சரஸ்வதி பூஜை என்பது என்ன? : பெரியார்

Saraswatiசரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

—————-ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 20.10.1929 “குடிஅரசு” இதழில் வெளியானது.

 ~மீள்பதிவு~

38 thoughts on “சரஸ்வதி பூஜை என்பது என்ன? : பெரியார்”

  1. எத்தன நாள் தான்யா இப்படி போலம்பி, போலம்பி, பைத்தியகாரனா இருப்பீங்க!!! உங்க பெரியார் தன் வீட்டை பிராமணனுக்கு மட்டும்தான் வாடகைக்கு விட்டார்! ஏன் !!! அவன் மட்டும்தான் வாடக தருவானாம்! ஐ நல்ல டாக்டீஸ் இல்ல!!!

   1. Sami, I find it difficult to read what you have written in Tamil. Only Tamilians still talk about this Periyar. That Ramasamy was a Kannada Speaking Nayakkar that lived in Erode in the Madras Presidency.

 1. If only we had a periyar in our midst, all irrationality would have been challenged a long time back. Even at the late stage, we need to strive to eradicate the caste oppression and all forms of oppressive and discriminative cultures that has become norm in the Tamil society. Eradication of irrational belief is perpetual, NOT the irrational belief.

 2. இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவருமே ஏதோ ஒரு வழியில் தங்கள் வாழ்வியலுக்கு ஏற்றபடி, பண்டிகைகளை உருவாக்கிக் கொண்டாடிவருவது இயல்பாகவே உள்ளது. அது வாழ்வின் அனர்த்தங்களை சற்று மறக்கச்செய்து இன்பம் தருவதையும் மறுக்க முடியாது. கொண்டாட்டங்கள் எந்தவடிவில் எழுந்து இன்பம் தருவதாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. தமிழினத்தின் மரபுவழிக் கொண்டாட்டங்கள், வேற்று இனங்களின், அதிகாரம் அல்லது பயத்தினால் சிதைக்கப்பட்டாலும், கொண்டாட்டங்கள் அழிக்கப்படாமல் மாற்று வழிகளே புகுத்தப்பட்டுள்ளன.

  இன்றைய அறிவியல் உலகத்தில் சிறந்த பகுத்தறிவு வாதியான பெரியார் அவர்கள் தமிழர்களின் கொண்டாட்டங்களுக்காக தெரிவிக்கப்படும் ஊற்றுவாய்கள் தவறானவை, அது தமிழினத்தைக் கூறுபோட்டு வேற்றுமைப்படுத்தி வைத்திருப்பதையும் உணர்த்தியுள்ளார். நாங்கள் விழிப்படைய வேண்டியது மிக மிக அவசியம். எனக்கு யாருமே ஊட்டிவிடலாம், விழுங்குவதை வேறொருவர் செய்யமுடியாது. பெரியார் உணர்த்தந்தார். செயல்படுத்த வேண்டியது தமிழர்களாகிய எங்கள் கடமை. தமிழினத்தின் மரபுவழி சிதைக்கப்பட்டாலும் எப்படி கொண்டாட்டங்கள் அழிக்கப்படாமல் வேறு வழிகளில் புகுத்தப்பட்டதோ, அதேபோன்று நவராத்திரி, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களும் வேறு வழிகளில் தொடரப்படவேண்டும், அதன் ஊற்றுவாய்கள் இன்றைய அறிவுலகம் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு மாற்றப்பட வேண்டும். இது எல்லோராலும் அதுவும் உடனடியாக செயல்படுத்த முடியாது. சந்தர்ப்பம் உள்ள மற்றும் ஒரளவு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட தமிழர்களால் இதனைச் செயல்படுத்த முடியும். முயன்றால் அது படிப்படியாக வளரும்.

  சரித்திரம் மாற்றப்படுகிறதே என்ற உறுத்தலுக்கு ஆளாகவேண்டியதில்லை. இந்துக்களைப்போல் ஆயிரம் கடவுள்களை வணங்கிவந்த கிரேக்கர்கள் இன்று ஒரு கடவுள் என்று மாற்றிவிட்டார்கள். சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடிவந்த மேலைநாட்டவர் சித்திரையை முட்டாள்கள் தினமாக்கிவிட்டு இன்று தை மாதத்தில் புது வருடத்தைக் கொண்டாடி வருகிறார்கள். மகாவம்சத்தையே மாற்றி எழுதிவருகிறார்கள் சிங்களவர்கள் அதுவே இன்னும் சில தலைமுறைகளின்பின்பு உண்மையாகிவிடும்.

  1. ஒன்றுக்கு பதில் இன்னொன்று என்பது தீர்வில்லை தோழரே அறிவியல் ரீதியான சிந்திப்பின் படி ஒன்று  இல்லை என்றால் இல்லைதான். 

