Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிகளுக்கு என்ன நடந்தாலும் கருத்துக்களை வெளியிடமாட்டோம்:அவுஸ்திரேலியா

ausiஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கருத்து வெளியிட முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பினை சென்றடைந்ததாகவும், அங்கிருந்து அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை தடுக்கும் தமது கொள்கை வெற்றியளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலமாக புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையில் இலங்கைக் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் 153 பேரைக் கொண்ட படகு ஒன்றும், 50 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்றும் கிறிஸ்மஸ் தீவுகளை அண்டிய கடற்பரப்பை சென்றடைந்ததாகவும், படகு ஒன்று பழுதடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகுகளை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Exit mobile version