மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையகதாகக்ருதப்பட்ட அஜ்மல் கசாப்பின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அஜ்மல்கசாப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டணையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். கசாப்பிற்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, மும்பை நீதிமன்றம் 2011ல் உறுதி செய்தது.அஜ்மல் கசாப்பின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையடுத்து, கசாப்பின் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் தாக்குதல் சம்பவம் நடந்த நவம்பர் 26ம் தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பாகவே நான் மும்பைக்கு முறையான விசா மூலம் வந்து விட்டேன். சினிமாவில் சேர்ந்து பணியாற்றவே நான் மும்பைக்கு வந்தேன். ஆனால் நவம்பர் 25ம் தேதி என்னைக் கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் சேர்த்து விட்டனர்.என்னை சித்திரவதை செய்து போலீஸ் தரப்பில் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கினர். பத்வார் பார்க் பகுதியில் நாங்கள் ஒரு படகில் வந்திறங்கியதாக கூறுவதிலும் உண்மை இல்லை.என்று கசாப் தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.