உலகம் முழுவதும் அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிவைக்கும் நாடான இலங்கையை நோக்கி அகதிகள் வருகின்றனர் என்பது புதிய செய்தி. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டின் அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அகதிகள் பலர் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். பொதுவாகப் பாகிஸ்தானிய கிறீஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், அகமதீயா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். வாரந்தோறும் நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துல் நடைபெறும் வழிபாடு பாகிஸ்தானிய கத்தோலிக்கர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு தடவையும் 1000 பாகிஸ்தானியக் கத்தோலிக்க அகதிகள் வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்காக
பாகிஸ்தானில் 15 வருடங்கள் வாழ்ந்த பாதிரியர் எரிக் லக்மன் வழிபாடுகளை நடத்துகிறார்.
UNHCR வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கடந்த வருடம் மட்டும் 1489 பாகிஸ்தானிய அகதிகள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறீஸ்தவர்கள். 2012 இல் 102 தஞ்சக் கோரிக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.2012 உடன் ஒப்பிடும் போது அகதிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானிய அரசோ இவர்கள் பொருளாதார அகதிகள் என்று கூறுகிறது.
இலங்கை அரசு அகதிகளுக்கு பண உதவி எதனையும் வழங்குவதில்லை.
பாகிஸ்தானிலிருந்து இடம்பெயரும் அகதிகளின் எண்ணிக்கை எதிர்வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
உள் நாட்டிலேயே இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தும் இலங்கை அரசின் எல்லைகளுக்கு உள்ளேயே தஞ்சம் கோரும் அகதிகள் எதற்காக வந்து சேர்கிறார்கள் என்பதன் பின்னணி தெளிவாகவில்லை. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமானால் இலங்கை பேரினவாத அரசுகள் இந்த அகதிகளுக்கு எதிராகவும் தமது தாக்குதலை தொடுக்க வாய்ப்புக்களுண்டு.