Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடிமை ஒப்பந்த்தம் : எதிர்ப்பு வலுக்கிறது

புதுடில்லி, ஜூலை 12- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை மன்மோகன் சிங் அரசு உட னடியாக கைவிட வேண்டு மென்றும், அதை செயல் படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக சர்வதேச அணுசக்தி முகமை உடனான அணு வர்த்தக பாதுகாப்பு விதிகள் ஒப்பந்தத்தை மேற்கொள் ளக்கூடாது என்றும், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்க புஷ் நிர்வா கத்தின் கட்டளையை ஏற்று, அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்றுவ தற்காக மன்மோகன் சிங் அரசு தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. இந்த உடன்பாடு நாட்டுக்கு நல் லதுதான் என்று மக்களி டையே கருத்துக்களைப் பரப்புமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி அறிவுரை கூறியுள் ளார். இந்நிலையில், இடது சாரிக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மக்கள வையில் பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டிய கட்டா யத்தில் மன்மோகன் சிங் அரசு உள்ளது. அதனால் ஜூலை 22-ம்தேதி மக்கள வையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெறுகிறது. இந்தச் சூழலில், அணு சக்தி உடன்பாடு எந்தெந்த விதங்களில் நாட்டின் நலன் களுக்கும், பாதுகாப்புக்கும் எதிரானது என்பதை இடது சாரிக் கட்சிகள் பகிரங்க மாக தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் இந்த உடன் பாட்டிற்கு எதிரான பிரச் சாரத்தை இடதுசாரிக் கட் சிகள் தீவிரப்படுத்தி யுள் ளன. மாணவர்-இளைஞர்கள் ஆவேசம் அணுசக்தி உடன்பாடு என்ற பெயரில் அமெரிக் காவுடனான அடிமைச் சாசனத்தை ஏற்க முடியாது எனக் கூறி, நாடு முழுவதும் மாணவர்களும், இளை ஞர்களும் கிளர்ச்சிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். டில்லி, சென்னை, திருவ னந்தபுரம், அகர்தலா உட் பட நாட்டின் பல்வேறு பகு திகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் மன் மோகன் சிங் உருவ பொம்மை எரிப்பு உள் ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஜூலை 21-ம் தேதி நாடாளுமன்றக் கூட் டம் துவங்கும்போது இந்திய மாணவர் சங்கம் நாடாளு மன்றம் நோக்கி மாபெரும் மாணவர் பேரணியை நடத் துகிறது. இத்தகவலை சங்கத் தின் பொதுச்செயலாளர் கே.கே. ராகேஷ் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் முழுவதும் இந்த உடன் பாட்டிற்கு எதிராக பெரும் பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்று வருகின்றன. திரிபுராவில் ஜூலை 14-ம்தேதி மாநிலந் தழுவிய மிகப்பெரும் பேரணிகள் நடைபெறும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திரிபுரா மாநிலக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் இடது சாரிக் கட்சிகள் அணுசக்தி உடன்பாட்டை எதிர்த்து பிரச் சாரத்தை துவக்கியுள்ளன. ஜெயலலிதா, மாயாவதி எதிர்ப்பு அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்து வதில் மன்மோகன் சிங் அரசு தனிமைப்பட்டு நிற்கி றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிர காஷ் காரத் ஏற்கெனவே கூறியிருந்தார். அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட் டணி கட்சிகள் தவிர, கிட் டத்தட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் அணுசக்தி உடன்பாட்டிற்கு எதிராக நிற்பது உறுதியாகியுள்ளது. சனிக்கிழமையன்று அதி முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அணுசக்தி உடன்பாட்டை செயல் படுத்துவதை மன்மோகன் சிங் அரசு கைவிட வேண்டு மென்று வலியுறுத்தியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச முதலமைச்சருமான மாயாவதி, அணுசக்தி ஒப் பந்தத்தை எதிர்ப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ், தன்னை வேட்டையாட முயற்சிக்கிறது என்றும் குற் றம் சாட்டியுள்ளார். ஜூலை 16ல் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்த முனையும் மன்மோகன் சிங் அரசைக் கண்டித்தும், நாட்டு மக்களின் வாழ்வில் கொடும் தாக்குதலை நடத்தி வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் ஜூலை 16 புதனன்று மாலை 6 மணிக்கு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னை அமைந்த கரையில் உள்ள புல்லாரெட்டி அவின்யூவில் நடை பெறும் இப்பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ தேசிய செயலாளர் து.ராஜா எம்.பி., பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பார்வர்டு பிளாக் மாநில அமைப்பாளர் பி.வி.கதிரவன் மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர். மன்மோகன் சிங் அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது அடிமை உடன்பாட்டை கைவிடு! புதுடில்லி, ஜூலை 12- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை மன்மோகன் சிங் அரசு உட னடியாக கைவிட வேண்டு மென்றும், அதை செயல் படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக சர்வதேச அணுசக்தி முகமை உடனான அணு வர்த்தக பாதுகாப்பு விதிகள் ஒப்பந்தத்தை மேற்கொள் ளக்கூடாது என்றும், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்க புஷ் நிர்வா கத்தின் கட்டளையை ஏற்று, அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்றுவ தற்காக மன்மோகன் சிங் அரசு தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. இந்த உடன்பாடு நாட்டுக்கு நல் லதுதான் என்று மக்களி டையே கருத்துக்களைப் பரப்புமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி அறிவுரை கூறியுள் ளார். இந்நிலையில், இடது சாரிக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மக்கள வையில் பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டிய கட்டா யத்தில் மன்மோகன் சிங் அரசு உள்ளது. அதனால் ஜூலை 22-ம்தேதி மக்கள வையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெறுகிறது. இந்தச் சூழலில், அணு சக்தி உடன்பாடு எந்தெந்த விதங்களில் நாட்டின் நலன் களுக்கும், பாதுகாப்புக்கும் எதிரானது என்பதை இடது சாரிக் கட்சிகள் பகிரங்க மாக தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் இந்த உடன் பாட்டிற்கு எதிரான பிரச் சாரத்தை இடதுசாரிக் கட் சிகள் தீவிரப்படுத்தி யுள் ளன. மாணவர்-இளைஞர்கள் ஆவேசம் அணுசக்தி உடன்பாடு என்ற பெயரில் அமெரிக் காவுடனான அடிமைச் சாசனத்தை ஏற்க முடியாது எனக் கூறி, நாடு முழுவதும் மாணவர்களும், இளை ஞர்களும் கிளர்ச்சிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். டில்லி, சென்னை, திருவ னந்தபுரம், அகர்தலா உட் பட நாட்டின் பல்வேறு பகு திகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் மன் மோகன் சிங் உருவ பொம்மை எரிப்பு உள் ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஜூலை 21-ம் தேதி நாடாளுமன்றக் கூட் டம் துவங்கும்போது இந்திய மாணவர் சங்கம் நாடாளு மன்றம் நோக்கி மாபெரும் மாணவர் பேரணியை நடத் துகிறது. இத்தகவலை சங்கத் தின் பொதுச்செயலாளர் கே.கே. ராகேஷ் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் முழுவதும் இந்த உடன் பாட்டிற்கு எதிராக பெரும் பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்று வருகின்றன. திரிபுராவில் ஜூலை 14-ம்தேதி மாநிலந் தழுவிய மிகப்பெரும் பேரணிகள் நடைபெறும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திரிபுரா மாநிலக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் இடது சாரிக் கட்சிகள் அணுசக்தி உடன்பாட்டை எதிர்த்து பிரச் சாரத்தை துவக்கியுள்ளன. ஜெயலலிதா, மாயாவதி எதிர்ப்பு அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்து வதில் மன்மோகன் சிங் அரசு தனிமைப்பட்டு நிற்கி றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிர காஷ் காரத் ஏற்கெனவே கூறியிருந்தார். அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட் டணி கட்சிகள் தவிர, கிட் டத்தட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் அணுசக்தி உடன்பாட்டிற்கு எதிராக நிற்பது உறுதியாகியுள்ளது. சனிக்கிழமையன்று அதி முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், அணுசக்தி உடன்பாட்டை செயல் படுத்துவதை மன்மோகன் சிங் அரசு கைவிட வேண்டு மென்று வலியுறுத்தியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச முதலமைச்சருமான மாயாவதி, அணுசக்தி ஒப் பந்தத்தை எதிர்ப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ், தன்னை வேட்டையாட முயற்சிக்கிறது என்றும் குற் றம் சாட்டியுள்ளார். ஜூலை 16ல் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்த முனையும் மன்மோகன் சிங் அரசைக் கண்டித்தும், நாட்டு மக்களின் வாழ்வில் கொடும் தாக்குதலை நடத்தி வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் ஜூலை 16 புதனன்று மாலை 6 மணிக்கு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னை அமைந்த கரையில் உள்ள புல்லாரெட்டி அவின்யூவில் நடை பெறும் இப்பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சிபிஐ தேசிய செயலாளர் து.ராஜா எம்.பி., பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பார்வர்டு பிளாக் மாநில அமைப்பாளர் பி.வி.கதிரவன் மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.

Exit mobile version