   1. ஒன்றுக்கு பதில் இன்னொன்று என்பது தீர்வில்லை என்றால் மனிதன் இன்றும் கால்நடையாகவே பயணம் செய்பவனாக இருந்திருப்பான். மனிதனால் காணக்கூடிய, அறியக்கூடிய அனைத்தும் மாற்றத்தையே அடைகின்றன. தவறென்று அறியவரும்போது அதில் மாற்றம் தேடுவது ஆரோக்கியமானது.

    1. That is right Mahendra. I am 63 and I want to spend the rest of my life researching how Telugu, Tulu, Kannada and Malayalam evolved from Tamils. A stem language like Sanskrit. Tulu do not have a written script.

     1. தமிழில் என்ன எழுப்பட்டிருக்கின்றது என்பதைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறனோ தமிழில் எழுதும் திறனோ இல்லாத இவர், தமிழ்பற்றி ஆய்வது வேடிக்கை; கொடுமை. ஆங்கிலேயர்களுக்காக எதையோ கிறுக்கிக் தள்ளப்போகிறார் போலும்.

     2. You are wrong, he studied in Tamil medium. He may not know how to write it with his computer. And who said you have to write in Tamil your research findings of Tamil. Some of the good sources are in English too.

     3. Nalan I can write well in Tamil too. I do not kow how to do this in this Inioru.com platform. That is all. I plan to go to a countr like New zealand to do this firther study. The pacification process is not yet over in Sri Lanka. Shri Lanka. North. East. 

     4. நீங்களும் அவரைப் போலவே அரைகுறையா? முதலில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் தமிழ்பற்றியும் மற்றவர்களின் தமிழ்ப் புலமைபற்றியும் கருத்து சொல்லலாம்…

     5. தமிழில் எழுத (கணினியில்): http://thamizha.org 
      ஐபேட் / ஐபோனில் இயல்பாகவே தமிழுக்கு ஆதரவு இருக்கிறது.

     6. பூனைக்கு யாரு மணிகட்டுவா என்பதைப்போல அவருக்கு யார் ஐபேட்/ஐபோன் வாங்கிக் கொடுப்பா?

     7. I think my credit pass in Tamil Language is good enough for me. I can read, write and understand Tamil reasonably well. I wasn’t into linguistics anyway. I love reading stuff in Tamil as much as in English. If you want to confront me in my technical skills you are more than welcome. BTW when did I comment on your skills in Tamil anyway.

 3. பெரியார் சொன்னது நூறு வீதம் சரியான கருத்து.யார் என்ன நல்ல கருத்துக்களைக் கூறினாலும் நாம் திருந்தமாட்டோம் என்று செம்மரியாட்டுத்தனம் இருக்கும் மக்கள் இருக்கும் வரையும் இது போன்ற ஆபாசக் கதைகளை உண்மை என்று கொண்டாடங்களை கொண்டாடுவது நடந்து கொண்டே இருக்கும்.
  பார்ப்பான் போட்ட தந்திரம் இன்னும் ஆயிரம் ஆண்டும் நிற்கும்.
  செம்மர்யாட்டுத்தனம் ஒழிய வேண்டும்.ஆயிரம் பெரியார் வந்தாலும் நடக்காது.

  1. I am a Sengunthar like C. N. Annadurai who felt it time to walk out after independance in August 1947. This Periyar was also a wealthy man who wanted to marry a young girl.

 4. பெரியார் சொன்னது நூறு வீதம் சரியான கருத்து.யார் என்ன நல்ல கருத்துக்களைக் கூறினாலும் நாம் திருந்தமாட்டோம் என்று செம்மரியாட்டுத்தனம் இருக்கும் மக்கள் இருக்கும் வரையும் இது போன்ற ஆபாசக் கதைகளை உண்மை என்று கொண்டாடங்களை கொண்டாடுவது நடந்து கொண்டே இருக்கும்.
  பார்ப்பான் போட்ட தந்திரம் இன்னும் ஆயிரம் ஆண்டும் நிற்கும்.
  செம்மர்யாட்டுத்தனம் ஒழிய வேண்டும்.ஆயிரம் பெரியார் வந்தாலும் நடக்காது.

