பேராயர் சிகேரா மிக விரைவில் இலங்கையை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் முதல் கட்டமாக தனக்குப் பதிலாக வேறொருவரை பேராயராக நியமிக்கும் படி அவர் இங்கிலாந்து திருச்சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் அண்மையில் சாட்சியமளித்த அவர்> அதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதன் காரணமாக கடும் சீற்றமடைந்துள்ள பாதுகாப்புச் செயலாளர் தனது இரகசியப் படைப் பிரிவு அதிகாரிகள் மூலமாக பேராயர் சிகேராவைக் கடத்திக் கொல்லப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
அவ்வாறான அச்சுறுத்தல் நிலையில் தொடர்ந்தும் நாட்டில் இருப்பது உசிதமல்லவென்பதாலும்> இலங்கையின் இன்றைய நிலைமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் காரணமாகவும் அவர் மிக விரைவில் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது