நீரில் நிலம் எரிகிறது: யாழ்ப்பாணத்தில் அதிசயம்

இலங்கை அரச பேரினவாதத்தின் ஊது குழல்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை, மக்களைச் சுரண்டி வயிற்றுப் பிழைப்பு நடத்துவதில் அக்கட்சிக்கு எந்த வகையிலும் குறைவற்ற விக்னேஸ்வரன் கும்பல் நிரப்பிக்கொள்ள முனைகிறது. இலங்கை பேரினவாதம் தின்ற தொலைத்த மண்ணை நீண்ட காலத்திற்கு பாலைவனமாக்கும் சுன்னாகம் பேரழிவு விக்னேஸ்வரனின் ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் செயற்பட்ட முன்னை நாள் அமைச்சர் ஐங்கரநேசன் எந்த வகையான தண்டனையுமின்றித் தப்பிக்கொண்டார். அதனை ஒழுங்கமைத்த நபர் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு விக்னேஸ்வரனின் அரவணைப்பில் வடமாகாணத்தை நடத்தி வருகிறார்.
இன்று சுன்னாகம் சூழவர வட மாகாண சபையினால் சிதைக்கப்பட்ட மண்ணையும் நீரையும் குறித்துப் பேசுவதற்குக்கூட மனிதர்கள் இல்லை. ஊழலைச் பேரம்பேசும் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு வாக்குப் பொறுக்க அரசியல் கழுகுகள் வட்டமிட ஆரம்பித்துவிட்டன. விமர்சனம் சுயவிமரசனம் போன்ற உயரிய மனித விழுமியங்களெல்லாம் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சமூகமொன்றில் சுமந்திரனுக்கு எதிராக விக்னேஸ்வரன் கதாநாயகனாக்கப்பட்டிருக்கிறார். இன்னும் ஏமாற்றப்படும் மக்கள் மத்தியிலிருந்து புதிய ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் தோன்றும் வரை விக்னேஸ்வரன்களும் சுமந்திரன்களும் வெட்டவெட்டத் தழைப்பார்கள்!