அசாத் சாலி உயிரிழந்தால் அதன் முழுப் பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக அசாத் சாலி கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஒருவரை எவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.