Tag Archives: Add new tag

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்(5): T .சௌந்தர்

தமிழ் திரை இசையின் ஜாம்பவான்களாக இருந்த ஜி.ராமநாதன், எஸ்.வீ. வெங்கட்ராமன் , எஸ்.எம். சுப்பையாநாயுடு, சி.ஆர். சுப்பராமன் ,கே.வீ . மகாதேவன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,ஆர்.சுதர்சனம் , ஏ .எம் ராஜா ,கண்டசாலா , எஸ் .தட்சிணாமூர்த்தி , வீ. தட்சிணாமூர்த்தி , சீ. என் பாண்டுரங்கன், எஸ்.ராஜேஸ்வரராவ் , ஆதிநாராயணராவ் மற்றும் வேதா, ஜி .கே.வெங்கடேஷ் , ஆர் .கோவர்த்தனம், ஜி.தேவராஜன் , எம்.பி. ஸ்ரீனிவாசன், விஜயபாஸ்கர் போன்ற இசை மேதைகளின் வழித் தோன்றலாக இளையராஜா வருகிறார்.

இளையராஜாவின் வருகை தமிழ் திரையிசையின் புதிய பரிமாணமாக அமைந்தது.ஹிந்தி திரைப்படப்பாடல்களின் ஆதிக்கத்தின் நீட்சி தொடர்ந்த காலத்தில் இளையராஜா அறிமுகமானார்.1950 களில் ஆரம்பித்த தமிழ் மெல்லிசையாக்கம் , 1960 களில் நல்ல நிலையில் வளர்ந்ததெனினும் ஹிந்தி இசையின் தாக்கத்திலிருந்து முற்றாக விடு பட முடியவில்லை.ஹிந்தி படப்பாடல்கள் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்திவந்தன.1976 ல் அன்னக்கிளி வந்ததும் நிலைமை முற்றாக மாறியது என்பது தமிழ் திரையிசையின் வரலாறாகும்.எனது பத்து வயதுகளில் நான் கேட்ட அன்னக்கிளி பாடல்கள் மிக்க தாக்கம் விளைவித்தன. . கேட்ட இடத்திலேயே நின்று ,பாடல் முடியும் வரை நின்று கேட்ட பாடல்கள் அவை என்பது எனது முதல் இசை அனுபவம் ஆகும். குறிப்பாக எஸ்.ஜானகி பாடிய ” அன்னக்கிளி உன்னைத் தேடுதே ” என்ற பாடலில்ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் இனம் புரியாத மயக்கம் தந்தது என்பேன்.அந்தப் பாடலில் இழைந்திருந்த , இனம் புரியாத சோகம் , விம்மல் அதன் காரணமாக இருந்திருக்கலாம்.!

அந்த நேரத்தில் யார் பாடியது ,யார் இசையமைத்தது என்பதெல்லாம் தெரியாது.அறியாத வயதாக இருந்தாலும் நல்ல இசைக்காக மனம் திறந்திருந்தது என்பேன். ” அன்னக்கிளி உன்னைத்தேடுதே ” என்ற அந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம் ஆபேரி என்பது இப்போது புரிகிறது.

உருக்கமும் , இனிமையும் , ராஜகம்பீரமும் ஒன்றிணைந்த அற்ப்புதமான தமிழ் ராகம் ஆபேரி.இந்த ராகத்தில் அமைக்கப்படுகின்ற பாடல்கள் பெரும்பாலும் ஹம்மிங் உடன் தான் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பாடலில் அன்னக்கிளி என்ற பாத்திரத்தின் சோகம் சொல்லப்பட்டு விடுகிறது.

நாடகம் ,கூத்து போன்ற கலை வடிவங்களை விட மக்கள் சினிமாவை தமக்கு நெருக்கமனாதாக கருதுகின்றனர்.ஸ்டுடியோ தளங்களில் உருவான காட்சி அமைப்புக்கள் மாறி , கிராமங்களில் நேரடியாக ஒளிப்பதிவு செய்யும் ஒரு போக்கின் ஆரம்பமாக அமைந்த படமான ” அன்னக்கிளி ” யில் அறிமுகமானவர் இளையராஜா. கதைக்கேற்ப இசையும் கிராமத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.படத்தின் டைட்டில் இசையே அதை கட்டியம் கூறி விடுவதாய் அமைந்தது.அந்த டைட்டில் இசையிலேயே தமிழக நாட்டுப்புற இசையும் ,மேலைத்தேய இசையும் இணைந்த இசையாக அதனை அமைத்திருப்பார் இசைஞானி இளையராஜா.

தமிழ் நாடக அரங்கு சங்கரதாஸ் சுவாமிகளால் எவ்வாறு புத்தெழுச்சி பெற்றதோ , அதை போன்றே தமிழ் திரை இசையும் இளையராஜாவின் இசையால் புத்தெழுச்சி பெற்றது எனலாம்.தமிழ் மரபுகளை நன்கறிந்த சங்கரதாஸ் சுவாமிகள் போலவே , இளையராஜாவும் அதிலிருந்தும் தனக்கு முன்பிருந்த திரை இசை மேதைகளின் பாதிப்பிலும் , அவற்றுடன் நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , மேலைத்தேய செவ்வியல் [ Western Classsical Music ] போன்ற இசை வகைகளின் இனிய கலப்பிசையாக தனது படைப்புக்களை உருவாக்கினார்.நாட்டுப்புற இசை , கர்நாடக இசை , மேலைத்தேய செவ்வியல் இசை போன்றவற்றில் அவருக்கு இருக்கும் தேர்ச்சி முன்பிருந்த இந்திய இசையமைப்பாளர்களுக்கோ அல்லது பின்னையவர்களுக்கோ இல்லை.இவை மட்டுமல்ல ஜாஸ் இசை போன்றவற்றிலும் அவருக்கு இருக்கும் அபாரத் திறமை இந்திய இசையமைப்பாளர்களுக்கு இல்லை எனலாம்.

இவ்விதம் பலவகை இசை தெரிந்தவராக இருந்த போதிலும் , அர்த்தமற்று குழப்பாமல் , அவற்றை எல்லாம் தனது கைதேர்ந்த கலை ஆற்றலால் கேட்கக் கேட்கத் திகட்டாத , கேட்கக் கேட்கப் புதுமைமிக்க , கலையுணர்வை அள்ளித்தரும் பாடல்களாக்கி தமிழ் மக்கள் மனங்களில் நிலைபெறச் செய்த மேதையாகத் திகழ்பவர் இசைஞானி இளையராஜா.பலவிதமான இசைகளையும் பின்னிப் பின்னி , குழைத்துக் குழைத்து இசையில் பிரமிப்புக்களை தோற்றுவித்த நேரத்தில், அவை தோற்றத்தில் எளிமையையும் கலந்திருக்கும் அர்ப்புதங்களை செய்து காட்டியவர் இசைஞானி.

அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் வெளிவரும் போது, அவற்றை முதலில் கேட்கும் போது , மிகச் சாதாரணமானது போல இருக்கும்.ஆனால் , தொடர்ந்து கேட்கக் கேட்க புது , புது விடயங்களை அவதானிக்கக் கூடியதாய் இருக்கும். கேட்கக் கேட்க புதுமை மிளிரும் பாடல்களாய் இருப்பதை நம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

நாம் அன்றாடம் கேட்ட பல வாத்தியங்களின் ஒலிகளிலும் புதுவிதமான , வியப்பூட்டும் சப்தங்களை உண்டாக்கிக் காட்டினார்.அவை சப்த தொழில் நுட்பத்தால் செய்யப்பட்டதல்ல.அவை அவரது ஆரம்பகால பாடல்களில் , சிறப்பான தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே செய்து காட்டப்பட்டன என்பது வியப்புக்குரியது.!

மிகச் சிறந்த இசைமரபைக் கொண்ட தமிழ் சூழலில் , பலருக்கு அது சுமையாய் அமைந்து விட்ட சூழ் நிலையில் , அதிலிருந்து உள்ளக்கிளர்ச்சிகளை உருவாக்கக் கூடிய , சில சமயங்களில் அந்த மரபை மேலும் செழுமை படுத்தக் கூடிய இசை விநோதங்களை இளையராஜா படைத்துள்ளார்.பல குரல் இசையிலும் [ chorus ] , வாத்தியைசையமைப்பிலும் [ Orchestra music ] இவை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.பாடலின் போக்கில் , பின்னே இழுபட்டுப் போகும் மன சலிப்பைத் தரும் பாதையை மூடி ,பாடலின் உணர்வை மேலும் கூட்டும் படியாக வாத்திய இசையின் இனிமையால் கற்பனையில் புதிய தரிசனங்களைக் காட்டியவர் இளையராஜா.அவரது பாடலின் நடுவே வரும் இடையிசைகளை கேட்பவர்கள் இதனை உணரலாம்.

ஒரு பாடலில் , ஒரு தமிழ் செவ்வியல் [ கர்னாடக இசை ] ராகத்தை அடிப்படையாக கொண்ட மெட்டிருக்கும், அதில் நேர்த்தியான மேலைத்தேய செவ்வியல் வாத்திய இசையும் , தமிழக நாட்டுப்புற இசையின் கூறுகளும் , நம்மைப் பிடித்தாட்டும் நாட்டுப்புற தாளமும் ஒன்றிழைத்துப் பின்னப்பட்டிருக்கும்.நாட்டுப்புற இசை, கர்னாடக இசை , மேலைத்தேய செவ்வியல் [ Western Classsical Music ] போன்ற தனித்துவம் மிக்க இசை வகைகளை இளையராஜாவை போல் மிக லாவகமாகக் கலந்தவர்கள் யாரூமில்லை எனலாம்.தமிழ் மக்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் , மண்ணில் வேர் ஊன்றிய இசையால் இசையுணர்வை தட்டி எழுப்பியவர் இசைஞானி. இந்த பேராற்றலால் இசையை தமிழ் சினிமாவின் கதாநாயகன் ஆக்கினார்.

முன்பிருந்த கதாநாயகர்களின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டது.இளையராவின் இசை இருந்தால போதும் , கதாநாயகர்களாக யாரையும் வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலை உருவாகியது.அற்பத்தனத்தின் சின்னமாக இருந்த தமிழ் திரை உலகின் கதாநாயகர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது நியாயமானதே. ஒரு சிலரை சிறந்த நடிகர்கள் என்றும் , வேறு சிலரை மட்டமான நடிகர்கள் என்பது போன்ற கருத்துக்களை தமிழ் பத்திரிகைகள் திட்டமிட்டு பரப்பி வந்தன. “பெரிய ” என்று அவர்களால் புளுகப்பட்ட ஜிகினா கதாநாயகர்கள் செய்வதை தான் இவர்களும் செய்தார்கள்.!! இந்த கதாநாயகர்கள் கூட இரண்டாம் பட்சமாக்கப்ப்ட்டார்கள்.அந்த”மட்டமான “நடிகர்களின் படங்களிலும் சிறப்பான இசை தான் இருந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கப்பட்டது இசைஞானிக்கே என்பதும் அவரது இசையின் ஆத்திகம் எனலாம்.

இவரது கட்டுக்கடங்காத, மிதந்து வரும் இசை அலைகளுக்கு ஈடு கொடுக்க பாடலாசிரியர்களால் முடிவதில்லை. இவரது இசையின் கற்பனை வளத்துக்கு பாடலாசிரியர்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை.அதனால் பாடல் எழுதுவது என்பது அர்த்தமற்ற சடங்குகளாக்கப்பட்டன.

இசை என்பது தனி மொழி என்பது இசைஞானியின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்ப்பட்டது.மொழியின் மாயைகளை எல்லாம் இவரது இசை இலகுவாகக் கடந்து விடுவதால் , தடுமாறும் பாடலாசிரியர்களுக்கு அவரே அடி எடுத்துக் கொடுக்கும் நிலையும் நடந்தேறியுள்ளது. மெட்டுக்களுக்கு ஈடு கொடுக்க முடியாத ” கவிஞர்கள் ” ராஜா , ரோஜா , மயிலே , குயிலே ஏதேதோ எல்லாம் எழுதி தள்ளியிருக்கிறார்கள்.தமிழில் இயல் , இசை ,நாடகம் என்பது கலையின் வரிசைப்படுத்தலாகும்.படைப்பாற்றலில் முன்னிறுத்தப்பட்ட இயல் [ கவிதை ] பின்னுக்குத் தள்ளப்பட்டதையிட்டு பாடலாசிரியர்களை பின்னுக்குத் தள்ளுவதாகக் இளையராஜா மீது குற்றச் சாட்டு வைக்கப்பட்டது.

அவருக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் எல்லாம் பாட்டுக்கு இசையமைத்தது போலவும் , இளையராஜா தான், தன்னுடைய மெட்டுக்கு பாடல எழுத நிர்ப்பந்தந்திப்பதகவும் செய்திகள் வெளியாகின.தமிழ் திரையிசையில் வெளிவந்த 99 வீதமான பாடல்கள் எல்லாம் மெட்டுக்கு எழுதப்பட்டவையே. அதில் ” பெரிய கவிஞர்கள் ” என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் மெட்டுக்கு பாடலை விரைவாக எழுதக்கூடியவர்களாக இருந்ததாலேயே அவ்விதம் பெயர் எடுத்தார்கள்.இசை என்பது மொழியின் எல்லைகளை எல்லாம் கடந்த . தன்னளவில் மிக உயர்ந்த கலை என்ற நிலை இளையராஜாவின் காலத்தில் அவரது இசையால் உருவானது.

படைப்பாற்றல் மிக்க ஒரு முழுமையான ஒரு கலைஞனாக அவரைக் குறிப்பிடலாம். மேலை நாட்டில் கலைஞர்கள் பெரும்பாலும் தாங்களே பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடுவார்கள்.அந்த வகையில் இந்தியாவில் அவரே பாட்டெழுதுவது , இசையமைப்பது , பாடுவது போன்றவற்றால் முழுமையான கலைஞனாக விளங்குகிறார்.எனக்குத் தெரிந்த வகையில் ஹிந்தி இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் என்பவர் பாடலாசிரியராக இருப்பவர் . ஆனால் அவர் பாடி நான் கேட்டதில்லை.இளையராஜா பாடல்களையும் மிகச் சிறப்பாக பாடுவார். உணர்ந்து பாடுவது அல்லது இதயத்தால் பாடுவது , அல்லது ஆத்மாவால் பாடுவதென்பதை அவர் எழுதி இசையமைத்துத் தானே பாடிய

” இதயம் ஒரு கோவில் – அதில்
உதயம் ஒரு பாடல் ” [ படம் : இதயக்கோயில் ]

என்ற பாடலில் துல்லியமாகக் கேட்கலாம். அதே பாடலை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பாடியிருக்கிறார் [ இளையராஜாவின் பாடல் போல் அல்லாமல் வெறும் அலங்காரம் அதில் வெளிப்படும் ] ,எனினும் இளையராஜாவின் பாடல் உள்ளத்தால் பாடிய பாடல் என்பதை நாம் துல்லியமாய் கேட்கலாம்.இதே தன்மையை ” நானாக நான் இல்லை தாயே ” என்ற பாடலிலும் நாம் அவதானிக்கலாம்.எத்தனையோ பாடல்களை இதற்க்கு உதாரணம் கூறலாம்.

