அசாமின் போடோலாண்டு பிரதேச குழு நிர்வகித்து வரும் மாவட்டங்களில் பழங்க்குடியின மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்டது. குறிப்பாக கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் கலவரம் தொடர்ந்து நீடித்து வருவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கலவரத்தில் ஈடுபட முயற்சிப்பவர்களை சுடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு மற்றும் வர்த்தக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 5 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 21 பேர் உயிரிழந்துள்ளதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுபான்மையினத்தவர் மீது பழங்குடியினத்தவர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து அஸாமில் சிறுபான்மை மாணவர்கள் அமைப்பு விடுத்த வேலை நிறுத்த போராட்டத்தின் போதும் கலவரம் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தவிர, நேற்று 23.07.2012 அன்று கிழக்கு அசாமில் மாவோயிஸ்டுக்களின் மறைவிடம் ஒன்றைக் கயகப்படுத்தி எம் 16 வகை துப்பாக்கிகள், ரொக்கட் லோஞ்சர் மற்றும் துப்பாக்கி ரவைகளைக் கைப்பற்றியுள்ளதாக பொலீஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாக அசாம் மாநிலமும் மாவோயிஸ்டுக்களின் பிடியில் சிக்கியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவித்துவந்தன. ஆக, அசாம் கலவரம் என்பது இந்திய அரசால் தூண்டிவிடப்பட்ட மற்றொரு அழிப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என பரவலான சந்தேகங்கள் எழுந்துள்ளன.