இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்படுவோம், வாக்குறுதிகளை இலங்கை காப்பாற்றியது: அமெரிக்கா

user-uss-new-orleans-920-3இலங்கையுடன் இரு தரப்பு இணைவை ஏற்படுத்திக்கொள்வதற்காக The USS New Orleans (LPD 18) என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்கின்றது. அமெரிக்க ஆயுதம் தாங்கி கடற்படைக் கப்பலான The USS New Orleans (LPD 18) இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுப்போவதாக அறிவித்திருந்தது. இலங்கை முழுவதும், குறிப்பாக வடக்குக் கிழக்கில் உதவி என்ற தலையங்கத்தில் தனது வேர்களைப் படரவிட்ட USAID என்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 200 கடற்படை வீரர்களுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் embarked 13th Marine Expeditionary Unit (MEU) அமெரிக்காவின் உம் இணைந்து மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படது. இராணுவ நடவடிக்கை ஒன்றின் போதோ அன்றி அவசர நிலையின் போதோ எவ்வாறு இலங்கைக் கடற்படையுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையே மனிதாபிமான நடவடிக்கைகள் என அமெரிக்கா அறிவிக்கிறது.

இலங்கை பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் ஆர்வமுடனிருப்பதாக கப்பல் தளபதி ஜோன் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன், அமெரிக்கக் கடற்படையினரும் இணைந்து கொழும்பிலுள்ள கல்லூரிகள் சிலவற்றைப் பார்வையிட்டனர்.

இலங்கை கடற்படைத் தளபதிகளுக்கு மத்தியில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இலங்கையில் ஜனநாயகம் மலர்ச்சி ஏற்பட்டதாகவும், அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜனநாயகத் தேர்தல் முறை ஏற்பட்டதாகவும் கூறினார்.

ஒரு நாட்டில் ஜனநாயகம் தொடர்வதற்கு தொழில் முறை இராணுவம் அவசியம் என்றும் அதனால் இலங்கை அரச இராணுவத்துடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் எனவும் தெரிவித்தார்.

தெற்காசியக் கடற் பிராந்தியத்தை இராணுவமயப்படுத்தி யுத்த வலயமாக்கும் அமெரிக்க அரசின் செயற்பாடுகள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி, சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானதாகும். இலங்கை அரச படைகள் நடத்திய இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்கா இன்று இலங்கைக் கடற்படையைத் தெற்காசியப் பிராந்தியத்திற்கான தனது அடியாள் படையாக மாற்றியுள்ளது.

அமெரிக்க அரசுடன் இணைந்து இலங்கை அரசைப் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப் போவதாக புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் மக்களை ஏமாற்றிவரும் அதேவேளை அமெரிக்கா இலங்கை அரசைத் தனது தெற்காசிய அங்கமாகக் கருதுகிறது,

மேலும் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர், இலங்கை சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய வாக்குறிதியின் அடிப்படையில் அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை அமெரிக்க அரசின் ‘ஜனநாயக’ மயமாக்கல் நிறைவுபெற்றுவிட்டது. புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தியமைக்காக மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்த அரசியலுக்குப் பதிலாக மக்கள் சார்ந்த அரசியலை இவர்கள் முன்வைக்க வேண்டும் அல்லது அரசியலிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும். இதுவரை புலம்பெயர் அமைப்புக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீள்வதற்கான புதிய திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.