Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணுமின் எதிர்ப்பாளர்கள்  போராட்டம்  இடைமறிக்கப்பட்டது : 146 பேர் கைது

koodankulamதமிழ்நாட்டில் கூடங்குளம் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மூடக்கோரி அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளத்துக்கு அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் முற்றுகை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையொட்டி கன்னியாகுமரி நகரின் முக்கிய சந்திப்புகளிளும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நெல்லை முதல் கன்னியாகுமரி, நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை போலீசார் தீவிர வாகனசோதனையில் ்டுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் ்ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் 100 பேர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு குவிந்தனர். சிறிது தூரத்தில் அங்கிருந்து கூடங்குளம் நோக்கி நடை பயணத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று காந்திமண்டபம் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கொளத்தூர் மணி தலைமையில் 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதில் 36 பெண்கள் உள்பட 146 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரியும் முற்றுகைப்போராட்டத்திற்கு ஆதரவுத்தெரிவித்தும் ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்ன முட்டம், கோவளம், புதுக்கிராமம், வாவத்துறை, மீனவ கிராமங்களை சேர்ந்த கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

Exit mobile version