Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“அகதிகளை உள்ளே வர விடுங்கள்” : பேரணியும் ஆதரவுக் கோரிக்கையும்

brஅவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் “அகதிகளை உள்ளே வர விடுங்கள்” என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த “இலங்கை தமிழ் அகதிகளின் வருகை” மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை “இலங்கை தமிழ் அகதிகளுக்கு” புகலிடம் கொடுக்க வேண்டும் என்பதில் சாதகமான நிலமையே காணப்படுகின்றது. இருந்த போதிலும் அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கையான “தாமதமாய் முடிவெடுத்தல் -wait and see game” விளையாட்டு கடலிலே தத்தளிக்கும் அகதிகளின் அவலத்தை அதிகமாக்குகிறது. மாதக்கணக்காய் கடலிலே தத்தளிக்கும் 254 தமிழ் உறவுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அதைவிட இன்னொரு கப்பலில் வந்த 78 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. அதை நம்பி கரை இறங்கியவர்கள் இந்தோனேசிய குடிவரவு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். போர்க்குற்றம் புரிந்த இலங்கையின் இறுக்கமான சில வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே அவுதிரேலிய இவ்வாறான தளம்பல் முடிவுகளை எடுக்கிறது என பலரும் விசனப்படுகின்றனர். அண்மைக்காலமாக அவுஸ்திரேலிய ஊடகங்களில் “தமிழ் அகதிகளின் பிரச்சினை” முக்கியத்துவம் பெற்று,அதன் தொடர்ச்சியாக அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த தமிழ் மக்களுக்கெதிரான “இனப்படுகொலையும்” கிண்டி கிழறப்பட்டது. இது இதுவரை காலமும் வெளிவராத “தமிழ் மக்களின் அவலங்களை” அவுஸ்திரேலிய மக்களுக்கு தெளிவுபடுத்தியது. இதன் பயனாக பல ஊடகங்களும்,ஊடகவியலாளர்களும்,சமூக அமைப்புகளும் “அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் அகதிகளை உள்ளே அனுமதிக்கவேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. கப்பலில் வரும் அகதிகள் மீதான இறுக்கமான அவுஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என பல்வேறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக; 1. கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கோருவோரும் அகதிகளே. அவர்கள் “பொருளாதார நலன் தேடும் அகதிகள்” என தவறான அடையாளப்படுத்தல் நிறுத்தப்படவேண்டும். 2. கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கோரும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தடுத்து வைக்க கூடாது. “கிறிஸ்துமஸ் தீவில்” பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள் சிறைகளில் இவ்வறு அகதி அந்தஸ்து கோருவோர் வருடக்கணக்காக அடைத்து வைக்கப்படுகின்றனர். இப்போது இந்தோனேசிய தீவுகளிலும் புதிதாக சிறைவைக்கப்படுகிறார்கள். 3. அவுஸ்திரெலியாவை நோக்கி தஞ்சம் கோரி வரும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு அனுப்பி அங்கே தங்கவைக்கபடுதல் நிறுத்தப்படவேண்டும்.ஏனெனில் இந்தோனேசியா “அகதிகளின் வாழ்க்கைக்கு உகந்த நாடு அல்ல எனவும் அங்குள்ள தடுப்பு முகாம்களில் அகதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் உலக உதவி நிறுவனங்களால் வெளியிடப்படுள்ளன. 4. கப்பலில் வரும் அகதிகளை சிறைகளில் மாதக்கணக்காய் வருடக்கணக்காய் தடுத்து வைத்து, தாமதித்து பின்னர் விசா வழங்குதல் இல்லை நிராகரித்தல் என்ற குடிவரவு கொள்கை நிறுத்தப்படவேண்டும். அகதிகளுக்கான விசா வழங்கும் நடைமுறைகளில் இறுக்கம் தளர்த்தப்பட்டு மனிதாபிமான ரீதியாக முடிவெடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான மனிதாபிமான கோரிக்கைகள் பல்வேறு மட்டங்களிலும் இருந்து எழுப்படுகின்றன. இதன் ஒரு குரலாக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரிலும் இந்த வாரம் 5ம் திகதி “அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகளை அனுமதி” எனும் கருப்பொருளில் எனும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுசரணையை அவுஸ்திரேலிய பல்லின சமூகம் முழுமையாக வழங்குகிறது. பேரணி நடைபெறும்

இடம்: இடம்: in front of state library, Victoria, Melbourne காலம்: December 5th 2009 2pm இந்த பேரணியில் அவுஸ்திரேலிய மெல்பேர்ண் ஈழத்தமிழ் சமுகத்தின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பலராலும் உற்றுநோக்கப்படுகிறது.

Exit mobile version