அருகிலுள்ள நகரங்களுக்கே தெரியாமல் இரகசியமாக நடத்தப்படும் இந்த முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரித்தானியாவில் ஆங்காங்கு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தச் சிறை தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்படுகிறது. அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்ட பெண்களில் எழுபது வீதமானவர்கள், தாம் மிகக் கேவலமாக நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர்.
முகாமிற்கு எதிரான பிரச்சாரக் குழு ஒன்று பிரித்தானியாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
உரிமை அமைப்புக்கள் பல இந்தத் தடுப்பு முகாம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளன. ஜேடி சிமித் என்ற பிரித்தானிய எழுத்தாளர் முகாமிற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
‘சுந்தந்திரத்திற்கு எதிரான குற்றம்’, ‘நாகரீகமுள்ள எந்த நாட்டிற்கும் இது அவமானச் சின்னம்’ என்றெல்லாம் அந்த எழுத்தாளர் தடுப்பு முகாம் குறித்துக் கூறியுள்ளார். பல ஈழத் தமிழர்களும் இந்த முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
யார்ள் வூட் மையம் என்று அழைக்கப்படும் இந்த முகாமைச் சூழ பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாமிற்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
2014 ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் சிறப்புப் பதிவாளரான ரஷீதா மஞ்சூ யார்ள் வூட் முகாமிற்குள் செல்ல அனுமதி கேட்ட போதிலும் பிரித்தானிய அரசால் அது மறுக்கப்படது.
இலங்கை உட்பட மூன்றாமுலக நாடுகளில் பிரித்தானியா ஏற்றுமதி செய்து ஒட்டவைத்துள்ள ஜனநாயகம் அந்த நாட்டு அப்பாவி மக்களை அழித்துக்கொண்டிருக்க பிரித்தானியாவின் நெஞ்சுப் பகுதியில் அமைந்துள்ள முகாமில் அதே மக்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
அனாதரவான அப்பாவிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையின் கூடாரமாகத் திகழும் இந்த முகாமினுள் இரகசியக் கமாரக்களுடன் நுளைந்த சனல் 4 தொலைக் காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிற வெறியர்களும், பாலியல் நோயாளிகளும் முகாமிலுள்ள பெண்களுக்குக் காவலாளிகளாக வைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானிய அரசு இவற்றைத் தெரிந்துகொண்டே அனுமதிக்கிறது.
முன்னைய பதிவுகள்: