Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவோர் மீது புலனாய்வு விசாரணை : இலங்கை அரசு

நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடததுவதற்கு எதிர்பார்ப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டால் அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு மீளவும் நாடு கடத்தப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி புகலிடம் கோரும் நபர்களுக்கு எதிராக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது ஓர் வழமையான நடைமுறை எனவும் குறிபிட்டுள்ளார்.

Exit mobile version