ஐ.நாவில் இனப்படுகொலையை விரும்புவதாக அறிவித்த ட்ரம்

1953 ஆம் ஆண்டில் ஆரம்பித்து மூன்று வருடங்களாக வட கொரியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்களை அழித்து அவர்களின் இரத்தைத்தைச் சுவைத்த அமெரிக்க ஏகபோக அரசை அழைத்துவந்து இனப்படுகொலைக்கு நீதிபெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் தமிழர்களின் தலைமைக்கு இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரொன்னல்ட் ட்ரம் இன்னொரு பதிலை வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் மத்தியில் மட்டுமல்ல, அதிகாரவர்க்கத்தின் உள்ளேயும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இன்றைய முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டிக் கோமாளி ட்ரம்பின் ஐ.நா உரையை இதுவரை எந்தத் தமிழ் அரசியல்வாதியும் கண்டுகொள்ளவில்லை. கடந்த செய்வ்வாய் அன்று ஐ.நாவின் பொதுச் சபையில் உரையாற்றிய ட்ரம், வட கொரியாவை முழுமையாக முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்கா தகமை பெற்றுள்ளது மட்டுமல்ல விருப்பமும் கொண்டுள்ளது என்றார்.

உலக முதலாளித்துவத்தின் இருதயமான அமெரிக்காவின் கடிவாளத்தைக் கையில்வைத்திருக்கும் மனிதகுல விரோதி ட்ரம், ஒரு நாட்டையும் அதன் மக்களையும் அழித்து நிர்மூலமாக்குவேன் என இனப்படுகொலையை ஐ.நா பொதுச் சபையிலேயே முழங்கினார். இனப்படுகொலையை முன்னறிவித்தார். அணுவாயுதத்தை இனப்படுகொலைகான ஆயுதமாக எந்தக் கூச்சமும் இல்லாமல் ட்ரம் முன்னிறுத்தி உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அதே வேளை இலங்கையின் ட்ரம்பின் நம்பிக்கைக்கு உரியை பிரதிநிதியான அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மனைவி சகிதம் ட்ரம்புடன் படமெடுத்துக்கொண்டார்.

இலங்கையின் பேரினவாத சோவனிச அரசை குறைந்தபட்ச மாற்றமுமின்றி, பேரினவாதம் இழையோடும் தத்துவத்தோடு நடத்திச் செல்லும் மைத்திரிபால சிரிசேன, ட்ரம்பின் அடிமையாக வாழ்வதில் முழுத் தகமையும் பெற்றவரே.