தமிழக நாட்டுப்புற இசை, கர்னாடக இசை போன்றவற்றுடன் அவரது இசைக்கு முக்கிய அகத்தூண்டுதலாக [ Inspiration ] இருந்தது மேலைத்தேய செவ்வியல் இசை [ Western Classsical Music ]ஆகும்.இசை ஒரு சமூகத்தின் பண்பாட்டின் விளைபொருள் என்றால் , அப்படிப்பட்ட இசை மற்றொரு பண்பாட்டிலிருந்து வரும் இசையுடன் கலப்பது அல்லது இணைப்பது என்பது இலகுவான காரியமல்ல.இரு வேறு நிலைப்பட்ட , பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட இசையை கலப்பது என்பது இரண்டு இசையையும் கற்று தெளிந்தவர்களுக்கே சாத்தியமாகும்.குறிப்பாக ஹார்மொனியை அடிப்படையாகக் கொண்ட மேலைத்தேய செவ்வியல் இசையை [ Western Classical music ]நமது இசையுடன் கலந்து , இணைத்து அவர் தந்த இசை , உலக இசைக்கு கிடைத்த புது இசை எனலாம்.குறிப்பாக பாடல்களுக்கிடையில் அவர் கொடுத்திருக்கும் இடை இசைகளை [ InterLutes ] போல எங்கும கேட்டிருக்க முடியாது.

அவற்றையும் , அவர் இசையமைத்த படங்களின் பின்னணி இசையையும் ஒரு தொகுப்பாகத் தொகுத்தால் அவை உலக இசைக்கு ஒரு புதிய வகையான இசையாக அமையும் என்பதில சந்தேகம் இருக்கமுடியாது.அப்படிப்பட்ட ஓர் அழகும் , இனிமையும் நிறைந்த இசையை உலகில் எங்கும் கேட்டிருக்கவும் முடியாது.மேலைநாட்டு செவ்வியல் இசையில் ஞானமும் , பரீட்சயமும் இருந்தாலும் அவற்றில் நிறைய பரிசோதனை செய்யும் பேராசை , ஆர்வம் அவரை இயக்கியிருக்கிறது.அந்த பரிசோதனைகளில் அவர் தானும் பயின்று நம்மையும் மகிழ்வித்திருக்கிறார்.

வாத்திய இசைக் கலவைகளில் அவர் வடித்துத் தந்திருக்கும் வித விதமான, மனதை வருடுகின்ற வார்த்தையால் வர்ணிக்க முடியாத, கற்பனைகளின் உச்சங்களான இசைத் துணுக்குகளை எல்லாம் கேட்டால் அவரது இசையின் வேட்கை எப்படிபட்டது என்பது புரியும்.அந்தவகையில் அவருக்கு சமைதையாக யாரயும் முன் நிறுத்த முடியாது.அவை கற்பனையின் சிகரங்கள் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இவ்விதம் வித விதமான நாதக் கனலின் கலவைகளை , வெவேறு விதமான , பல வகைப்பட்ட வாத்தியங்களை வைத்து அவர் நிகழ்த்தியிருக்கும் நாத விநோதங்களின் மூலம் வாத்தியங்களைடையே ஒரு சமத்துவ நிலையை காண்பித்து வாத்தியங்களுக்கிடையேயும்ஒரு ஜனநாயகப் பண்பை சாவகாசமாகக் காட்டியிருப்பார்.வாத்தியங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வில்லை.இசையின் போக்குக்கு , அதன் வெளிப்பாட்டிற்கு ஏற்ப வாத்தியங்களின் சேர்க்கையை அவர் கையாளும் முறையில் அவர் ஒரு மகா சிற்பி. இசையில் எவ்வளவு தீவிரம் , ஆற்றல் இருப்பதால் தான் அவர் இது போன்ற அற்ப்புதங்களை அனாசாயமாக தந்திருப்பது சாத்தியமாகியிருக்கிறது .

பாடல்களில் பலவிதமான உணர்வு நிலைகளுக்கு ஏற்ப வாத்தியங்களை அவர் பிரயோகித்திருக்கும் முறையை ஒவ்வொரு பாடலிலும் கேட்டு அதிசயிக்கலாம்.அதிலும் ஒவ்வொரு வாத்தியங்களிலும் என்னென்ன விதங்களில் எல்லாம், கலா நேர்த்தியுடன் இடையிசையை வழங்கியிருகிறார் என்பதை ஏராளமான பாடல்களின் மூலம் உதாரணங்களாகக் காட்டலாம்.அவற்றைப் பாடல்களுடன் கேட்பது முழுமையான இன்பம். ஆனால் இடையிசையை [ InterLutes ] தனியே பிரித்தெடுத்துத் தனியே கேட்கும் போது அதன் இனிமையும் , அவர் கலாமேதமையும் உணரலாம். ஏனெனில் அப்போது தான் அதில் முழுக் கவனமும் நம்மால் செலுத்த முடியும்.இல்லை என்றால் பாடலின் இனிமையில் மெய்மறந்து போக நேரிட்டு விடும்.வாத்தியனகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் வயலின் என்ற வாத்தியத்தை அவர் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்.ஒவ்வொரு பாடலிலும் நாம் அதனை கேட்கலாம். எத்தனை விதவிதமாக இசையை தந்த அவர் அவை போல மீண்டும், மீண்டும் வராமலும் பார்த்திருக்கின்றார்.தொல்காப்பியர் கீழ் கண்ட பாடலில் சொல்வார்.

சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல்; மாறுகொளக் கூறல்;
குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;
பொருளில கூறல்; மயங்கக் கூறல்;
கேட்போர்க் கின்னா யாப்பில் ஆதல்;
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்;
தன்னா னொருபொருள் கருதிக் கூறல்;
என்ன வகையினும் மனங்கோ ளின்மை;
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். (தொல்.110)

கூறியது கூறல்; மாறுகொளக் கூறல், குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;. பொருளில கூறல்; மயங்கக் கூறல் இலக்கியத்திற்கு மட்டுமல்ல இசை போன்ற கலைகளுக்கும் பொதுவானதாக உள்ளது எனலாம். இந்த வழுக்களை மிக நுட்பமாகத் தவிர்த்திருக்கிறார் இளையராஜா. அவர் நினைத்திருந்தால அவர் போட்டமெட்டுக்களையே திருப்பித் , திருப்பி வெவேறு விதமாகப் போட்டிருக்க முடியும்.

அவர் அவ்வாறு செய்திருந்தாலே அவர் இன்னும் 30 வருடங்கள் நிற்க முடியும்.கற்பனையின் அதீதங்களை படைத்த அவர் , ஒவ்வொரு பாடலிலும் புதிது , புதிதாக தாவி சென்றிருக்கிறார். இவரது படைப்பாற்றல் திறன் என்பது மனித மூளையின் அற்ப்புதங்கள் அல்லது வினோதங்கள் என்று தான் எண்ணத்தோன்றும்.

மேலைத்தேய இசையில் CounterPoint [ மெட்டுக்குள் மேட்டு ]என்று சொல்லப்படுகின்ற ஒரு சிக்கலான , மேலைத்தேய இசையமைப்பாளர்களில் மிகவும் திறமைமிக்கவர்களால் கையாளப்படும் ,மிக இனிமையனதுமான ஒரு நுட்பம் இருக்கிறது.அதில் சிறந்து விளங்கியவர் Johannes Sebastian Bach [ 1665 – 1750 ] என்ற சிம்போனி இசை மேதை.அந்த இசை முறையை இளையராஜா ஒரு சில தமிழ் பாடல்களில் முழுமையாகச் செய்து காட்டியிருக்கிறார்.கீழ் கண்ட பாடல்களில் முழுமையாக இந்த முறையை பயன் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

1. என் கண்மணி உன் காதலி [ படம்: சிட்டுக்குருவி ] பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இந்தப் பாடல் பற்றிய சுவையான தகவலையும் இளையராஜா சொன்னார். இந்த CounterPoint [ மெட்டுக்குள் மேட்டு ] முறையை இந்த பாடல் காட்சிக்கு பொருத்தமாக வந்த போது, கவிஞர் வாலிக்கு இந்த இசை முறை பற்றி விளக்கிய போது அவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்றும் , பின் தானே ஒரு பாடலை முன்மாதிரியாக எழுதிக்காட்டி விளக்கிய பின்னர் தான் அவர் முழுமையாக அந்தப் பாடலை எழுதியதாக சொன்னார் இளையராஜா.

2. பூமாலையே தோள் சேரவா [ படம்: பகல் நிலவு ] பாடியவர்கள்: இளையராஜா + எஸ்.ஜானகி

3. தென்றல் வந்து தீண்டும் போது [ படம்: அவதாரம் ] பாடியவர்கள்: இளையராஜா + எஸ்.ஜானகி
இந்த CounterPoint முறையை ஒவ்வொரு பாடல்களிலும் வரும் இடை இசையில் வரும் வாத்தியங்களில்எத்தனையோ விதம் ,விதமாகவும் , கோரஸ்களில் விதமாகவும் ஆயிரக்கணக்கான பாடல்களில் வார்த்தையால் வர்ணிக்க முடியாதளவு CounterPoint களை அள்ளிவீசியிருப்பார் இசைஞானி. விதம் ,விதமான நிறங்களை தான் விரும்ய கோணங்களில் நிறுத்தி உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார்.மரபு ராகங்களைக் நவீன இசைக்குள் இழுத்து வந்த இவரது கலா மேதமைத்தனம் இவருக்கு முன்பும் , பின்பும் எவருக்கும் இருக்கவில்லை.

சிறுகதையில் புதுமைப்பித்தன் , புராதன கதை மாந்தரை உலாவவிட்டதைப் போல இசையில் தனக்கு முன்பிருந்த இசை மேதைகளின் படைப்புக்களை தனது இசையில் தோரனைகளாக உலவ விட்டு , தனது படைப்புக்களுக்கு உத்வேகம் [ Inspiration ] மூட்டி நம்மை இனம் புரியாத பரவசத்திற்கு உள்ளாக்கியவர் இளையராஜா! தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் த்னன்னையும் விஸ்தரித்துக் கொண்டு , தான் கற்றவற்றிலிருந்து பெற்ற அனுபவம் மட்டுமல்ல தன ஆளுமையால் இசையில் புதிய பரிமாணங்களை செய்து காட்டியவர்ர் இளையராஜா.

ஜி.ராமனாதனின் பாடல்களையும் , சி.ஆர் .சுப்பராமனின் பாடல்களையும் , விஸ்வநாதன் ராமூர்த்தியின் பாடல்களையும் ,இவர்களைப் போலவே இன்னும் பல இசைமேதைகளின் பாடல்களை எல்லாம் தோரனைகளாக்கி, எல்லோரும் இலகுவில் கண்டு பிடிக்க முடியாதவாறு இசையில் ஒரு புத்துணர்ச்சியை , விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.பாடல்களில் சௌந்தர்யத்தையும் , நெகிழ்வையும் , உருக்கத்தையும் , களிப்பையும் , நகைச்சுவையையும் , நுட்பமாகவும் , அநாயாசமாகவும் செய்து தனது மேதைத்தனத்தை நிரூபித்தவர் இசைஞானி இளையராஜா.INSPIRATION ஆக அவை எடுத்தாளப்பட்டாலும் கேட்பவர்கள் நெகிழும் வண்ணம், ஆச்சரியப்படும் வண்ணம் , குதூகலிக்கும் வண்ணம் இருக்கும்.கைதேர்ந்த கலா மேதமை அவரது தனித்துவாமாகும்.

ஜி.ராமநாதன் இசையமைத்த சக்கரவர்த்தி திருமகள் [1957 ] படத்தில இடம் பெற்ற” சங்கத்துப்புலவர் பலர்” [ பாடியவர்கள்:என்.எஸ்.கிருஷ்ணன் , சீர்காழி கோவிந்தராஜன் ] என்ற பாடலை அகத்தூண்டலாகக் [Inspiration] கொண்டு
” சாதி மத பேதமின்றி சண்டை சிறு பூசல் இன்றி சகலரும் செல்லும் சினிமா” [பாடியவர் : இளையராஜா ] பாடலில் மேல் சொன்ன என்.எஸ்.கிருஷ்ணன் பாடலின் நையாண்டி தன்மை நிறைந்திருக்கும்.

சி.ஆர் .சுப்பராமன் இசையமைத்த தேவதாஸ் படத்தில் இடம் பெற்ற
” ஓ.. ஒ . ஒ தேவதாஸ் …” என்ற பாடலை [பாடியவர்கள்: கண்டசாலா + ராணி ] ஆதாரமாக வைத்துக் கொண்டு” அடி வான் மதி என் பார்வதி “ [படம் : சிவா ]
பாரியாத பூவே அந்தக தேவ லோக தேனே “

” ஒ.. பாட்டி நல்ல பாட்டி தான் “போன்ற பாடல்களை அற்ப்புதமாக அமைத்ததுடன் , வாத்திய இசையால் நம்மை புதிய உலகத்திற்கும் அழைத்துச் சென்றிருப்பார்.தேவதாஸ் பட பாடலின் அந்த டியூன் நமக்கு பரீட்ச்யமாயிருந்தாலும் , அதையும் தாண்டி பல்வேறு நிலையில் அது புது பாடலாகி விட்டது.அந்த பாடலில் நம்மை வைத்து புதிய உலகத்தைச் சுற்றி காட்டியது போல.!! நமக்கு தெரிந்த டியூன் தான எனினும், நமக்கு தெரியாத டியூனும் அதில் இருக்கும்.கீழ் கண்ட பாடலிலும் இது போன்ற செய்திகள் உண்டு.

” முதன் முதாலாக காதல் டூயட் பாட வந்தேனே ” [படம்: நிறம் மாறாத பூக்கள் ] என்ற பாடலின் நடுவே “எழிலார் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ” என்ற வரிகளைக் கொண்ட தேவதாஸ் பட பாடலான ” சந்தோசம் தரும் சவாரி போவோம்” என்று தொடங்கும் பாடலின் வரிகளை அனாயாசமாக பயன்படுத்தியிருப்பார்.

” தரைமேல் பிறக்க வைத்தான் ” [ பாடியவர்:டி.எம் .சௌந்தரராஜன் ] [இசை: விஸ்வநாதன் ராமூர்த்தி, படம் : படகோட்டி]என்ற பாடலை அகத்தூண்டலாகக் கொண்டு [Inspiration]

” கடலிலே எழும்புற அலைகளை கேளடி ” [பாடியவர் : இளையராஜா ] பாடலில் மேல் சொன்ன தன்மை நிறைந்திருககும்.
இவை இசையில் நனவோடை யுத்தி எனலாம்.நினைவுப் பாதையில் மேல் மன எண்ணத்தின் செயல்பாடாகவும் , அடிமன எண்ணத்தின் செயல்பாடாகவும் அமையும் முறை.இந்த யுத்தி இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அலை , அலையாக எழும் உள் மன எண்ணங்களை சித்தரிக்கும் முறை என்பர்.

” நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் ” [ படம் : அன்பே வா / பாடியவர்:டி.எம் .சௌந்தரராஜன் ] [இசை: விஸ்வநாதன் என்ற பாடலை அகத்தூண்டலாகக் கொண்டு

” புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா” [ படம்: அபூர்வ சகோதரர்கள் ] என்ற பாடலை, யாரும் கண்டு பிடிக்க முடியாதவாறு அமைத்தார்.அது மட்டுமல்ல தமிழ் நாட்டுபுற இசையின் நுண்ணிய அழகுகளை எல்லாம் காட்டியதுடன் , அதன் நுண் விவரணைகளின் மூலம் தமிழ் செவ்வியல் இசையின் [கர்னாடக இசை ] ராகங்களை காட்டி , நாடுப்புற இசையின் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு வடிவம் தான் தமிழ் செவ்வியல் இசை [கர்னாடக இசை ] என்பதை எத்தனையோ பாடல்களில் நிரூபித்தவர்இளையராஜா. சிந்துபைரவி [1984] படத்தில் , ” பாடறியேன் படிப்பறியேன்” என்ற பாடல் மூலம் ஒரு காட்சியில் , நாடுப்புற இசையிலிருந்து தான் கர்நாடக இசை வந்தது என நிரூபிக்கும் ஒரு காட்சி எல்லோரும் அறிந்தது.

ஆனாலும் நூற்றுக்கணக்கான ,அவர் இசையமைத்த பாடல்கள் நாட்டுப்புற பாணியில் அமைந்த பாடல்களிலும் செவ்வியல் இசை ராகங்கள் இருக்கும்.அந்த ராகங்களை எல்லாம் இழுத்து நாட்டுப்புற சாயம் போட்டு விட்டிருப்பார்.இவ்விதம் மெட்டுக்களை மாற்றுவதை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் வார்த்தையில் சொல்வதனால்” வேட்டிக்கு சாயம் பூசுவது போல “.!

” நெஞ்சம் மறப்பதில்லை அது ” [ பாடியவர்:பி .பி .ஸ்ரீநிவாஸ் + சுசீலா ] [இசை: விஸ்வநாதன் ராமூர்த்தி, படம் : நெஞ்சம் மறப்பதில்லை [1963 ]என்ற பாடலை அகத்தூண்டலாகக் கொண்டு [Inspiration]

வான் உயர்ந்த சோலையிலே – இதயக்கோயில் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி பாடிய அந்த பாடலின் ஆரம்பத்தில வரும் ஹம்மிங்கை அமைத்திருப்பார் இளையராஜா.

இந்த மாதிரியான இசையில் அகத்தூண்டுதல் [ INSPIRATION ] போன்ற விடயங்களை , நுட்பங்களை எல்லாம் பொது ஜனங்களுக்கு வெளிப்படையாகச் சொன்னவரும் இளையராஜா தான்!!. மக்கள் மத்தியில் இசை பற்றிய ஒரு விழிப்புணர்வும் , விரிந்த பார்வையும் அவரின் வருகையால் ஏற்ப்பட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.மதுரையில் 1987 இல் நடைபெற்ற , ஆர்மேனியாவில் இடம் பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்காக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மூத்த இசையமைப்பாளர்களான கே.வீ.மகாதேவன் , எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் , விஸ்வநாதன் ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்களை எல்லாம் எப்படி, எப்படி வெவ்வேறு பாடல்களாக மாறினார் என்பதை அவர்கள் முன்னிலையில் பாடிக்காண்பித்தார்.அதனை விஸ்வநாதன் ” இது நமது தொழில் ரகசியம் , அதை இங்கே பேசக்கூடாது”என்று சொல்லி விட்டு தானும் எப்படி எப்படி எல்லாம் மாற்றினேன் என்று பாடிக்காட்டினார் . அன்று அந்த மேடையில் இளையராஜா பாடிக்காட்டிய ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்கள வருமாறு.

1. ” வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ” [ படம் : பாத காணிக்கை ]

2. ” பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா” [படம் : பணத்தோட்டம் ]

3. ” மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று ” [படம் : பந்தபாசம் ]

இந்த மூன்று பாடலகளையும் மாற்றி, மாற்றி அந்தந்த மெட்டிலும், அதே சமயம் அடுத்த பாடலின் மெட்டலும் பாடலாம். ” வீடு வரை உறவு வீதி வரை ” என்ற பாடலின் மெட்டை வைத்துக் கொண்டு மற்ற இரண்டு பாடல்களையும் பாடலாம். அதே போலவே ஒவ்வொரு பாடல்களையும் அவ்விதம அடுத்தடுத்த பாடலின் மெட்டில் பாடலாம்.சந்தம் ஒன்றாக இருக்கும்.இந்த பாடல்களின் அமைப்பு முறையை இளையராஜா பின்னரும் பலமேடைகளில் பாடிக்காட்டியிருக்கிறார்.இந்த சந்தப்பாடல் என்பது தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.அது தனியே ஒரு துறையாக கருதப்படுவதாகும்.அவை வண்ணப்பாடல்கள் என்றும் அறியப்படுகின்றன.இந்த வண்ணப்பாடல்களில் சமயக் குரவரான சம்பந்தர் வியக்கத்தக்க பாடல்களை எழுதியுள்ளார்.அருணகிரிநாதரும் சிறப்பான சந்தக்கவிதைகளை தந்தவராவார்.அருணகிரிநாதரின் “ஏறுமயில் ஏறு விளையாடும் முகம் ஒன்று ” சந்தப்பாடலை அடிப்படையாககொண்டு இளையராஜா மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்று கேளு என்ற கரகாட்டகாரன் படப்பாடலை தந்தார்.அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாகும்.

நாட்டுப்புற இசை என்றாலே ” எல்லாம் வெறும் தன்னானே , தன்னானே தானே “என்றும் தங்களை ” மேன்மக்களாக ” கருதிய , புதுமைப்பித்தன் வார்த்தையில் சொன்னால் ” அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகள் ” இளையராஜா பயன் படுத்திய நாட்டுப்புற இசையால் கொதிப்புற்றார்கள்.

” நிதி சால சுகமா – ராம
நி சந்நிதி சேவ சுகமா”

[ அதாவது காசு சம்பாதிப்பது நல்லதா ? இல்லை உன் சந்நிநிதியில் சேவை செய்வது நல்லதா ?] என்று பாடி ” காசுக்காக பாட மாட்டேன் ” , ” மன்னனையும் புகழ்ந்து பாட மாட்டேன் ” என்று சங்காரம் செய்த தியாகய்யரை பெருமையாக , முன் மாதிரியாகக் காட்டி விட்டு , ” ஒரு கச்சேரிக்கு இவ்வளவு தொகை தந்தால தான் கச்சேரிக்கு வருவேன்” என்று தியாகய்யரின் ” கொள்கைகளை ” குழி தோண்டிப்புதைத்தவர்கள் இளையராஜாவை எதிர்த்தார்கள். 50 கீர்த்தனைகளை வைத்துக்கொண்டு பிழைப்பை நடாத்தியவர்கள் நாட்டுப்புற இசையின் வல்லமையை காட்டிய இளையராஜா மீது ” அறம் ” பாடினார்கள்.1977 , 1978 காலங்களில் ” இதயம் பேசுகிறது ” என்ற வார இதழில் கர்னாடக இசையின் கொடுமுடி என்று கருதப்பட்ட இசை விமர்சகர் சுப்புடு, இளையராஜாவை தாக்கி எழுதிக்கொண்டிருந்தார்.அதில் வெளிப்பட்டதேல்லாம் காழ்ப்ப்புணர்ச்சி தவிர வேறொன்றுமில்லை. பிற்காலத்தில் அதே சுப்புடு இளையராஜாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.சுப்புடுவுடன் நேரடியாகப் பழகிய ராகவன் தம்பி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்.

” பிற்காலத்தில் சுப்புடு இளையராஜா பற்றிய தன்னுடைய கருத்துக்களை முற்றிலும் மாற்றிக் கொண்டார். நேர்ப்பேச்சில் ஒருமுறை உண்மையாவே அவன் ராகதேவன் தான்யா… அவனை மாதிரி கல்யாணியையும் , ஹம்சானந்தியையும் இப்படிக் கும்பாபிஷேகம் பண்ணி அசத்த முடியாதுய்யா… என்பார். இது தவிர இளையராஜாவின் செந்தூரப்பூவே பாடலை சுப்புடு சொக்கிப் போய்க் கேட்டதை நான் கண்டிருக்கிறேன்.”

அதையெல்லாம் தாண்டி கர்னாடக இசை தனக்கு சாதாரணம் என்பது போல , அதில் பயன்படும் ராகங்களை வைத்து பல அற்புதங்களை செய்துகாட்டினார்இளையராஜா. .அதுமட்டுமல்ல கர்நாடக இசைக்கு ஒரு புதிய ராகத்தையும் கண்டு பிடித்து வழங்கியுள்ளார்.அந்தராகத்தின் பெயர் பஞ்சமுகி என்பதாகும்.” எல்லாம் வெறும் தன்னானே , தன்னானே தானே” என்று சொன்னவர்களுக்குப் பதிலடியாக நாடுப்புற இசையின் சிறப்புக்களை அங்கும் ,இங்கும் அலைய விட்டு ,தமிழ் செவ்வியலிசையின் [ கர்னாடக இசை ] ராகங்களில் ஊடுருவி அவற்றுடன் மேலைத்தேய செவ்வியல் வாத்திய இசைஇலிருந்து புறப்படும் சௌந்தர்ய சங்கீத ஒலியை குழைத்து உணர்வில் தங்கவும் , மனதை உருக வைக்ககூடிய பாடல்களால் மக்களை கட்டிப்போட்டார்.இவ்விதமான இசையை இந்தியா என்றும் கேட்டதில்லை.அதன் அடிநாதம் நாட்டுப்புற இசையிலேயே இருந்தது எனலாம்.அதுமட்டுமல்ல இசை மீதிருந்த அதீத ஈடுபாடும் ,இசை பற்றிய தேடலும் , உலக இசை பற்றிய ஆர்வமும் அவரை அகன்ற வெளிகளில் சாதாரணமாக அவரைப் பயணிக்க வைத்தது. அதனை இசைஞானி இளையராஜா ” என் கனவும் நனவும் இசையே ” என்று மிக அழகாகச் சொல்வார்.

அந்த இசை மூலம் தமிழ் மக்களின் இசை எனபது கர்னாடக இசை , மட்டுமல்ல நாட்டுப்புற இசையும் தான் என்பதை நிரூபித்துக் காட்டினார்.இசை ஒரு பண்பாட்டிலிருந்து உருவாகிறது என்பது உலக அளவில் ஒப்புக்கொண்ட கருத்தாகும்.இந்தக் கருத்தை தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது இசை எது என்பதை தெளிவு படுத்திக் காட்டியவர் இளையராஜா.நாட்டுப்புற இசை என்பது உலகில் தோன்றிய எல்லா இசைக்கும் அடிப்படையானது என்பதை உலக இசையறிந்தவர்கள் அறிவார்கள்.நாட்டுப்புற இசையில் இருந்தே செவ்வியல் இசை பிறந்தது என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.தமிழ் மொழியிலும் அவ்வாறே.எனினும் தமிழில், தமிழ் மக்களின் உழைப்பால் உருவான இசைகளை திருடிய கூட்டம் நாட்டுபுற இசையை இழிவானதாக் கருதியது.இவ்விதம் உலகில் எந்த இசையையும் யாரும் இவ்வளவு கேவலாமகக் கருதுவதில்லை..இந்த நிலையை உடைத்தெறிந்தவர் இசைஞானி இளையராஜா தான் என்பது எல்லோரும் அறிந்ததே.” இசை என்பது ஒரு சமூகத்தின் உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம்” என்பர்.. அந்த வகையில் உலக இசைக்கு ஒரு பெரிய கொடையாக கிடைத்தது தமிழ் செவ்வியல் இசையான கர்னாடக இசையாகும்.குறிப்பாக தமிழ் மக்கள் உருவாக்கிய ராகங்கள் உலக இசைக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கொடையாகும்.அதுவும் தமிழ் நாட்டுப்புற இசை தந்த கொடை எனலாம்.

நாட்டுப்புற இசையிலிருந்து அகத் தூண்டுதல் [ INSPIRATION }பெற்று , அவற்றைத் தங்கள் உள்ளத்தில் தேக்கி , தமது படைப்புக்களில் மதத்தான அனுபவமாக மாற்றிய உலக இசை மேதைகளின் வரிசையில் இடம் பிடிக்கிறார் இளையராஜா.

இலக்கியத்தில் புதுமை செய்ய வேண்டும் என்றால் பாமரர்களின் மொழி நன்கு கைவரப் பெற வேண்டும் என்பார் பேராசிரியர் சித்தலிங்கைய்யா. அது இசைக்கும் பொருந்தும் எனலாம்.நாட்டுப்புற இசையின் பாதிப்புப் பெற்ற இசைகலைஞர்கள் பலர் மிகச் சிறந்த இசை மேதைகளாக , இசையமைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை உலகெங்கிருந்தும் எடுத்துக் காட்டலாம்.மேலைத்தேய இசையுலகில் சிம்பொனி இசை மேதைகளான மொசார்ட், ஹைடன் , மொசார்ட் , பீத்தோவன் , டோவாரக் மற்றும் பார்தாக் , வாஹன் வில்லியம்ஸ் போன்ற எண்ணற்ற கலைஞர்களை உதாரணம் காட்டலாம்.

ஜோசெப் ஹைடன் [Joseph Haydn [ 31.03. 1732 – 31.05.1809 ] அவரது குடும்பத்தின் இசையார்வத்தால் தனது இளமைக்காலம் தொட்டு நாட்டுபுற இசையில் ஆர்வம் காட்டி வந்தார்.அவரது தாய், தந்தை பாடிய நாட்டுப்புற பாடல்கள் , அவரது முதுமைக்காலத்திலும் மறையவில்லை என்று அவரது சுயசரிதை எழுதிய georg August Griesinger என்பவர் குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமல்ல இளைஞாக இருந்த ஹைடன் நாட்டுப்புற இசையை சேகரிக்க வயல்களிலும் வேலை செய்தார் என்று Giuseppe Carpani என்ற எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார். ஹைடன் ஜிப்சி இசையிலும் மிக்க ஈடுபாடு காடினார்.அவரது இசைக் குழுவில் பல ஜிப்சி இனக்கலைஞர்கள் பங்களித்தார்கள்.தனது இசைப்படைப்புக்களில் தேவையான இடங்களில் விரிவாக நாட்டுப்புற இசையை பயன் படுத்தியிருக்கிறார் என்று இசை விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

மொசார்ட் [ Mozart 1756 – .1791 ] பிரெஞ்சு நாட்டுப்புற இசையிலும் ஈடுபாடு கட்டியவர்.பிரெஞ்சு நாட்டுப்புற இசையிலிருந்து அவர் பெற்ற உத்வேகம் [ Inspiration ] “Variation on the French Folk song ” Twelve Variation on ‘ Ah vous dirai -je , Maman’ என்ற இசை உருவாகக் காரணமாகியது. இந்த இசை வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டதே Twinkle..Twinkle.. Little Star , Baa,Baa black Sheep போன்ற குழந்தைகளுக்கான பாடல்கள்.

