Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள்! அ.முத்துலிங்கம் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு!

உலகத் தமிழ்ர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் அ.முத்துலிங்கம். அறுபதுகளிலிருந்து ஈழத்து இலக்கியத்தில் கவனம் பெற்ற படைப்பாளியான இவர், பணி நிமித்தம் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பணியாற்றியபின், மீண்டும் முழுமூச்சுடன் , உத்வேகத்துடன் எழுதத் தொடங்கி மிகுந்த கவனத்தைப் பெற்ற படைப்பாளியாகத் திகழ்கின்றார். தனது கதை சொல்லும் பாணியினால் அனைவரது கவனத்தையும் பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஐம்பதாண்டு கால இலக்கியப் பணியினைக் கெளரவிக்கும் முகமாகக் காலம் சஞ்சிகை விழாவொன்றினை எதிர்வரும் 23ந் திகதி எடுக்கின்றது.   

23 May, Saturday 2009 (5pm- 7pm)
Munk center, 1 Deronshire place, Toronto University

சிறப்பு பேச்சாளர்: கருணாகர மூர்த்தி (எழுத்தாளர்)
சிறப்பு விருந்தினர்: எம்.ஏ. நுஃமான் (தமிழ்துறைத் தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்).
வாழும் தமிழ் புத்தகங்களின்; கண்காட்சியும் இடம் பெறும் (12pm-7pm)
காலம் / kalam@tamilbook.com/ 416-7311752

Exit mobile version