ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது “ஏற்றுக்கொள்ளப்பட” முடியாததென்று கண்டனம் தெரிவித்துள்ள ஜோன்ல் ஹோல்ம்ஸ், பலதடவை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நடக்கும் பகுதியில் சிக்குண்டுள்ள 50 ஆயிரம் சிவிலியன்களை விடுவிப்பதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொள்வதற்குப் போர் நிறுத்தம் அவசியம் என்றும் அதற்கு இலங்கை அரசு இணங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
வெளியேறும் பொதுமக்கள் அரசால் நிர்வகிக்கப்படும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இம் முகாம்களில் சிறீ லங்கா இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளிவருவதாகவும், உதவி அமைப்புக்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அச்செய்திகள் உண்மையானவையா அல்லது உண்மைக்குப் புறம்பானவையா எனத் தெரிந்துகொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இல்னக்கைக்கான தனது இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய கோல்ம்ஸ் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலைக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.