Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணு உலை : பிரான்சுடன் இணைந்துகொள்ளும் ஜப்பான்

நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜப்பான் நாட்டு அரசாங்கம் அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவெடுத்தது. ஜேர்மனி மற்றும் சுவிட்சஎலாந்து ஆகிய நாடுகள் புகுஷிமா அழிவுகளின் பின்னர் உற்பத்தியை நிறுத்துவதற்கான முடிவுக்கு வந்தன. அணு மின் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக இந்த வருட ஆரம்பத்தில் ஜப்பானிய அரசின் அறிவிப்பு அந்த நாட்டில் பெரும் போராட்டங்களையும் அரசுக்கு எதிரான அதிர்ப்தியையும் தோற்றுவித்தன. ஜப்பானிய அரசின் புதிய தீர்மானம் மக்களின் வரவேற்பைப்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் 104 , பிரான்ஸ் 58, ஜப்பான் 54, ரஷ்யா 32, தென் கொரியா 20, இந்தியா 19, கனடா 18, ஜெர்மனி 17, சீனா 11, தைவான் ஆறு மற்றும் பாக்கிஸ்தான் இரண்டு அணு மின் நிலையங்கள் உள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் இன்னும் சில ஆண்டுகளில் இவற்றை மூடுவதாக அறிவித்துள்ளன.

புகுஷிமா அழிவின் பின்னர் ஜப்பானிற்கு முன்னதாக அணு ஆலைகளை மூடுவதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் நிறைவேற்றியது.

இந்தியாவில் கூடங்குளத்தில் அணு ஆலைகளை மூடக் கோரிய போராட்டம் தொடர்கிறது.

Exit mobile version