 5. யப்பானில் பென்செய்டன் (Benzaiten) வழிபாடு காட்டுவது இப்போ இந்து மதம் என பிழையாக அழைக்கப்படும் சாம்பாரின் தொன்மையை அறியாமல் பலர் பென்செய்டன் தான் சரஸ்வதி எனப் புழுகுவது உண்டு. கலை வழிபாடு என்பது ஒன்றும் பெரிய கிரந்தமல்ல- பொதுவாக மானிடரின் மூளைவளர்ச்சியால் கலைகலை உச்சக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல ஒரு யுக்தி.
  பெரியார் எதிர்த்தது ஆரிய மேலாண்மையை. ஆரியர் என வகைப்படுத்தப் படும் மக்களையோ அவர்தம் நம்பிக்கைகலையோ அல்ல. அதேபோலவே பார்ப்பணியர் அல்ல பார்ப்பணியந் தான் எதிக்கப் பட்டது.
  பண்டைய நம்பிக்கைகளை முன்வைத்தெழுந்த மோட்டு நம்பிக்கைகளின் உச்சக் கட்டம் சாதி வெறியாட்டம். ஆயகலைகள் அறுபத்து நாலு என்று பிரிபட சாதிப்பிரிவினைகளும் அதைப்பாவித்துத் தாண்டவமாட அதன அடித்தளமான சரஸ்வதியே எதிர்த்துக் காட்ட வேண்டிய தேவை பெரியாருக்கு. அதை உடைத்தெறிய பின்தங்கிய இந்தியாவில் பெரியார் நடாத்திய போராட்டம் இப்போ திராவிட கழகம் எங்கே போய் நாசமாய்ப் போனது போல இந்தியாவோ தமிழகமோ என்ற குட்டையிலிருந்து விடுபட்டு யதார்த்த நிலமைகளுடன் முன்னேறவேண்டும்.
  பெரியாரைத் தெய்வம் எனக் கும்பிடும் கூத்தே இப்போ அம்மா தெய்வம் என நடுரோட்டில் நிற்கிறது.
  சரஸ்வதி வழிபாடும் இப்படித் தான் வழிதவறி விழுந்தெழும்பி திருத்தியமைக்கப்படக்கூடியதொன்று.
  கலைகள் வழிபட்டுப் பேணிக்காக்கப்பட வேண்டியவை என்பது தவறவிடப்படாத உண்மை.

  1. ##  பெரியாரைத் தெய்வம் எனக் கும்பிடும் கூத்தே இப்போ அம்மா தெய்வம் என நடுரோட்டில் நிற்கிறது.##

   அம்மாவை தெய்வம் என  வேப்பிலை அடித்து காலில் விழுந்து தொழும் அதிமுக  பைத்தியக்காரர்கள் போல்  திக வினர்  பெரியாரை தெய்வம் என ஒரு போதும் தொழுததுமில்லை அதனை பெரியார் அனுமதித்ததுமில்லை ,
   மேலும் திகவுக்கும் அதன் கொள்கைகளுக்கும் , அதிமுகவுக்கும் அதன் கொள்கைகளுக்கும் (?) எந்த சம்பந்தமும் இருந்ததில்லை . தமிழக அரசியலை நன் கு  அறிந்தவர்களுக்கு இது புரியும் ,

   ஆனால் நீங்கள்  மொட்டைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவதிலேயே குறியாயிருக்கிறீர்கள் அதன் மூலம் வழக்கம்போல் உங்கள் அரசியல் அரிப்பை தீர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் .

 6. வருசாவருசம் சரஸ்வதி பூசை வருகுதோ இல்லீயோ இந்த பூசை சம்பதமா இங்க வம்பளக்கிறதுக்கு மட்டும் வருசாவருசம் நடக்கிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி.

 7. This is cheap. Forgot about who is Sarawathi and whether it was a creation of Bramins. The fundamental truth is we have to respect different part of the society. Farmers/Sun/ Cow were celebrated in January, skilled laborers were celebrated during this time. Periyar is talking lot of bull here.
    

  1. பெரியாரின் நோக்கு சாதிப்பிரிவினைகள் கலைகள் சம்பத்தப் படுவது என இருந்திருக்கலாம்.
   வெவ்வேறு சூழல்கள் சாம்பாராக்கப்பட்டிருக்கின்றது.
   பெரியார் கலை வழிபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அது பிழை. பிரத்தியோக வழிபாடு மதமாக உருவெடுத்து பின்னர் அம்மதக் கோட்பாடுகள் அடிமைச் சவுக்காகப் பாவிக்கப் பட்டதும் இன்னும் சிலர் பாவிக்க முயல்வதும் பிழை.

   1. Today we have father’s day, mother’s day, children’s day and even lovers day and more. We had a day or two to celebrate education. Let’s separate Brahmanism from this and celebrate it. At this rate we will have issues with everything from the full moon to the new moon. Huh 🙁

    1. சரஸ்வதி பூசை ‘படிப்பு’ என்ற மாயை சம்பந்தப் படுவதும் தற்கால சமயஞ் சார்ந்த பிழையான கோட்பாடு.
     பெரிதும் எரித்துத் தள்ள வேண்டிய புத்தகங்களை தலைக்கு மேல் தூக்கிவைப்பன காலனித்துவக் கால அடிமைச் சிந்தனைகள். அதற்கும் முன்னரான பல்வேறு முரண்படும் கலாச்சார தாக்கங்களினால் தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்ற ஒரு துறையயே மட்டும் சார்ந்த விழாக்கள் கலைகள் அனைத்தையும் ஒட்டுமொத்ததாக ஏற்றத்தழ்வு இல்லாமல் வழிபட முட்டுக்கட்டைகளாகவும் அமையலாம்.
     ஒரு நாளை மட்டும் ஒதுக்குவதை விட கலைகளின் மேல் மதிப்பை ஏற்படுத்துவதே சிறந்த நோக்கமாகும்.

 8. You don’t seem to get it. It is not just about education, it is about knowledge, learning, honoring the teachers, the institution, and everything that facilitates man to acquire knowledge and progress. It is about allocating our resources and time to different things. One cannot do all at one time and one all the time. What you define as art may not be art for me. That doesn’t mean that you don’t promote the form of art that you appreciate.

  1. மேலும் தமிழின் தமிழரின் தொன்மையயும் காவி வருவன பல ஆரியமயமாக்கப் பட்ட சிந்தனைகள். ஆரியப் புறக்கணிபுக்குத் தேவையிருந்திருக்கலாம், இப்பவும் இருக்கலாம் ஆனால் யதார்த்தம் திராவிட எழுச்சி அதுவும் அண்ணா திராவிடம் என்றெல்லாம் கங்கணங் கட்டப்பட்ட கோமாளிக் கூத்து பாரிய தேர்தல் வெற்றியுனூடும் அதத் தொடந்த தற்போதைய மண் கவ்வளூடும் காட்டி நிற்பது என்ன என்பதை நாம் புரிந்து உணர்ந்து மறுசீரமைப்புகாக முயற்சிக்க வேண்டும். நாம் என்றால் தமிழரை. அதற்காக ‘நாம் தமிழர்’ என்றோ ‘திராவிட மறுமலர்ச்சி’ என்றோ இல்லை ஏன் ‘புதிய தலைமுறை’ என்ற புதிய தலையிடியையோ பின்பற்றுவது அல்லது கைப்பற்றுவது என்பதெல்லாம் வீண் விரயம். அம்மா வழிபாடு அதி ஆழ குழியில் விழுந்துழல தமிழரின் உண்மையானதும் தொன்மையானதுமான பெண்வழிபாட்ச் சரித்திரத்தை மீழுருக்கொடுக்க ஒரு வாய்ப்பு உருவாவதை புற்ந்தள்ள வேண்டாம்.

   1. ‘அறுபத்துநாலு கலை’ என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைப் பாகுபாட்டுக்குக் காலத்தால் முந்தியனவாதலாலும் தயவு செய்து ஆரிய வெறுப்பு, அரசியற் குறுக்கு வழிகலென வருங் கால சந்ததியினரையாவது குழப்பித் தள்ளி இன்பங் காண வேண்டாம்.

    1. I think there is one great solution to this. Why not we go back to the days we were walking around with a bow and arrows with leaves covering our private parts. That was the time we did not acquire anything from anyone. The clothes we wear were not invented by us, the rice we eat wasn’t either and the list goes on. This way we can go around crowing that we’ve maintained our culture, arts and what not. Only problem is we cannot use our computer and internet to let the world to know!

   2. எனக்கு புரிகிறது . உங்களைப்பற்றி சரியாக தெரியாதவர்கள்தான் தாங்கள் நாம் தமிழர் பற்றியோ அல்லது மறுமலர்ச்சி பற்றியோ  சொல்கிறீர்கள் என தவறாக புரிந்து கொள்வார்கள் .

    ஆனால் உங்களை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ,நீங்கள் சுற்றி வளைத்து செங்கொடியோடும் கோவணத்தோடும் நிற்பவர்களைத்தான் குறிபிடுகிறீர்கள் என நன்றாக புரிந்து கொள்வார்கள் .ஆனால் பாவம் அவர்கள் மக்களால் என்றொ நிராகரிக்கப்பட்டவர்கள் , அதனால்தான் உங்களைப்போன்ற சிவப்பு தாசர்களால் அதனை நேரடியாக கூட சொல்ல முடியாது சுற்றி வளைத்து சொல்லும் பரிதாபநிலைக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் .

    1. To be honest with you I did not mean anything beyond what I have said here literally.

     1. Thanks Nalan for the link up about Tamil fonts and other paraphenelia in the information World. I do not assess my Tamil proficiency with a Credit Pass  as Sutharsan had stated. It is more than hat. For now in my mind set I want to stick to writing in Anglais. Thank you for your time.

  2. Sutharsan. You said it all and correct. The composite nature and feature of Saraswathy Pooja. It is extended to Vani Vila to embrace all those to who honour their wok and work places.

Comments are closed.