பீத்தொவேன் [ Beethoven 1770 – 1827 ] தனது ஆரம்பகால இசைப்படைப்புகளில் தான் கேட்டு மகிழ்ந்த நாட்டுப்புற இசையை, இயற்க்கை ஒலிகளை சிம்போனிகளில் பயன் படுத்தியுள்ளார்.அதுமட்டுமல்ல ஆங்கிலேய , ஐரிஸ் நாட்டுப்புறப் பாடல்களிலும் ஈடுபாடுகாட்டினார்.

அந்தோனியோ ட்வோரக் [ Antonio Dvorak 1841 – 1904 ] என்ற சிம்பொனி இசைக்லைஞரும் தனது வழிகாட்டிகளான மொசார்ட் , பீத்தோவன் , ஹைடன் போன்று ஐரோப்பிய நாட்டுப்புற இசையிலும் , இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க நாட்டுப்புற இசையிலும் ஈடுபாடுகாட்டினர்.அவர் 1892 – 1895 காலப் பகுதிகளில் அமெரிக்காவில் தங்கி வாழ்ந்தார். குறிப்பாக அமெரிக்கப் பூர்வீக மக்களின் இசையையும் , ஆபிரிக்க கறுப்பின மக்களின் இசையிலும் அதீத ஈடுபாடு காட்டினார். Harry Burliegh என்ற கறுப்பின இசைக்கலைஞர் அவரால் முன்னுக்கு கொண்டு வரப்பட்டார். அவர் மூலம் கறுப்பின மக்களின் மதம் சார்ந்த இசையை [ Spiritual ] அறிமுகம் செய்தார். Harry Burliegh என்பவரே கறுப்பின மக்களில் தோன்றிய முதல் செவ்வியல் இசைக்கலைஞராக விளங்கினார். ட்வோரக் தனது ஒன்பதாவது சிம்போனியில் பூர்வீக அமெரிக்க மக்களின் இசையை பயன்படுத்தினார்.Dvorak – Symphony 9 ” From the New World” என்பது அந்த இசை வடிவத்தின் பெயராகும்.
இந்திய அளவில் ,ஹிந்தி திரை உலகில் எஸ்.டி.பர்மன் ,ஹேமந்த் குமார், சலீல் சௌத்திரி , ஷங்கர் ஜெய்கிசன் , நௌசாத் , சி.ராமச்சந்திரா , ரோசன் , மதன் மோகன் ,ஜெயதேவ் போன்ற இன்னும் பல கலைஞர்களை நாட்டுப்புற இசையில் ஈடுபாடு காட்டியதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.எஸ்.டி.பர்மன் ,ஹேமந்த் குமார், சலீல் சௌத்திரி போன்ற இசைமேதைகள் வங்காள நாட்டுப்புற இசையிலும் . சி.ராமச்சந்திரா மராட்டிய நாட்டுப்புற இசையிலும் , சங்கர் ஜெய்கிசன் பஞ்சாப் நாட்டுப்புற இசையிலும் தோய்ந்ததால் தான் , திரையில் இசை பின்னனல்களாக அவற்றை இழைத்து அற்ப்புதங்களை நிகழ்த்தினார்கள்.

குறிப்பாக எஸ்.டி. பர்மன் வங்காள நாட்டுப்புற இசைக்கலைஞராக தனது இசை வாழ்வை தொடங்கியவர். தாகூரின் பாடல்களால் உந்துதல் பெற்றவர்.வங்காள நாட்டுப்புற பாடலகளை பாடுவதில் வல்லவரான எஸ்.டி.பர்மன் வங்காள நாட்டுப்புற பாடல்களைப் பாடி இசைத் தட்டுக்களாக வெளியிட்டுள்ளார்.நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்ல செவ்வியலில் மெல்லிசை கலந்த பாடல்களைப் பாடுவதிலும் திறமையானவராக இருந்தார்.அவருடைய இசையமைப்பில் உருவான பல ஹிந்தி திரைப்பட பாடலகளில் வங்காள நாட்டுப்புற இசையின் தாக்கம் இருப்பதை நாம் கேட்கலாம்.ஹிந்தி திரைப்பட இசையுலகின் மிகச்சக் சிறந்த இசையமைப்பாளர்களில் இசைமேதை எஸ்.டி. பர்மன் மிக முதன்மையானவர் எனலாம். இவர் இசையமைத்த sujatha [1959] என்ற படத்தில் அவர் இசையமைத்து , அவரே [எஸ்.டி. பர்மன் ] பாடிய அற்ப்புதமான பாடலான

SUN MERE BANDHU RE என்ற பாடலின் ஹம்மிங்கை அடிப்படையாக வைத்துக் கொண்டு , மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாகப்பிரிவினை படத்தில் இடம் பெற்ற

” தாழையாம் பூ முடித்து
தடம் பார்த்து நடை நடந்து ” என்னும் ஒரு கிராமியப்பாடலாக வடித்துத் தந்தார்கள்.தமிழில் இந்தப் பாடல் சிறந்த நாட்டுற இசை என்ற அந்தஸ்த்தை பெற்று விளங்குகிறது.உண்மையில் அது வங்காள நாட்டுப்புற இசையின் கொடையாகும்.இந்தப் பாடல் அமைந்த ராகம் பிலகரி.இந்தியாவில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த ராகம் பயன்பாட்டில் உள்ளது.

மேலே சொன்ன எஸ்.டி. பர்மனின் பாடலின் சாயலில் இளையராஜா அமைத்த பாடல்.

” உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் ” – படம் : பொண்ணு ஊருக்கு புதிசு – பாடியவர்கள்: இளையராஜா + ஜென்சி இந்த பாடலில் தோரணைகளில்சில ஒற்றுமை இருக்கிறதெனினும் , முழுமையாக வெளியே தெரியாது.

அவரைப் போன்றே ஹேமந்த் குமார் என்கிற இசை மேதையும் வங்காள இசைவடிவங்களிளிருந்து உந்துதல் பெற்றவர். சி.ராமச்சந்திரா மராட்டிய நாடுப்புற இசையுடன் மேலைத்தேய[ penny goodman ] இசையை கலந்த முன்னோடியாவார்..Albela [ 1952 ] படத்தில் இந்த வகைக் கலப்பு இசையை கேட்கலாம்.

எஸ்.டி. பர்மன் தனது அந்திமக்காலத்தில் இசையமைத்த ” ஆராதனா ” , ” மிலி ” போன்ற திரைப்படங்களில் வெளி வந்த பாடல்கள் மெல்லிசையில் சாகாவரம் பெற்ற பாடல்களாக விளங்குகின்றன.சலீல் சௌத்திரி வங்காள நாட்டுப்புற இசையுடன் , மேலைத்தேய செவ்வியல் இசை வடிவத்தையும் இணைத்து பல இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.மதுமதி என்ற திரைப்படத்தில் வரும் பாடல்களில் அவருடைய இனிமையான கலவை இசையை நாம் கேட்டு மகிழலாம்.மலையாளத்தில் அவர் இசையமைத்த ” செம்மீன் ” படப்பாடல்களான ” கடலின் அக்கறை போனோரே “[ பாடியவர் ஜேசுதாஸ் ] ,” மானச மைனே வரு ” [ பாடியவர்: மன்னா டே ] , ” பெண்ணாளே பெண்ணாளே.. ” [ பாடியவர்கள்: ஜேசுதாஸ் + லீலா ] போன்ற தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் புகழ் பெற்றவையாகும். அந்தப் பாடலகளில் வங்காள நாடுப்புற இசையின் தெறிப்புக்களை நாம் கேட்கலாம்.

எஸ்.டி.பர்மன் ,ஹேமந்த் குமார், சலீல் சௌத்திரி , ஷங்கர் ஜெய்கிசன் , நௌசாத் , சி.ராமச்சந்திரா , ரோசன் , மதன் மோகன் ,ஜெயதேவ் போன்ற இசை மேதைகளை இசைஞானி அடிக்கடி நினைவு கூருவதும் , அவர்களை போற்றுவது தற்ச்செயலானது அல்ல.இசையில் ஒருவன் சாதனை படைக்க வேண்டும் என்றால் அவனுக்கு மக்கள் இசை வசப்பட்டிருக்க வேண்டும் என்பதை தனது இசை முன்னோர்களின் வழியில் சென்று , அவர்களையும் மீறி இசையில் பிரமிப்புக்களை செய்து காட்டியவர் இசைஞானி இளையராஜா.இந்த பிரமிப்புக்கள் தொழில் நுட்பத்தால் செய்யப்பட்டவை அல்ல .

கலையில் தொழில் நேர்த்தியின் அவசியம் குறைத்து மதிப்பிட முடியாததெனினும் , தொழில் நுட்பம் மட்டும் கலையாகி விடாது.உணமையான கலை என்பது தொழில் நுட்பத்தையும் தாண்டிச் செல்லுவதாகும்.தொழில் நுட்பத்தை வாகனமாகக் கொண்டு கற்பனையின் உச்சங்களை எல்லாம் மிகச் சாதாரணமாக தாண்டிச் சென்றிருப்பார்இளையராஜா.அவரது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் தலைமையில் , ஒன்றுபட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் கலைக்குழுவில் பணியாற்றிய காலங்களில் இளையராஜா பெற்ற உந்துதல், அனுபவங்கள் அவரது இசைக்கு அடிப்படையானதாக அமைந்தது எனலாம். தமிழ்நாட்டு கிராமங்களில் அவர்களது கலைக்குழுவின் கால்கள் படாத இடமில்லை என்பார்கள்.
” மாட்டு வண்டி போகாத ஊருக்குக் கூட எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு ” , இது வெறும் வார்த்தையல்ல ,பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம் , இன்று உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியை பல மைல்கள் தலையில் தூக்கி , நடந்து சென்று கிராமம் கிராமமாக பாடியிருக்கிறோம்.”- என்பார் இளையராஜா.

அந்த நாளைய அரசியல் செய்திகளை எல்லாம் தேவையான இடங்களில் பாடல்களாக அமைப்பதில் சிறந்து விளங்கிய பாவலர் வரதராஜன் அவர்களின் மூலம் இசை நுட்பங்களை எல்லாம் கற்றுக் கொண்டார். இந்த நினைவுகளை பற்றி இளையராஜா நிறைய சொல்லியிருக்கிறார்.இவ்வாறு ஊர் ஊராராக சுற்றியதன் மூலம் மக்களின் இசையை கற்றதோடு , மக்களின் ரசனையையும் அறியும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார் இளையராஜா.மற்ற இசையமைப்பாளர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மற்ற இசையமைப்பாளர்கள் திரையில் அறிமுகமாகி மக்களுக்கு அறிமுகமானவர்கள்.இளையராஜாவோ மக்களிடம் அறிமுகமாகி , அவர்களது ரசனைகளை அறிந்து கொண்டு திரைக்கு அறிமுகமானவர்.மக்கள் இசையில் நின்று கொண்டு , அவர்களே அதிசயிக்கும் வண்ணம் பல புதுமைகளை செய்து காட்டினார்.மக்களுக்கு தெரிந்த இசை , ஆனாலும் தெரியாத பக்கங்களையும் காட்டும் இசை வல்லுநர் ஆனார். அதனால் தான் எல்லாத் தரப்பு மக்களாலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.அவர் ஒரு சிறந்தைசையமைப்பாளர் என்பதை ஒரு பாமரனும் ஒத்துக் கொள்வான். பாலமுரளியும் ஒத்துக்கொள்வார்.

இசையைத் தங்கள் கோரப்பிடிக்குள் வைத்திருந்த இசைச் சனாதநிகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் வல்லமை அவரது இசைக்கு இருந்தது.” வெறும் தன்னானே ..தன்னானே ” என்று எள்ளி நகையாடியவர்களின் வாய்களுக்கு அவரது இசை பூட்டு போடப்பட்டது.சினிமா இசைக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது.கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் எல்லோரும் ரசிப்பார்கள் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இசைஞானி இளையராஜா.பல வழிகளைக் கொண்ட , பல திசைகளைக் கொண்ட ,கட்டுக்கடங்காத இசை உலகம் இளையராஜவினுடையது.இசை பற்றிய ஆழமான புரிதலும் , மரபும் , நவீனமும் பற்றிய விழிப்புணர்வும் கொண்டவர் இளையராஜா..இசையில் மண்வாசனை , தமிழ் செவ்வியல் இசை , மேற்கத்தேய

செவ்வியல்இசை , மேற்கத்தேய பொப் இசை போன்ற பல்வகை இசையிலும் ஆழமானபுரிதல் அவர்க்குண்டு.இசையில் நுனிப்புல் மேய்வது , அதைமறைக்க நவீன தொழில் நுட்ப ஒலிகளைப் பயபடுத்தி மக்களை பயமுறுத்துவது போன்ற செப்படி வித்தைகள் அவரது இசையில் கிடையாது.இசையில் நவீனம் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவர் இசைஞானி இளையராஜா.அவர் வளர்ந்த அளவுக்கு தமிழ் திரைத்துறையினர் வளராததால் ,சப்த சித்துவிளையாட்டுக்கள் , இசையில் நுனிப்புல் மேயும் சிறுபிள்ளைத்தனங்கள் படத் தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது.அவருக்கு இசையில் அகத் தூண்டுதலாக பல இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள்.தனக்கு முன்பிருந்த எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களை எல்லாம் நிரம்ப கேட்டிருக்கிறார்.எங்கோ

எதிரொலித்தவைகளை அல்லது எதிரொலிகளின் எதிரொலிகளாக ஒலிக்க விடுபவரல்ல ராஜா.பலவிதமான உணர்வுகளை நம்முள் எழச் செய்வது அவரது இசை. ” உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமில்லாத ஒன்று.. உங்கள் உணர்ச்சியின் முன் நீங்கள் செய்யும் தவறுகளும் , குற்றங்களும் மங்கிப் போய்விடும்.” – என்பார் இசைமேதை Yehudi Menuhin . இந்த இசை மேதையின் மேற்கோளுக்கு ஒப்ப சாதாரண நான்கு வரிகளில் உள்ள ஒரு சிறிய பாடலில் கூட இசையால் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் இளையராஜா. சாதாரணமாக உள்ள சில வரிகளை இசைக் காவியம் ஆக்கும் தன்மை அவரது இசைக்கு இருக்கிறது.நாயகன் படத்தில் வரும் Theme Music , இசையை எளிமையான நான்கு வரிகளை வைத்து படத்தின் ஆத்மாவை காட்டியிருப்பார் இசைஞானி.நாயகன்

God father [ 1972 ] என்ற புகழ் பெற்ற படத்தை அப்பட்டமாக காப்பியடித்து மணிரத்தினம் ” பெரிய ” டைரக்டர் ஆன படம். God father என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் Theme Music மிகவும் அற்ப்புதமாக இருக்கும்.அதை இசையமைத்தவர்கள் அந்த திரைப்படத்தை இயக்கியவரான Francis Ford Coppola என்பவற்றின் தந்தையாரான Carmine Coppola என்பவரும் Nino Rota என்ற புகழ் மிக்க இசையமைப்பாளரும் ஆவார்கள். அந்த திரைப்படத்தின் உயிர் மூச்சே அந்த Theme Music தான் என்று அடித்துச் சொல்லலாம்.வார்த்தையால் வர்ணிக்க முடியாதளவுக்கு வசீகரமும் , மர்மமும் , இனம் புரியாத சோகமும் , இனிமையும் நிறைந்த இசை என்பேன்.அந்த இசைக்காகவே அந்த படத்தை எத்தனையோ முறை பார்த்த ஞாபகம்.சிசிலியன் நாட்டுப்புற இசையில் இருந்து கிடைத்த மெட்டு என்பத எனது ஊகம்.அந்த மெட்டு கீரவாணி ராகத்திற்கு மிக நெருக்கமாய் உள்ள மெட்டு.

