Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது:கருணாநிதி

என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார்.

தீவிரவாத அமைப்புக்கள் தமிழ்நாட்டில் காலூன்ற எந்த வகையிலும் இடமளிக்காது, பாதுகாப்புப் படையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கூறினார். சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் இன்று உரையாற்றுகையிலேயே முதல்வர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் இரு நாள் மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்த மாநாட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

மக்களாட்சியில் நம்பிக்கையில்லாத சில தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தமிழ்நாட்டில் வேரூன்ற வைத்து அமைதியைக் குலைக்க முயல்வதாகத் தெரிகிறது. இத்தகைய தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற எவ்வகையிலும் இடம்கொடுத்திடாமல் காவல்துறை இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவிவரும் இனக்கலவரம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் நிலை தொடர்கிறது. 31.05.2008 அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதிகள் முகாம்களில் 73 ஆயிரத்து 433 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.

அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைச் சட்டத்திற்கெதிரான வழிகள் மூலம் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாகத் தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இவற்றை பரிசீலித்து இந்தியக்குடி மகனாக அல்லாதவர் இவ்வுரிமைகளைப் பெற வழியில்லை என்பதை நீங்கள் உறுதி செய்திட வேண்டும்

Exit mobile version