Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிகளைக் கிரிமினல்களக்கும் கனேடிய அரசும் ராதிகாவின் தேசியமும்

refugee_healthகனேடிய அரசு அரசியல் தஞ்சம் கோரிய அகதிகளை குற்றவாளிகளைப் போன்று நடத்துகின்றது. ஜூன் மாதம் 2012 ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் கோரியோருக்கான சுகாதர சேவைத் திட்டத்தை மறு ஒழுங்கு செய்த கனேடிய அரசு புதிய நடைமுறைகளை அமுலுக்குக் கொண்டுவந்தது. இதன் அடிப்படையில் பெரும்பலான அகதிகள் சுகாதார சேவையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இடைக்கால பெடரல் சுகாதாரத் திட்டம் என்ற தலையங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதியதிட்டத்தில் அரசியல் தஞ்சம் கோரும் அகதிகளுக்கான முக்கிய மருத்துவ சேவைகள் நிரகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர மருத்துவம் என்பது முற்றாக நிரகரிக்கப்படுகின்றது. புதிதாக நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தை முன்னைய அரசில் குடிவரவு அமைச்சராகவிருந்த ஜோன் கென்னடியும் ஆதரிக்கிறார்.
கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்த ஒன்ராரியோ மாநில அரசு அகதிகளுக்கான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்தியது. இதனைக் கண்டு கொதித்தெழுந்த குடிவரவு அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர், மாநில அரசின் இந்த முடிவு அயோக்கியத் தனமானது என வர்ணித்துள்ளார்.

அகதிகளைப் பாதுகாப்பதற்கான கனேடிய மருத்துவர்கள் என்ற அமைப்பு மேலும் பல உரிமை அமைப்புக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

ஈழத் தமிழ் அகதிகள் அதிகமாகப் புலம் பெயர்ந்த நாடுகளில் கனடா முதன்மையானது. அங்கு அரசில் தமிழர்களின் பிரதிநிதியாக ராதிகா சிற்சபேசன் என்பவர் தெரிவாகியுள்ளார். தேசிய வியாபாரத்தில் கொடிகட்டிப்பறக்கும் ராதிகாவிற்கு அகதிகளின் வாக்கு அனாவசியமானது என்பது தெரிந்ததே.ராதிகா இலங்கை சென்ற போது பிந்தொடரப்பட்டாரா இல்லையா என்பதே இன்று தமிழர்கள் மத்தியில் பிரதான விவாதப்பொருள்.

Exit mobile version