நாயகன் படத்தின் உயிரை கீழ்க் கண்ட நான்கு வரிகளை வைத்து காவியமாக்கியிருப்பார் இசைஞானி இளையராஜா.

” தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனை

யாரடித்தாரோ….”

சாதாரண சொற்களில் எவ்வாறு கவிதை ஆற்றலை வெளிப்படுத்துவது என்பதை பாரதி அருமையாக விளக்குவான்.

“கல்லை வைர மணி ஆக்கல் – செம்பைக்
கட்டித் தங்கம் எனச் செய்தல் – வெறும்
புல்லை நெல் எனப் புரிதல் …… ” பாரதி

என்னும் பாரதி வரிகளுக்கு ஒப்ப சாதாரண வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்துவிடுபவர் இளையராஜா.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் தன்னையும் விஸ்தரித்துக் கொண்டு , தான் கற்றவற்றிலிருந்து பெற்ற அனுபவம் மட்டுமல்ல தன ஆளுமையால் இசையில் புதிய பரிமாணங்களை செய்து காட்டியவர்ர் இளையராஜா.

இசை என்ற பேராற்றலில் வாத்தியங்களை தன் எண்ணத்திற்கும்,தான் விரும்பிய இடங்களின் எல்லைகளுக்கும் சென்று , தேவையான போது கட்டுப்படுத்தவும் , ரசிகர்களின் ஆழ் மன கடலின் இருக்கும் எண்ணங்களை , கற்பனை திறனைத் தூண்டி விடவும் , அநாசாயமாக இசையின் எல்லைகளை எல்லாம் தாவித் தாவி தாண்டும் ஆற்றல் பெற்ற ஓர் அற்ப்புத இசையை வழங்குவதில் இவருக்கு ஈடு இணையாருமில்லை எனலாம்.

மனித நுண்ணுணர்வில் உள்ளுயிர்ப்பை ஏற்ப்படுத்தும் இயற்க்கை வாத்தியக் கருவிகளை வைத்து இவர் எழுப்பிய இசை ஜாலங்களுக்கு தமிழில் ஈடு இணை யுண்டா ? இந்தியாவில் உண்டா?

அதுமட்டுமல்ல இசை மீதிருந்த அதீத ஈடுபாடும் ,இசை பற்றிய தேடலும் , உலக இசை பற்றிய ஆர்வமும் அகன்ற வெளிகளில் அவரைப் பயணிக்க வைத்தது.

வட இந்திய , ஹிதித் திரைப்பட இசை தமிழ் நாட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த சூழ் நிலையில் இளையராஜாவின் ” அன்னக்கிளி ” இசையால் ஹிந்தி மோகம் குறைந்தது என்பது சாதாரண விடயமல்ல.மிகத் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் பலர் அப்போதும் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.பின்னர் இளையராஜாவின் திரை இசை ஹிந்தியிலும் மெதுவாகப் பரவியது.

அதன் வளர்ச்சி 1990 க்ளில் அப்பட்டமாகப் பிரதி பண்ணுமளவுக்கு வளர்ந்தது.குறிப்பாக Anand Milin என்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் பல வெற்றிப்பாடல்களை எல்லாம் ஹிந்தி திரைப்பாட்ல்களாக்கியுள்ளார்.அந்த வகையில் ஒரு தமிழ் இசையமைப்பாளரின் பாடல்கள் ஹிந்தியில் அப்பட்டமாகக் கொப்பியடிக்கப்பட்டது இளையராஜாவின் பாடல்களே.! ஹிந்தி மொழி எதிர்ப்புக் காலத்திலும் ஹிந்தி பாடல்கள் பிரபலமாக இருந்தன.

இளையராஜாவின் தமிழ் பாடல்கள் பல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. சில உதாரணங்கள்.

1 . ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா – அக்கினிநட்சத்திரம் – இளையராஜா

Tap , Tap Tapori – film: Baagi [1990 ] Singers Amit kumar + Anand chitragupt Music: Anand Milin
2 . கேளடி கண்மணி பாடகன் சங்கதி – புது புது அர்த்தங்கள் – எஸ்.பி.பி

chandni raat Hai – film: Baagi [1990 ] Music: Anand Milin

3 . இளைய நிலா பொழிகிறதே – பயணங்கள்முடிவதில்லை – எஸ்.பி.பி
Neele Neele Ambar – film : Kalakar – Kishore kumar music : Kalyanji anandji
4 . ஒ , ப்ரியா ப்ரியா – இதயத்தைத் திருடாதே – மனோ + சித்ரா

ஒ, Piya ,Piya – film: Dil – Music: Anand Milin

5 . அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே – கோழி கூவுது – இளையராஜா

Ekh D0 theen Chor – film: tazaab [1988] Music: Laxmikanth Pyarelaal

6 . ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் – உறவாடும் நெஞ்சம் [ 1976 ] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை: இளையராஜா

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் – இளமை ஊஞ்சலாடுகிறது [1978] – எஸ்.பி.பி + வாணி ஜெயராம் இசை: இளையராஜா

நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் – film: அழியாத கோலங்கள் [1979] இசை: சலில் சௌத்ரி இந்த மூன்று பாடல்களிலும் ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது.

இளையராஜாவின் இசையில் மேலைத்தேய இசையின் பாதிப்பு.

1 . Danza, No1 from cancion Y danca [ Antonio Ruiz Pipa ]

எந்தப் பூவிலும் வாசம் உண்டு – முரட்டுக்காளை – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

2 . My favorite Things – Sound of Music

பூட்டுக்கள் போட்டாலும் – சத்திரியன் – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

3 . Singing In The Rain – Film : SInging In The rain – Gene Kelly

ஒ கோ மேகம் வந்ததோ – மௌனராகம் – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

4 . Corazon Herido – [ Wounded Heart ] Composed: conzalo Vargas – rythm: Bolivia

இவள் ஒரு இளங்குருவி – பிரம்மா – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

5 . My Mine – [ Hypnotic Tango ]

ஊர் ஓரமா ஆத்துப் பக்கம் – இதயக்கோயில் – இளையராஜா + சித்ரா இசை; இளையராஜா / இந்த பாடல் நேரடியாத் தெரியாது.தாளம் ஓரளவு ஒத்து போகும்.

6 . Rock Aroud The Clock

ரம்பம் பம் ஆரம்பம் – மைக்கேல் மதன காம ராஜன் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை; இளையராஜா

7 . Alegra En Almaguer – ” Les Flute Indienn syd

நேற்றிரவு நடந்ததென்ன – இன்னிசை மழை – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை; இளையராஜா

8 . Legend of the gorry – Richard clayderman – Desparado

ஒ ..பட்டர் பிளை – மீரா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + ஆஷா போஸ்லே இசை; இளையராஜா

9 . Money Money – ABBA

கண்மலர்களின் அழைப்பிதழ் – தைப்பொங்கல் – இளையராஜா + எஸ்.ஜானகி இசை; இளையராஜா

10 . Boney M – Sunny 1976

டார்லிங் டார்லிங் – பிரியா – பி.சுசீலா இசை; இளையராஜா/ மேற்சொன்ன Boney M – Sunny 1976 என்ற பாடலின் ஒரிஜினல் வடிவம் கீழே உள்ளது.

Victor D’mario & his Orchestra – Jueves [Tango ] rafael Rossi /Udenino toranzo ( recorded: 19.06. 1951)

11 . Roses From South – J.Strauss – Arranged by : James Last

புத்தம் புதுக் காலை – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.ஜானகி இசை; இளையராஜா

02:40 ஆவது நிமிசத்தில் கொஞ்ச இடத்தில் வரு இசைப்பகுதி ” புத்தம் புது காலை ” இசைப்பகுதியுடன் இசைந்து போகும்.

12 . Jezebel ( Million Seller – no 2 Hit ) 1951 – frank Laine – The Norman Luboff Choir

லவ்வுன்ன லவ்வு , மண்ணெண்ணெய் – மீரா – மனோ + மின்மினி இசை; இளையராஜா

இது போன்ற ஸ்பானிய இசையை , அல்லது ஜிப்சி இசையை எம்.எஸ்.விஸ்வநாதனும் ” சம்போ சிவ சம்போ ” போன்ற பாடலிலும் பயன்படுத்தியிருப்பார்.

13 . Lambada இசையை அடியொற்றி

ஊர் அடங்கும் சாமத்திலே -புதுப்பட்டி பொன்னுதாய் – சுவர்ணலதா + உமா ரமணன் இசை; இளையராஜா
Lambada பாடலின் மெல்லிசைப் பாங்கு ” ஊர் அடங்கும் சாமத்திலே ” என்ற பாடலில் தெரிப்புக்கலாக விழும்.

மேலைத்தேய செவ்வியல் இசையில் [ WESTERN CLASSICAL MUSIC ] உந்துதல் பெற்று இளையராஜா இசையமைத்த பாடல்கள்:.

1 . Dvorak’s New World Symphony , 3rd Movement

சிட்டுக் குருவி முத்தம் தருது – film:சின்னவீடு [1985 ] Singers: எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ். ஜானகி t Music: இளையராஜா

2. Shubert Last Symphony [ 1822 ] இந்த இசைப்பகுதியின் பாதிப்பில் உருவானது கீழ் உள்ள பாடல்.நேரடியாக தெரியாது எனினும் தோரணைகளில் அதன் சாயல் தெரியும்.

இதயம் போகுதே – film:புதிய வார்ப்புக்கள் [1978 ] Singers: ஜென்சி Music: இளையராஜா இந்த விடயம் சமீபத்தில் இளையராஜாவே சொல்லித்தான் அறிந்தோம்.

3 . Mozart , 25th Symphony , !st Movement

வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் – film: கிழக்கு வாசல் [1978 ] Singer: இளையராஜா Music: இளையராஜா மேலைத்தேய சிம்பொனி இசையைக் கூட எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டுப்புற இசைக்கு இசைவாக தந்திருப்பது ஆச்சரியப் படுத்துவதாகும்.அந்த இசையில் ஒரு மிகச் சிறிய துரும்பு தான் அது.அடஹி வைத்து விளையாடிஇருப்பார்.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் அது.

4 . George Bizet’s 1897 L’Arlésienne Suite Number One, 4th movement, called ‘Carillon’

A .B. C நீ வாசி – கைதியின் டயரி – ஜேசுதாஸ் – வாணி ஜெயராம்

5 . Vivaldi four Season Spring Part 1

பொன்மாலை பொழுது – film:நிழல்கள் [1980 ] Singers: எஸ்.பி.பாலசுரமணியம் Music: இளையராஜா இந்த பாடலில் மேல் சொன்ன இசைப்பகுதியின் தெறிப்புகள் தெரியும்.நேரிடையாக சொல்ல முடியாது. கேதார ராகத்தின் ஆளுமைக்கு இந்த பாடல் வந்து விடுவதால் புதிய பாடலாகி விடுகிறது.

இளையராஜாவின் தாக்கமில்லாத இசையமைப்பாளர்கள் யாருமில்லை என்னுமளவுக்கு , அவருடைய இசையின் தாக்கம் அவரது சம கால இசையமைப்பாளர்களிலும் இருந்தது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. ஜெர்மனியின் செந்தேன் மலரே – உல்லாசப்பறவைகள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை : இளையராஜா
சித்திரமே உன் விழிகள் – நெஞ்சிலே துணிவிருந்தால் – கே ஜே .ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் இசை : சங்கர் கணேஷ்

2. உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா
பட்டு வண்ண ரோசாவாம் – கன்னிப்பருவத்திலே – மலேசியா வாசுதேவன் + சைலஜா இசை : சங்கர் கணேஷ்

3. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள் – கே ஜே .ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் இசை : இளையராஜா
கொண்டையில் தாழம் பூ – அண்ணாமலை – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவா

4. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு – வைதேகி காத்திருந்தாள் – ஜெயச்சந்திரன் + வாணி ஜெயராம் இசை : இளையராஜா
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சூரிய வம்சம் – ஹரிஹரன் + சித்ரா இசை : எஸ்.எ. ராஜ்குமார்

5. வளையோசை கல கல கலவென – சத்யா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + லதா மங்கேஷ்கர் இசை : இளையராஜா
வேலை வேலை ஆம்பளைக்கு – அவ்வை சண்முகி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : தேவா

6. மழை வருது மழை வருது குடை கொண்டு வா – ராஜா கைய வச்சா -கே ஜே .ஜேசுதாஸ் + சித்ரா இசை : இளையராஜா
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் – சந்திரமுகி – மதுபாலகிருஷ்ணன் + ஆசா போலே இசை : வித்யாசாகர்

7. காட்டிலே கம்மன் காட்டிலே – ராஜகுமாரன் -எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : இளையராஜா
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் – பசும்பொன் – கிருஷ்ண சந்திரன் + சுஜாதா இசை : வித்யாசாகர்

8. உன்னைக் காணாமல் நானேது – கவிதை பாடும் அலைகள் -அருண்மொழி + சித்ரா இசை : இளையராஜா

ராசா ராசா உன்னை கட்டி வச்சேன் – பசும்பொன் – ஹரிகரன் + சித்ரா இசை :S.A. ராஜ்குமார்

9. துள்ளி துள்ளி நீ பாடம்மா – சிப்பிக்குள் முத்து – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை : இளையராஜா
ஆகாயம் கடல் நிறம் நீளம் தான் – பாசவலை – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா இசை :மரகதமணி

1 0. தீபங்கள் ஏற்றும் இது கார்த்திகை தீபம் – தேவதை – எஸ்.பி.சரண் + சந்தியா இசை : இளையராஜா
AIRTEL MOBILE ADVERT SONG – – MUSIC இசை :A.R.ரகுமான்

1 1. ஒரே நாள் உன்னை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது -எஸ்.பி.பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் இசை : இளையராஜா
சகானா சாரல் தூருதோ – சிவாஜி – உதித் நாராயன் + சின்மயி MUSIC இசை :A.R.ரகுமான்

1 2. என்கிட்டே மோதாதே – -எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா
மதுரைக்கு போகாதடி – அழகிய தமிழ் மகன் – உதித் நாராயன் + சின்மயி MUSIC இசை :A.R.ரகுமான்

ரகுமான் தான் இளையராஜாவின் பாடல்களை கேட்பதில்லை பேட்டிகள் கொடுப்பவர்.!!

