வதிவிட அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை முற்றாக மறுக்கப்படும் அதே வேளை, தற்காலிகமகக் குடியேறும் மாணவர்கள், குறுகிய கால வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு இலவச மருத்துவ சேவையை முற்றாக மறுக்கிறது. மருத்துவச் செலவிற்கு பெருந்தொகையான பணத்தை இவர்கள் செலுத்தவேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்காலிகக் குடிவரவாளர்களை மருதுவச் செலவுகளைக் காப்புறுதி செய்வதற்கென பல பல் தேசிய வியாபார நிறுவனங்கள் முளைவிட்டு பிரித்தானியாவை நோக்கி வரும் மாணவர்களையும் வேலையாட்களையும் சுரண்டிக் கொழுக்கும் என்பதில் ஐயமில்லை.
வீடு ஒன்றை வாடகைக்கு கொடுப்பதற்கு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளால் உரிமையாளர்கள் பிரித்தானிய பிரசா உரிமை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே வாடகைக்குக் கொடுக்கும் நிலை தோன்றும் என சில அமைப்புக்கள் எச்சரித்துள்ளன .
புலம் பெயர் மக்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இது குறித்து மூச்சுக்கூட விடாத நிலையில் ஏனைய பல அமைப்புக்கள் பிரித்தானிய அரசின் மனித் உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன.