Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடித்து இழுத்து கைது செய்யச் சொன்னதும் கருணாநிதிதானா?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துக்களுக்கு எதிராகப் போராடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களை தமிழக முதல்வர் கருணாநிதி கலவரங்களை தூண்டுகிறார்கள் என்றும் அமைதியைக் கெடுக்கிறார்கள் என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். சதிப் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக போராடும் சக்திகளை கலவரக் காரர்கள் என்று சொல்லி ஆதிக்கசாதிகளை அவர்களுக்கு எதிராக கருணாநிதி திருப்பும் நிலையில் வேலூரில் வியாழனன்று செய்தியாளர்க ளிடம் பேசிய அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள் ளதாக தமிழக அரசின் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன் னணியும் தொடர்ந்து போராடி வரு கிறது.அதன் ஒரு பகுதியாகத்தான் உத்த புரத்தில் நிலவும் தீண்டாமைக் கொடு மையை ஒழித் திட போராடி வருகிறோம். மதுரையில் நடந்த மறியல் போராட் டத்தின் போது காவல்துறையினர் ஒரு எம்பி என்றும் பாராமல் அடக்கு முறையை கையாண்டுள் ளனர். இது கண் டிக்கத்தக்கது.உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பிரச்சனையை தூண்டி விடுகிறது என்று முதலமைச்சர் கூறி யிருப் பது முற்றிலும் தவறு. கடந்த ஒரு வருட மாக இதுகுறித்து பல முறை ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. தலித் மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமையை சகித்துக் கொண்டிருப்பதுதான் அமை தியா? அதை எதிர்த்து போராடுவது அமை திக்கு குந்தகமா? உத்தப்புரத்தில் மறியல் செய்தபோது கைது செய்தவர்களை, மாலையில் விடுதலை செய்ய சொன்னது நான்தான் என்று தமிழக முதல்வர் கூறுகிறார். அப்படியென்றால் காலையில், அடித்து இழுத்து கைது செய்ய சொன்னதும் முதல மைச்சர் தானா?சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு வாசலை அடைத்திருப்பதோடு நீதிமன்ற தீர்ப்புப்படி கட்டுமானப்பணிகள் நடை பெறவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அங்கு செய்ய வேண்டியது கட்டுமானப்பணி அல்ல. அந்தச் சுவரை இடிப்பதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version