1 3. மனசு மயங்கும் மௌன கீதம் – சிப்பிக்குள் முத்து – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை : இளையராஜா

மந்திரம் சொன்னேன் வந்துவிடு – வேதம் புதிது – மனோ இசை :தேவேந்திரன்

தேவேந்திரன் , மற்றும் ரவீந்திரன் போன்ற மிகச் சிறந்த இசையமைப்பாளர்களும் இளையராஜாவின் இசையில் அல்லது அவரது வாத்தியக் கலைவையால் பாதிப்புற்றவர்கள் எனலாம்.

ரவீந்திரன் [ 1941 – 2005 ] மிகச் சிறந்த இசையமைப்பாளராக மலையாள சினிமாவில் திகழ்ந்தவர்.கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்ற ரவீந்திரன் , கர்நாடக இசையுடன் மெல்லிசை கலந்த [ SEMI- CLASSICAL SONGS ] பாடல்களை மிக அற்ப்புதமான முறையில் இசையமைத்துத் தன்னை மேதை என நிரூபித்தவராவார். அவர் இசைInயமைத்த பரதம் , ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா , கமலதளம் , ராஜ சில்பி , சூரிய காயத்திரி போன்ற திரைப்படப் பாடல்கள் இனிமை மிக்கவையாகும்.தனக்கென ஓர் பாணியை அமைத்து வெற்றி பெற்றவர் ரவீந்திரன்.

இளையராஜா தனக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களைப் பற்றி வியந்து பல முறை போற்றி பாராட்டியுள்ளார். அவர்களது இசையின் தாக்கம் தன்னில் ஏற்ப்படுத்திய உணர்வுகளைப்பற்றியும் , அவர்கள தந்த பாடல்களின் சிறப்புக்களையும் பேசியிருக்கிறார்.ஹிந்தியில் ஹேம்சந்த் பிரகாஷ், நௌசாத், சி.ராமச்சந்திரா , எஸ்.டி.பர்மன் , ஷங்கர் ஜெய்கிஷன், ரோஷன், மதன் மோகன் , ஹேமந்த் குமார் , சலில் சௌத்ரி போன்ற இசைமேதைகளின் பாடல்களிலிருந்து அகத்தூண்டுதாலாக சில பாடல்களை அவர் தந்துமிருகிறார்.

சலில் சௌத்திரியின் இசைக்குழுவில் கிட்டார் வாத்தியக் கலைஞனாக அவர் பணியாற்றியதால் ,அவரில் பாதிப்பு இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக வாத்திய இசைக்கருவிகளின் சேர்க்கைகளில் அந்த பாதிப்பு இருப்பதாக நினைக்கிறன்.சல்லீல் சௌத்திரியும் மேலைத்தேய செவ்வியல் இசையில் மிக்க ஈடுபாடு கொண்ட கலைஞனாக இருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

1. KORA KAGAZ THA – ARATHANAA [ 1969 ] – KISHORE KUMAR + LATA MANGESHKAR MUSIC : S.D.BURMAN

தேவதை ஒரு தேவதை – பட்டாகத்தி பைரவன் [ 1979 ] – எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி இசை : இளையராஜா

2. KHILTE HAIN GUL YAHAAN – SHARMELEE [ 1971 ] – LATA MANGESHKAR MUSIC : S.D.BURMAN

செந்தூரப் பூவே செந்தூரப் பூவே – பதினாறு வயதினிலே [ 1977 ] – எஸ்.ஜானகி இசை : இளையராஜா மேல் சொன்ன பாடலின் inspiration ஆக இருக்கலாம். கண்டுபிடிக்க முடியவில்ல்லை. இந்த ராகம் ஆபேரி என்பதால சில ஒற்றுமையும் இருக்கலாம்.

3. O.. NIRDAI PREETAM – STREE [ 1961 ] – LATA MANGESHKAR MUSIC : C.ராமச்சந்திர

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே – கர்ணன் 1964 – பி.சுசீலா இசை: மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
மாலையில் யாரோ மனோத்து பேச – சத்திரியன் [ 1991 ] – ஸ்வர்ணலதா இசை : இளையராஜா

இந்தப் பாடல்களில் எங்கோ சில் சாயல்கள் உண்டு. நிச்சயமாக எங்கே என்று சொல்ல முடியாதளவுக்கு உந்துதலை [ inspiration ] ஒளித்து வைத்திருக்கிறார்கள். அருமையான INSPIRATION என்று சொல்லலாம். இந்த மூன்று பாடலும் அமைந்த ராகம் சுத்ததன்யாசி ராகம்.காடும் ,காடு சார்ந்த இடத்திற்குப் பொருத்தமான ராக்கம் என்பார்கள். இந்தப் பாடல்களும் காட்டுப்பகுதியிலே படமாக்கப்பட்டிருக்கும். மேலே தந்துள்ள ஹிந்தி படம் சகுதலை பாடுவதாக அமைக்கப்பட்டது. இந்த சுத்ததன்யாசி ராகம் சிலப்பதிகாரத்திலும் பயன் பட்டுள்ளது என்றும் கூறி பாடியும் காட்டுவார் தனது குரு நாதரான தன்ராஜ மாஸ்டர் என்று ஒரு பேட்டியில் இசைஞானி இளையராஜா சொல்லியிருக்கிறார்.அந்த தன்ராஜ் மாஸ்டர் என்பவர் வேறு யாருமல்ல. கர்னாடக இசை என்பது தமிழ்மக்களின் இசை என்பதை ஆணித்தரமாக நிரூபித்த மாமேதை ஆப்ப்ரகாம் பண்டிதரின் பேரன்.

4. o bekarar dil ho chuka hai – KHORAAR [ 1964 ] – LATA MANGESHKAR MUSIC : HEMANT KUMAR இந்தப் பாடலில் வரு முதல் ஹம்மிங் மட்டும் கீழ்க் உள்ள பாடலில் வரும்.

ராசாவே உன்னை விட மாட்டேன் – அரண்மனைக்கிளி [ 1992 ] – எஸ்.ஜானகி இசை : இளையராஜா

5. Buddham saranam gachchami – angulimaal [ 1964 ] – manna dey MUSIC : ANIL BISWAS இந்தப் பாடலில் வரு முதல் பகுதி மட்டும் கீழ்க் உள்ள பாடலில் வரும்.
தரை வராத ஆகாய மேகம் – சந்திரலேகா [ 1995 ] – உன்னிகிருஷ்ணன் இசை : இளையராஜா

6 . APNE DIL SE BADAI DUSHMA – BETAB [1983 ] – LATA + SHABIR KUMAR MUSIC: R.D.BURMAN
பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற பாடல் மேலே உள்ள பாடலின் மிகவும் STRONG INSPIRATION என்று சொல்லலாம்.

சினிமா இசையில் , வாத்திய இசையில் [ orchestration ] அவர் பெற்றிருந்த அசாத்தியமான திறமை சினிமா இசைக்கு வெளியேயும் சில இசைப்படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கிறது.அதற்க்குச் சிறந்த சான்றுகளாக விளங்குபவை

1. HOW TO NAME IT
2. NOTHHING BUT WIND

என்ற இரண்டு சிறந்த இசைப்படைப்புக்களாகும்.

” HOW TO NAME IT ” – [எப்படி பெயரிட்டு அழைப்பது ] , ” NOTHHING BUT WIND ” [ காற்றைத்தவிர வேறில்லை ] இவை மேற்கத்திய இசை , கர்நாடக இசை இணைந்த ஒரு கலப்பிசையாகும்.இரண்டு வித்தியாசமான செவ்வியல் இசைகளின் Inspiration னிலிருந்து கிடைத்த இசை.இந்த இசைத்தட்டுக்கள் வெளிவந்த போது இசைமேதை ரவிஷங்கருக்கு போட்டு காண்பித்த போது ” இதை இந்தியன் ஒருவன் உருவாக்கியிருக்க முடியாது ” என்றார். அதனை சுபின் மேத்தா கேட்க வேண்டும் என்று ரவிசங்கர் அனுப்பி வைத்த போது அந்த ஆல்பத்தைக் கேட்டு பிரமித்த சுபின் மேத்தா ” இந்த இசையமைப்பாளருக்கு எத்தனை உதவியாளர்கள்? ” என்று கேட்டாராம்.

இளையராஜா தனது மானசீகக் குருவாகக் கருதும் Paul Mauriat [1925 – 2006 ] என்கிற பிரெஞ்சு செவ்வியல் இசைக்கலைஞரின் வாத்தியஇசை அமைப்பை தனது இசையின் முன்னுதாதரணமாக[ Musical Inspiration ] கருதுபவர். Paul Mauriat வின் இசையின் பாதிப்பு இளையராஜாவின் வாத்திய இசைச் சேர்ப்பில் இருப்பதை நாம் காணலாம்.Paul Mauriat மேற்கத்தேய செவ்வியல் இசையை எடுத்துக் கொண்டு நவீன இசைக்கருவிகளுடன் இணைத்து புதுமை செய்த இசைமேதையாவர். HOW TO NAME IT என்ற இளையராஜாவின் படைப்பைக் கேட்டு விட்டு ” Somethink different and wonderfull ” என்றும் மிகவும் மனம் திறந்து பாராட்டியதுடன் , இதை நான் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார்.

இளையராஜாவின் இது போன்ற படைப்புக்களின் பரிசோதனை முயற்சிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தது சினிமா இசையே.அங்கு அவர் பெற்ற பயிற்ச்சியும் , அதனால் அவர் பெற்ற ஞானமும் , இசை பற்றிய விரிந்த பார்வையும் தான் அவரை இந்தியாவின் தலைசிறந்த இசைக்கலைஞன் ஆக்கியது.
கர்னாடக இசை ராகங்களை இளையராஜா பயன்படுத்தும் பாங்கும் அதில் பாண்டித்தியம் பெற்றவர்களும் வியப்பதாக இருக்கும்.பழத்தில் பிழிந்தெடுத்த ரசமாய் , ஜீவ ரசமாய் , ராகங்களின் உள்ளடக்கத்தில் அவர் நிகழ்த்தியிருக்கும் அற்ப்புதங்கள் அவரை ராஜசில்பி எனச் சொல்லும்.இசையில் புதுமை நோக்கில் எவ்வளவு தீவிரம் காட்டினாரோ அவற்றை எல்லாம் மரபில் நின்றே செய்து காட்டினார் என்பது இசை குறித்த அவரின் தீவிரத்தைக் காட்டும்.புழக்கத்தில் இல்லாத எத்தனையோ ராகங்கள் அழகின் லயங்களைக்காட்டி உயிர் பெற்று நிற்கின்றன.அதற்க்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும்.

ரீதி கௌளை என்ற ராகத்தில் அவர் இசையமைத்த ” சின்னக் கண்ணன் அழைக்கிறான் ” [ படம் ; கவிக்குயில் -1977- ] என்ற பாடல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சொல்லலாம்.இந்த ரீதி கௌளை ராகத்தில் இளையராஜாவுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் ஒரு முழுமையான பாடலில் பயன்படுத்தினார்கள் என்பதுஎனக்குத் தெரிந்த வரையில் இல்லை என்பேன். ராகமாலிகையாகப் பயன்பட்டிருக்கலாம் என நம்புகிறேன்.இதே போலவே நாடகப்பிரியா[ நெஞ்சே குருநாதரின் -படம்: மோகமுள் ] , பவானி [ பார்த்த விழி – படம்:குணா ], நளினகாந்தி [ என்தன நெஞ்சில் நீங்காத – படம்: கலைஞன் ] போன்ற பாடல்களை சொல்லலாம்.பிற இசையமைப்பாளர்கள் பயன்படுத்தாத ராகங்களை பயன்படுத்தி வெற்றி கண்டார்.

தமிழ் மண்ணில் வேர் ஊன்றி வளர்ந்த இசையை அடிப்படையாக வைத்துக் கொண்டு திரை இசையில் எத்தனையோ விதம் விதமான பாடல்களை அவர் தந்திருக்கிறார்.அவரது இசை பற்றி இன்னும் எத்தனையோ தலைப்புக்களில் கட்டுரைகள எழுதுவதற்கான விசயங்கள் உள்ளன.இந்தக் கட்டுரையின் பாடுபொருளான அகத்தூண்டுதல்[ INSPIRATION ] என்பதே இளையராஜாவின் இசை ஏற்ப்படுத்திய உந்துதலாலேயே எழுந்தது.பல விதமான இவரது பாடல்கள் இசை பற்றிய புத்துணர்வை என்னுள் ஏற்ப்படுத்தின.இனிமையான மெட்டுக்களைத் தந்த இசை மேதைகளின் இசைச் சாறுகளை எல்லாம் பிழிந்தெடுத்து . அதன் உன்னதங்களை எல்லாம் தனது அழகியல்மிக்க இசையால நமக்கு தொய்வில்லாமல் தந்த இசை மேதை இளையராஜா. அவரது இயல்பான திறமையும் , கடின உழைப்பும் தந்த பலன்களை நாம் மட்டுமல்ல இனி வரும் சந்ததிகளும் அனுபவிக்கப்போகிறார்கள்.

என்னதான் உலக இசை மற்றும் , மேற்கத்தேய இசையால் அவர் உந்துதல் பெற்று அவர் இசையமைத்திருந்தாலும் , அதனை நமது இசைக்கு ஏதுவாக அமைத்துப் புதுமை செய்தார்.அவற்றில் பிறநாட்டு சிறப்பான இசைவகைகளை இழுத்து வந்து நம் முன் நிறுத்தினாலும் , அவை நம்மீது ஆதிக்கம் செலுததுபவையுமல்ல.நம்மீது திணிப்பதுமல்ல.அவை வேறான இசையாக இருந்த போதிலும் அவற்றை நமது இசையுடன் இழைத்து இசைவாக்கியது தான் மாபெரும் சாதனை.அந்த இசை மூலம் அவர் நமது கற்பனைக்கு சவால் விட்டிருப்பார்.
நீரோடைகள் , பனிமலைகள், பச்சை பசும் வயவேளிகள்,மேகங்களால் மூடப்பட்ட நீல மலைகள், காலைக்கதிரின் ஒளிக்கற்றைகள , மாலைக்கதிரின் வெம்மை இது போன்ற பல இயற்கையின் பேரழகுகளை எல்லாம் தனது வாத்திய இசையால் நம் மனக் கண்களில் நிறுத்தினார்.பாடல்களில் அவர் செய்திருக்கும் இசைக்கோலங்கள் வேறு ஒருவர் தனது வாழ் நாளில் செய்ய வேண்டியதை குறுகிய கால எல்லைக்குள் , அதி வேகமாச் செய்து காட்டினார்.வேகமாச் செய்தாலும் தரத்தில் குறைந்தவயுமல்ல எனபது அவரது கலையாற்றலுக்கு எடுத்துக் காட்டாகும்.இன்று சில இசையமைப்பாளர்கள் வருசத்திற்கு
ஓரிரண்டு படங்களுக்கு இசையமைக்கப் படுகின்ற பாடுகளை நாம் அறிவோம்.அவ்விதம் நீண்ட நாட்கள் எடுத்தும் பாடல்கள் சிறப்பாக அமைவதில்லை.

இணையத் தளங்களில் பாடல்களை தேடுவோர் இளையராஜா கொடுத்துள்ள சிறந்த பாடல்களின் பட்டியலையும் ,அவரது சமகலாத்தவரும் , அவருக்குப் பின் வந்தவர்களின் சிறந்த பாடல் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவரது வேகமும் , தரமும் நிறைந்த பாடல்களைத் தரும் ஆற்றலை உணர்ந்து கொள்ளலாம்.எந்தவித பின் புலமும், கூட்டணியும் ,பரிவாரங்களும் ,அரசியல் பின் புலமும் இல்லாமல் தனித்து தன் இசை ஒன்றையே நம்பி “இசையின் எல்லா பரிமாணங்களிலும் ” வெற்றிக்கொடி நாட்டியவர் இந்திய அளவில் இளையராஜா ஒருவரே.

வட இந்தியாவில் ஹேம்சாந் பிரகாஸ் , அணில் பிஸ்வாஸ் , நௌசாத், S.D. பர்மன் , C.ராமசந்திரா , கய்யாம் , ஹேமந்த் குமார் , ஷங்கர் ஜெய்கிஷன் , சலீல் சௌத்திரி , மதன் மோகன் , ரோஷன் , O.P.நய்யார் , ரவி , R.D.பரமன் , தென்னிந்தியாவின் G.ராமநாதன் ,S.M.சுப்பைய்யா நாயுடு ,S.V. வெங்கட்ராமன் , C.R.சுப்பராமன் ,கோவிந்தராஜிலு நாயுடு , R.சுதர்சனம் , C.N.பாண்டுரங்கன் , S.தட்சிணாமூர்த்தி , K.V.மகாதேவன் , V.தட்சிணாமூர்த்தி , S.ராஜெஸ்வராவ் , A.ராமராவ் , S.ஹனுமந்தராவ் ,T.சலபதிராவ் , கண்டசாலா ,A.M.ராஜா ,பெண்டலாயா , பாப்பா , லிங்கப்பா , விஸ்வநாதன் ராமமூர்த்தி , R.கோவர்த்தனம், வேதா ,G.தேவராஜன் , வேதா, M.P.ஸ்ரீனிவாசன் , G.K.வெங்கடேஷ் , M.S.பாபுராஜ் போன்ற இசைமேதைகளின் இசை ஊற்றுகளிலிருந்து உருவான மகாநதியே இசைஞானி இளையராஜா.
பெருநதிகள் கொண்டு வந்து சேர்க்கும் பலவகை நறும் மூலிகைகள் மகாநதியில் கலந்தது போலவே மேல் சொன்ன அத்தனை இசைமேதைகளின் இசை , மற்றும் அவர்களது நிறைவேறாத ஆசைகள் , கனவுகள் , கற்பனைகள் இளையராஜாவின் இசையால் நிறைவேறியுள்ளன என்று சொல்லலாம்.ஒரு இசையமைப்பாளர் [ COMPOSER ] என்ற சொல்லுக்கு முழுமையாக அர்த்தம் கொடுப்பதாயிருந்தால் இளையராஜாவையே இந்தியாவின் ஒரே ஒரு COMPOSER என்று சொல்லவேண்டும்.

இசைஞானி இளையராஜா இந்த நூற்றாண்டு தந்த அதிசயம்.
ஊன் உயிர்கள் உள்ளமெல்லாம்
உருகிடவே அருவியைப்போல்
தேனமுதத் தென்றலிலே
கானமுதம் பொங்குதடா

ஊட்டும் தாய் அன்பினிலே
உள்ளதெல்லாம் சொல்லி உன்னை
வாட்டமின்றி கண் வளர
வாழ்த்தியதும் இன்னிசையே

ஆடுவதும் பாடுவதும் அவரவர்க்கு வாய்ப்பதல்லால்
வீடு தோறும் கீரையைப் போல்
விலை போட்டு வாங்குவதா ?

என்ற S.C. கிருஷ்ணன் பாடிய பழைய பாடல் வரிகளை கேட்கும் போது இளையராஜாவும் ,அவரது இசைப் பேராற்றலும் என் நினைவுக்கு வரும்.

“புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்…”அவர் பாடுவதாக காண்பித்தது தற்செயலானதா…?

அதுமட்டுமல்ல இசைமேதை மொசார்ட் பற்றி இன்னொரு இசைமேதையான பிரான்ஸ் சுபேர்ட் [ Franz Shubert ] சொன்ன வாசகங்கள் கன கச்சிதமாக இளையராஜாவுக்கும் பொருந்துகிறது!. இளையராஜாவின் இசையில் பிரமிக்கும் போதெல்லாம் இந்த வாசகங்கள் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை.
” A world that has produed a Mozart is a world worth saving. what a picture of a better world you have given us , Mozart ! ” – Franz Shubert

அவருக்குப் பின் வந்த பல இசையமைப்பாளர்கள் தாளத்தை வைத்து முழக்குவது , ஒரு மெட்டை வைத்துக் கொண்டு , அதையே திரும்ப,திரும்ப அலுப்புத் தட்டும் வரையில் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆற்றல் அற்ற படைப்புக்களை ஏதேதோ பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள்.

தொடரும் …..

முன்னைய பகுதிகள்:

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்
தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T.சௌந்தர்

மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் – தரும் தகவல்கள். பாகம் – 2:விஜய்

இலங்கை வரலாற்று நூல்கள் தரும் தகவல்கள்

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்களில் இடம் பெற்றுள்ள வராலற்றுச் சித்தரிப்புக்களிலிருந்து, மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு – பூர்வீகக் குடிகள் பற்றிய தகவல்களை அறிய முயற்சிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்கள் பலவாகும். இந்நூல்கள் கூறும் வரலாறு குறித்து பல விமர்சனங்கள் உண்டு. வில்ஹெம் கெய்கர், “இலங்கையின் புரதான நூல்களை நுணுகித் திறனாய்ந்து பார்ப்பதையே வரலாற்று ஆசிரியர் எவரும் சரியானதெனக் கருதுவார். இலங்கை நூல்களுக்கு மட்டுமல்ல. அனைத்து வரலாற்று ஆவணங்களுக்கும் இக்கூற்றானது பொருந்தும். இதில் எனக்கு முரண் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். வில்ஹெம் கெய்கர் குறிப்பிடுவதனைப் போல “நுணுகித் திறனாய்ந்து பார்ப்பதிலும்; ” பல சிக்கல்கள் உண்டு.

இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் நூல்களில் பிரபல்யமான வரலாற்று நூலாக அமைவது மகாவம்சம் ஆகும். மகாவம்சம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாநாமன்(ர்) என்பவரால் இயற்றப்பட்டது என்பர். “புராதன முனிவர்களால் தொகுக்கப்பெற்ற அது(மாகவம்சம்) இங்கே விரிவாகக் கூறப்படுகிறது. பழைய நூல் சுருக்கமானது.”(அத்1.சூத்.2) எனும் மகாவம்சக் குறிப்பு, அந்நூல் எழுதப்பட்ட முறையை விளக்குகிறது.

பாளி(பாலி) மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தினை “வில்ஹெம் கெய்கர்” 1908 ஆம் ஆண்டில் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பினை “திருமதி மபெல் ஹேனெஸ் பொடே”, “ஆங்கிலத்துக்கு மொழிமாற்றினார். “வில்ஹெல்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இலங்கை சர்க்காரால் அதிகார பூர்வமான நூலாக வெளியிடப்பட்ட பதிப்பை” எஸ். சங்கரன் தமிழ்ப்; படுத்தி 1962 இல் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் “வில்ஹெம் கெய்கர்” இன்; ஆங்கில நூலும் அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பும் காணப்படுகிறது.

மகாவம்சம் எழுதப்பட்டுள்ள முறையும், மகாவம்சம் மொழி பெயர்க்கப்பட்ட முறையும், மகாவம்சத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழைய வரலாற்றுச் சம்பவங்கள் கூறப்படுவதுவும் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வதில் பெரும் இடர்பாடுகளாகக் காணப்படுகின்றன. மேலும், “இலங்கை வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளவற்றை விட கூறப்படாதவை முக்கியமானவை” என்ற கருத்தும் உண்டு. எனவேதான் நுணுகித் திறனாய்ந்து பாரப்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட வேண்டியுள்ளது. மகாவம்சத்துடன் ஏனைய வரலாற்று நூல்கள் குறிப்பிடும் விடயங்களையும், ஏனைய வரலாற்று ஆதாரங்களையும்; இணைத்து நோக்குவதினூடாகவே சில முடிவுகளை தற்போதைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

முதலில் மகாவம்சத்தில் இலங்கையின் பண்டைய வரலாறு பற்றிக் கூறப்படும் தகவல்களில மட்டக்களப்பு பற்றிய தகவல்கள் கூறப்பட்டள்ளனவா என ஆராயலாம்.

நான்கு புத்தர்களின் வருகை

மகாவம்சத்தில் கூறப்படும் இலங்கை தொடர்பான முதல் வரலாற்றுத் தகவல் நான்கு புத்தர்களின் வருகையுடன் தொடர்பு பட்டவையாகும்.

மகாவம்சத்தின் பதினைந்தாவது அத்தியாயமான “மகா விகாரை” யின் 51 வது செய்யுளில் இருந்து 55 வது செய்யுள்வரை, தீவின் நண்பரான மஹிந்த தேரர் பின்னால் மகாஸ்தூபம் ஏற்பட்ட இடத்தக்குச் சென்றார் எனவும், அரண்மனைப் பூங்காவுக்குள் இருந்த காகுத தடாகத்தின் மேல்கரையில் சண்பகமலரால் அர்ச்சனை செய்தபோது பூமி அதிர்ந்தது எனவும், காவலன் காரணத்தை கேட்ட போது தேரர் அதற்கான காரணத்தைக் கூறினார் எனவும் விபரிக்கப்பட்டுள்ளது. காவலனுக்கு மஹிந்த தேரர் கூறிய காரணங்கள் 56 ஆம் செய்யுளிலிருந்து கூறப்பட்டுள்ளது.

56. பேரரசனே ! நான்கு புத்தர்களும் விஜயம் செய்த இதே இடம் ஸ்தூபம் கட்டுவதற்கு மிகவும் ஏற்றது. அது ஜீவர்களுக்கு ஆசியும், ஆனந்தமும் அளிப்பதாக இருக்கும்.
57. இந்த உலக யுகத்தில் முதலாவதாக காகசந்தர் என்பவர் இருந்தார்;. சத்திய முணர்ந்த அவ்வித்தகர், உலகமனைத்திலும் இரக்கம் கொண்ட உத்தமர்.

58. அப்போது இந்த மகாமேக வனத்துக்கு மகாதிட்டு என்ற பெயர். தலை நகரான அபாய கிழக்கே கடம்ப நதியின் மறுகரையில் இருந்தது.

59. அபயன் என்பவன் அதன் அரசனாக இருந்தான். அப்போது இத்தீவுக்கு ஓஜதீபம் எனப்பெயர்.

60. பூதங்களையுடைய சக்தியால் இங்கு மக்களிடையே கொள்ளை நோய் பரவியது. பத்து அபூர்வ சக்திகளையும் பெற்றிருந்த காகசந்தர் இதையறிந்தார்.

61. இதற்கு முடிவு கட்டி, இங்குள்ள மக்களை மதம் மாற்றித் தர்மத்தைப் பரப்புவதற்காக அவர் இரக்க சிந்தனையால் துண்டப்பட்டு,

62. நாற்பதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்தார்.

63. வந்து, தேவகூட மலை மீது நின்று கொண்டரர்.

இலங்கை தொடர்பான முதல் வரலாற்றுத் தகவல் இதுவே எனலாம்.

மகாவம்சத்தின் 91 வது செய்யுளிலிருந்து இரண்டவதாக இலங்கைக்கு வந்த புத்தர் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுகின்றன.

91. இரண்டாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் கோநாகமனர். எல்லாம் அறிந்த அவர் உலக மக்களிடம் இரக்கம் கொண்டவர்.

92. அச்சமயம் இந்த மகா மேக வனத்துக்கு மகாநோமா என்று பெயர். தலைநகர் வர்த்தமானா தெற்குப் புறம் இருந்தது.

93. அந்தப் பகுதியை அப்போது அண்ட அரசனுடைய பெயர் சமிதன் என்பதாகும். அப்போது இத் தீவுக்கு வரதீபம் என்று பெயர்.
94. வரதீபத்தில் அப்போது பஞ்சக் கொடுமை நிலவியது. இதை யறிந்த கோநாகமனர் அதற்கு முடிவு கட்டவும்,

95. பின்னர் தமது மார்க்கத்தை இத்தீவில் பரவச் செய்து மக்களை மாற்றுவதற்காகவும் அவர்,

96. இரக்க உணர்வினால் உந்தப்பட்டு முப்பதாயிரம் சீடர்களுடன் ஆகாயமார்க்கமாக வந்து

97. சுமணகூட மலை மீது நின்று கொண்டார்.

125 வது செய்யுளிலிருந்து மூன்றாவதாக இலங்கைக்கு வந்த புத்தர் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுகின்றன.

125. மூன்றாவதாக இந்த யுகத்தில் அவதரித்த புத்தர் காச்யபர். எல்லாம் அறிந்த இவர் ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர்.

126. மகா மேக வனத்துக்கு (அப்போது) மகா சாகரம் என்று பெயர்.

127. விசாலா எனப்பட்ட தலைநகரம் மேற்குப் புறம் இருந்தது. அதையாண்ட அரசனுடைய பெயர் ஜெயந்தன் என்பது. அப்போது இத்தீவுக்கு மந்ததீபம் என்று பெயர்.

128. அப்போது அரசன் ஜெயந்தனுக்கும், அவனுடைய தம்பிக்குமிடையே பயங்கரமான போர் மூண்டது.

129. பத்து விசேச சக்திகளைப் பெற்ற காச்யபர், போரினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளை அறிந்து இரக்கம் கொண்டார்.

