
போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் நினைவுதின நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நெருக்கடிக் குழு என்ற தன்னார்வ நிறுவனம் 49 வீதமன பணக் கொடுப்பனவை மேற்கு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட தன்னார்வ நிறுவனங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளின் நிதிக்கொடுப்பனவிலேயே தங்கியிருந்தன.
பெரும் பணச் செலவில் நடத்தப்படும் மாவீரர் தின சடங்கு, மக்களின் இலங்கை அரசுக்கு எதிராகப் போராட்டத்தை வெற்றுச் சடங்காக மாற்றும் நிகழ்வாகும். இலங்கையில் இனச் சுத்திகரிப்பு தீவிரமடையும் நிலையில், வன்னிப் படுகொலைக் காலத்தில் செயற்பட்ட புலம் பெயர் புலி தலைமைகள் வெவ்வேறு பிரிவுகளா மாவீரர் பணச் சடங்கை நடத்துகின்றன.
இலங்கை அரசின் நேரடி ஆதரவாளர்கள் யாழ்ப்பணத்தில் டக்ளஸ் மற்றும் இராணுவக் கோட்டைக்குள் இலக்கியச் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த மாவீரர் தின நிகழ்வு இலங்கை அரசின் மறைமுக ஆதரவாளர்களன அதன் ஏற்பாட்டாளர்களால் யாழ்ப்பாணத்தில் நட்த்தப்பட்டாலும் ஆச்சரியம் அடைவதற்கு இல்லை.
அங்கு, உயிருடன் வாழும் பிரபாகரன் திரும்பிவந்து கேட்டாலே தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்படும் என மகிந்த ராஜபக்ச சொன்னாலும் வியப்படைவதற்கில்லை.