ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும் சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கயனின் தந்தையாரான இராமநாதனின் வழி நடத்தலிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் பத்திரிகையாளர்களிடையே தெரிவித்தார்.
மகிந்த அரசின் ஆதரவோடு வடக்கில் இயங்கும் குண்டர்படைகளுள் ஒன்றானா அங்கையன் என்ற ரவுடியின் தலமையில் இயங்கும் குழுவினர் பிரதானமானவர்கள். மகிந்த கட்சியின் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பாக இயங்கும் அங்கையன் குழு தேர்தலின் முன்னரும் பல கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தெரிந்ததே.
இதற்கும் மத்தியில் தமது அன்னிய எஜமானர்களின் ஆணைப்படி இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் போட்டியிட்டு மகிந்த பாசிசத்தின் கீழ் ஜனனாயகம் படைப்போம் என்கிறது. தேர்தல் என்பதே ஜனநாயகத்தின் எதிரி என்றான நிலையில் வடக்கில் தேர்தல் நடத்தி சட்டம் பேசி உரிமை பெற்றுக்கொள்வோம் என்கிறது தேசியக் கூட்டமைப்பு.
தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்கள உழைக்கும் வர்க்கம் என்று பெரும்பாலான இலங்கையின் எல்லைக்குள் வாழும் மக்களிடமிருந்து எந்த நேரத்திலும் எரிமலையாகக் கூடிய எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது ராஜபக்ச அரசு. இவர்களை அணிதிரட்டி ராஜபக்ச அரசிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதே அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட மீட்டெடுப்பதற்கான ஒரே வழி.