Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

07.11.2008.

அமெரிக்காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்திருப்பது, அந்நாடு ஒரு ஆழமான பின்னடைவை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தை அதிகமாக்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனால் வேலையின்மை விகிதம் ஆறரை சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பதினான்கு ஆண்டுகளில் மிக அதிகமான ஒரு அளவு இது. வேலையின்மை நிலவரம் ஒரு புறம் மோசமாக இருக்க இன்னொரு புறம் கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்ட் தனது வருமானத்தில் 35 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துளது.

உலகிலே பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள் எவற்றிலும் இதுவரை காலமும் ஏற்பட்டிராத அளவில் மிக மோசமான மற்றும் அதிக காலம் நீடிக்கக்கூடிய ஒரு பின்னடைவை அமெரிக்கா எதிர்கொள்ளலாம் என்று முதலீட்டாளர்கள் அஞ்ச ஆரம்பித்திருப்பதாக ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

Exit mobile version