Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிகளுக்கான உதவி நிறுவனங்களை வெளியேற்றும் இலங்கை அரசு.

புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதுவதால், வெளி நாடுகளைச் சார்ந்த  தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றுவதாக டைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
முகாம்களிலுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு பல ஆயிரம் உதவி வழங்குனர்களின் பணத்தைப் பெற்றும் அவற்றைப் பயன்படுத்த முடியாதுள்ள நிலை தோன்றியுள்ளதாக் கூறும் இத் தன்னார்வ நிறுவனங்கள், வெளி நாட்டு உதவி நிறுவனப் பணியாளர்களுகு இலங்கை அரசு விசா வழங்க மறுப்பதாகவும் இச்செய்தி தெரிவிக்கிறது.
நீங்கள் எத்ற்காவது குரலெழுப்பினால் நீங்கள் தான் தூக்கி வீசப்படும் அடுத்த மனிதர் என ஒரு தன்னார்வ நிறுவனப் பணியாளர் தெரிவித்தார்.
கடந்த சனியன்று நோர்வேயைச் சார்ந்த உதவி நிறுவனமான போரூடின் தலைமையதிகாரி வெளியேற்றப்பட்டதுடன் மட்டுமல்லாது, பிரித்தானியாவைச் சேர்ந்த அதன் பணியாளர் ஒருவருக்கு இலங்கைக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

Exit mobile version