Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அசாமில் ஒரு பகுதிப் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் – பேச்சுவார்த்தை தொடர்கிறது

அசாமைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் அல்லது அசாமிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத்தான் போராட்ட அமைப்புகள் அசாமில் கடந்த பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திற்குப் பின்னான காலப்பகுதி முழுவதும் இந்திய இராணுவம் அசாமியர்கள் மீது இராணுவ வன்முறையைப் பிரயோகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசுடன் அசாமில் போராடும் 9 போராட்ட அமைப்புக்களும் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் போராட்டங்களை நடத்திவந்தன. யுத்த நிறுத்ததின் அடையாளமாக 700 போராளிகள் பா.சிதம்பரம் முன்நிலையில் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.பேச்சு வார்த்தை தொடர்கிறது. முன்னரும் பல தடைவைகள் இவ்வாறாப பேச்சுக்கள் நடைபெற்றன.

Exit mobile version