Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணிவகுப்பு மரியாதை புறக்கணிப்பு உச்சமடையும் மகிந்த – சரத் முரண்பாடு

இது சிங்களவர்களின் தேசம் எனப் பிரகடனப்படுத்தியவரும், மகிந்த அரசுடன் இணைந்து  அப்பாவி மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்த தலைமை அதிகாரிகளில் ஒருவருமான சரத் பொன்சேகாவிற்கும் மகிந்த அரசிற்கும் இடையேயான முரண்பாடு உச்சமடைந்துள்ளது.

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் ஓய்வுபெறும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு இன்று (16) முற்பகல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் முப்படைகளின் தளதிபதிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியொருவர் ஓய்வுபெற்றுச் செல்லும் அணிவகுப்பு மரியாதையின் போது முப்படைகளின் தளதிபதிகள் அதில் கலந்துகொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயமாக இருந்த போதிலும், இன்றைய அணிவகுப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என முப்படைத் தளபதிகளுக்கும் நேற்றிரவு (15) ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று முற்பகல் 9.30 அளவில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்காக 9 மணிக்கு வருமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், நிகழ்விடத்திற்கு ஊடகவியலாளர்கள் முற்பகல் 10 மணிக்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version