டி வருகின்றன. இதையே டோத்தும் கூறுகிறார்.

இந்தியா இப்போதும் மறுப்பதுடன், ஒப்பந் தத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளை அணு வல்லரசுகள் மீறியுள்ளன என்றும், அவற்றின் அணு ஆயுதங்களை நவீனப்படுத் தியும் விரிவாக்கியும் வரு கின்றன என்று கூறுகிறது.

டோத் விடுக்கும் கோரிக் கையை அணு விற்பனை குழும உறுப்பினர்கள் ஆத ரிக்கின்றனர். அணு ஆயுதப் பரவல் குறித்து பல நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அவர்களுடைய அச்சத் திற்கு விடை கிடைக்காமல் இந்தியாவுக்கு ஒப்பந்தத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அவை கூறுகின்றன.

இந்தியா இதில் தெளி வான நிலை எடுத்துள்ள தாகக் கூறப்படுகிறது. இந் தியா அணு ஆயுத சோதனை தடை மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத் திட மறுக்கும். அணு ஆயுத சோதனையுடன் இணைக் கப்பட்டு எரி பொருள் வழங்கும் நிபந்தனைகளை இந்தியா ஏற்காது.

ஏற்க முடியாத நிபந் தனைகள் விதிக்கப்பட் டால் இந்தியா அணு விற் பனை குழுமக் கூட்டத்தி லிருந்து வெளியேறி விடும் என்று ஏற்கெனவே இந் தியா எச்சரித்துள்ளது.

Exit mobile version