130. அதற்கு முடிவு கட்டவும், பின்னர் தீவில் ஜீவர்களை மாற்றவும், தமது மார்க்கத்தைப் பரப்பவும்,

131. இரக்கத்தினால் உந்தப்பட்டவராக அவர் இருபதாயிரம் சீடர்களுடன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, சுபகூட மலை மீது நின்று கொண்டார்.

160 வது செய்யுளிலிருந்து நான்காவது புத்தர் வருகை பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

160. இந்த யுகத்தில் நான்காவது புத்தராக கோதமர் அவதரித்தார். முழுமையாக சத்தியத்தை அறிந்த அவர் உலகிடம் இரக்கம் கொண்டவர்.

161. அவர் முதல் முறையாக இங்கு வந்து போது யÑர்களை இங்கிருந்து விரட்டினார். இரண்டாவது முறையாக மீண்டும் வந்துபோது நாகர்களை அடக்கினார்.

162. கல்யாணியில் நாக மணியகி வேண்டிக் கொண்டதற்கிணங்க மூன்றாவது முறையாக திரும்பி வந்த அவர், பிக்குகளுடன் அங்கு உணவருந்தினார்.

மகாவம்சத்தின் படி, நான்கு புத்தர்களின் வருகையில் முதல் புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு ஓஜதீபம் என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் அபயன். தலை நகரம் அபாய. இரண்டாவது புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு வரதீபம்; என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் சமிதன். தலைநகர் வர்த்தமானா. மூன்றாவது புத்தரின் வருகையின் போது, இலங்கைத்தீவு மந்ததீபம்;; என அழைக்கப்பட்டுள்ளது. அரசன் ஜெயந்தன். தலைநகரம் விசாலா. இந்த விபரிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களிலிருந்து குறிப்பான முடிவினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

பகவன் புத்தரின் வருகை

மகாவம்சத்தில் பதினைந்தாவது அத்தியாயமான “மகா விகாரை” யிலும், “புத்தர் வருகை” எனும் முதல் அத்தியாயத்திலும்;, பகவன் புத்தர் இலங்கைக்கு மும்முறை மேற்கொண்ட விஜயம் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. முதல் விஜயத்தின் போது, மகாநாகவனத்தில் (மஹியங்கனாவில்) வாழ்ந்த இயக்கர்களை (யக்கர்கள்) அங்கிருந்து விரட்டுவதற்காக சென்றார் எனவும், இரண்டாவது விஜயத்தின் போது, நாகர்களான மகேதரனுக்கும் குலாதரனுக்கும் இடையில் மூண்ட போரைத் தீர்த்துவைப்பதற்காக நாகத்வீபத்திற்குச் சென்றாரெனவும், (நாகர்களை அடக்கினார் எனவும்) மூன்றாவது விஜயத்தின் போது, நாக மன்னன் மணியக்கியன் அழைத்ததன் பேரில் கல்யாணி நாட்டிற்குச் சென்றார் எனவும் கூறப்பட்டுள்ளது. “புத்தர் வருகை” எனும் முதல் அத்தியாயத்தில்,

19. போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில் பூச பௌர்ணமியன்று இலங்கையில் தமது தர்மத்தைப் போதிப்பதற்காகத் தாமே அங்குப் புறப்பட்டார்.

20. தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப் போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது. அப்போது இலங்கையில் யÑர்கள் (லயமமாயள) நிரம்பியிந்தனர். அவர்களை அங்கிருந்து முதலில் விரட்ட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.

21. இலங்கையின் மத்தியில் அழகிய நதிக் கரையில் மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள, மனதுக்கு ரம்யமூட்டும் மகாநாகவனத்தில் யக்கர்கள் வழக்கமாகக் கூடும் இடம் உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும்.

22. அப்போது தீவிலுள்ள எல்லா யக்கர்களும் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

23. அப்போது யக்கர்களின் பேரவைக் கூட்டத்துக்கு பகவன் புத்தர் சென்றார். அங்கு கூட்டத்தின் நடுவில்.

24. அவர்களுடைய தலைக்கு மேலாக, பிற்காலத்தில் மஹியங்கான ஸதூபம் அமைந்த இடத்தில் அவர் வானத்தில் நின்றார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து,

27. “இங்கே நான் உட்காருவதற்கு ஓர் இடம் கொடுங்கள்” என்று கூறினார். யÑர்கள், “இறைவனே எங்கள் தீவு முழுவதையும் வேண்டுமானாலும் தருகிறோம். எங்களுக்குப் பயத்திலிருந்து விடுதலை அளியுங்கள்” என்று கூறினார்கள். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகவன் புத்தர் போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில் இலங்கை வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. புத்தர் காலம் கி.மு. 563 – கி.மு. 483 ஆகும். எனவே கி.மு. 500 களில் பகவன் புத்தரின் முதலாவது இலங்கை வருகை இடம் பெற்றிருக்காலம். இக்குறிப்புக்களனால்தான், புராதன காலத்தில் – புத்தரின் முதல் வருகைக்கு முன்னரே இயக்கர்கள்-யக்கர்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளார்கள் – அவர்கள் மஹியங்கனையில் (மகாநாகவனத்தில் – மஹியங்கானவில்) பேரவைக் கூட்டத்துக்கு அவர்கள் ஒன்று கூடினார்கள் என்ற முடிவு பெறப்பட்டுள்ளது.

மகாநாகவனம் (பிற்காலத்தில் மஹியங்கான ஸதூபம் அமைந்த இடம்) மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் கொண்டது எனக்குறிப்பிடப்படுகிறது. குணராசா அவர்கள், ஒரு ஜோசனா தூரம் என்பது ஏறத்தாழ 10 மைல் என்கிறார்.(பக். 11). எனவே முப்பது மைல் நீளமும் பத்து மைல் அகலமும் கொண்ட பிரதேசமாக மகாநாகவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தரின் இலங்கை வருகையுடன் இலங்கைத் தீவு முழுவதும் வாழ்ந்த யக்கர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து கிரீத்விபத்திற்கு விரட்டப்பட்டார்கள். இதன் பின்னர்,

28. தேவர்கள் கூட்டத்தில் பகவர் புத்தர் தமது தர்மத்தைப் போதித்தார். கோடிக்கணக்கான ஜீவர்கள் மதம் மாறினர். கணக்கற்றவர்கள் திரிசரண மடைந்து சீலத்தைப் பெற்றனர். எனக் கூறப்பட்டுள்ளது.

எச்.டபிள்யு.கொடிறின்றன், “கௌதமபுத்தர் வருகை அல்லது அவருக்கு முந்திய புத்தர்களின் வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா. பழங்கதைகளின் படி இந்நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கர், நாகர், தேவர் ஆகியோராவர். இப்பெயர்களில் யாதாயினும் உண்மை மறைந்திருக்கலாம்.”(பக் – 6) எனக்குறிப்பிடுகின்றார். எனவே, விஜயன் வழியில் நிகழ்ந்த ஆரியக் குடியேற்றங்களுக்கும், பௌத்த மதத்தின் வருகைக்கும் சிங்கள மொழியின் தோற்றத்திற்கும் முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் பற்றிய “பழமையான வராலற்றுப் பதிவுகளாக” இத்தகவல்களைக் கருதலாம்.

விஜயன் காலம்

இலங்கைக்கு விஜயன் வந்தமை பற்றி மகாவம்சம் ஆறாவது அத்தியாம் “விஜயன் வருகை எனும் பகுதியில்,

41. விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபண்ணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையிறங்கினான். ததாகதர் நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே அமர்ந்த அதே நாளில் இது நடந்தது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் புத்தரின் நிர்வாண ஆண்டு கி.மு. 544 என்பதே வழக்கு என வில்ஹெம் கெய்கர் குறிப்பிட்டுள்ளதனை முன்னர் கண்டோம். கொடிறின்டனும் விஜயன் காலத்தை கி.மு. 543 எனக்குறிப்பிட்டுள்ளார்.

மகாவம்சத்தின் ஏழாம் அத்தியாயம் “விஜயனின் பட்டாபிN~கம்” எனும் பகுதியில்,

9. …அங்கு பெண் நாய் உருவில் ஒரு ய~pனி தோன்றினாள். அவள் குவன்னா என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள்.

11. விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசன் தடுத்ததையும் கேளாமல் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.….
12. அவன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த ய~pனியின் எஜமானி குவன்னா என்பவள் மரத்தடியில் சந்நியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள். எனவே

புத்தரின் மகாநாகவனத்திற்கான முதல் வருகையின் போது, அங்கு புத்த மதம் பரவச் செய்யப்பட்ட போதும், யÑர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டப்பட்ட போதும், குறுகிய ஒரு காலத்தில் மீண்டும் இலங்கையில் யக்கர்கள் ஒரு ராஜ்யத்தை அமைத்து வாழந்துள்ளார்கள் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. தொடர்ந்து,

16. போனவர்கள் யாரும் திரும்பி வராததைக் கண்ட விஜயன் பயமடைந்தான். ஐந்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கொண்டு புறப்பட்டான்.

17. அங்கு யாரும் மனிதர்கள் வந்ததற்கான காலடிச் சுவடு தென்படவில்லை. சந்நியாசி உருவில் ய~pணியை மட்டும் கண்டான். எனவும்,

20. வில்லை அவளுடைய கழுத்தில் மாட்டி இழுத்து அவளுடைய தலைமயிரை இடது கையினால் பற்றித் தூக்கி நிறுத்தி வலது கையினால் கையிலிருந்த வாளை ஓங்கிக் கொண்டு கத்தினான்.

21. “அடிமையே! என்னுடைய ஆட்களைத் திருப்பிக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்.” ய~pணி பயத்தினால் நடுங்கியவளாக,
22. தன் உயிருக்கு மன்றாடினாள். ‘என்னைப் பிழைக்க விடுங்கள். நான் உங்களுக்கு ஒரு ராஜ்யத்தையே தருகிறேன்…. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் மகாவம்சக் குறிப்புக்களிலிருந்து இயக்கர்கள் ஒரு ராஜ்யத்தை அமைத்து சிறப்புறடன் இலங்கையில் வாழ்ந்து வந்ததை அறிய முடிகிறது. மேலும் மகாவம்சம் யக்கர்கள் பற்றிய சில தகவல்களைத் தருகிறது.

30. இரவு நகர்ந்து கொண்டேயிருக்க இசை ஒலியையும் பாடுவதையும் அவன் கேட்டான். அருகில் படுத்திருந்த ய~pணியை ‘ இந்த சத்தத்தின் பொருள் என்ன?’ என்று கேட்டான்.

31. ‘எனது எஜமானுக்கு அரசுரிமைதை; தருவேன். ஏல்லா யக்கர்களையும் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் இங்கு என் மூலமாக வாழத்தொடங்கியதால் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்” என்று ய~pணி எண்ணினாள்.

32. அவள் அரசனிடம் கூறினாள் : ‘ இதோ இங்கு சிரிஸவத்து என்னும் பெயருடைய யக்~ நகரம் ஒன்றிருக்கிறது.

33. ‘இலங்கை நகரில் வசிக்கும் யக்~ர் தலைவனுடைய மகள் இலங்கையிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்; அவளுடன் அவளுடைய தாயும் வந்திருக்கிறாள்.

34. ‘திருமணத்திற்காக அங்கே பெரிய கொண்டாட்டம் நடைபெறுகிறது. அது ஏழு நாட்கள் நடக்கும். அந்த சத்தம்தான் இது. ஏராளமான பேர் அங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிலிருந்து, யக்கர்கள் இலங்கை நகரில் வசித்து வந்ததனையும், ஒரு அரச அமைப்பை அவர்கள் பெற்றிருந்ததனையும் திருமணத்தினை பெரும் கொண்டாட்டமாக கொண்டாடியமையையும் அறிய முடிகிறது. பகவன் புத்தரினால் தேவர்கள் மற்றும் ஜீவர்கள் மதம் மாற்றப்பட்ட போதிலும் அம்மதம் வளர்ச்சியுற்றது என்ற தகவல் சொல்லப்படவில்லை. இது குறித்து குணவர்த்தனா, “விஜயனின் கதை பற்றி மகாவம்சத்தில், சில கூறுகள் புத்தரின் வருகை பற்றி இதே நூல் கூறும் சில சம்பவங்களுடன் முரண்படுகின்றன. முதல் தடவை புத்தர் இலங்கைக்கு வந்தபோது இங்கு இயக்கர்களை கிரிதீபத்திதுக்குத் துரத்தியதாகக் கூறுகிறது. ஆனால் விஜயன் இலங்கைக்கு வந்த போது இங்கு இயக்கர்களின் வளம் மிகுந்த அரசு இருந்ததென்றும் கூறுகின்றது.”(பக். 69) எனக்குறிப்பிடுகிறார்.

யக்கர்கள் கூடிய சிரிஸவத்து பற்றி கொடிறின்டன், “சிறீவத்து என்பது விசயன் இறங்கிய இடத்துக்கு அண்மையில் இருந்தது என்பதாகும். ஏனெனில் அங்கு நடந்து திருமண விளையாட்டுக்களின் ஓசையை அவன் கேட்டு…” எனக் குறிப்பிடுகிறார். அத்துடன், “ இவ்வியக்கர்களின் முக்கிய இடங்கள் சிறீவத்து, இலங்காபுரம் ஆகியவையாம். பின்னர் இவை “லொக்கலை”, “லக்கலை” என்னும் குன்றுகளேயாம் எனக் கருதப்பட்டன.”(பக். 7) எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விசயன் இலங்கை வருகை குறித்து வேறு பல மரபுக்கதைகள் குறித்து விளக்கும் கொடிறின்டன், “இதிலிருந்து அறியக் கிடப்பது யாதெனில் விசயனின் கதை பழைய கட்டுக்கதைகளைச் சேர்ந்த ஒன்றாகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் இக்கட்டுக்கதைகளில் இலங்கையில் வாழ்ந்த இயக்கர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் அவர், “பழங்கதைகளின் படி இந்நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கர், நாகர், தேவர் ஆகியோராவர். இப்பெயர்களில் யாதாயினும் உண்மை மறைந்திருக்கலாம்.”(பக் – 6) எனக்குறிப்பிடுகிறார்.

இதன் பின்னர் விஜயன் அரசனாக முடி சூட்டிக் கொள்ள, உயர்குல மங்கை ஒருத்தியை தேடி “தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகரிலுள்ள” “பாண்டிய மந்திரிகளிடம்” தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பெண் கேட்க சிலர் விஜயனுடைய மந்திரிகளால் தூது அனுப்பப்பட்டனர். அவர்கள் தூதினால் பாண்டியனும், தனது மகளையும், தேர்ந்தெடுத்த பெண்களையும், கைத்தொழில் கலைஞர்களையும், பதிணெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களையும் கொண்ட “பெருவாரியான மக்களை” அனுப்பி வைத்தான். ஆவர்கள் இலங்கைத் தீவில் மகாதிட்டு ( மாந்தோட்டை) எனப்படும் இடத்தில் கரையேறினர்.

இவ்விடயம் பற்றிக் கூறும் குணவர்த்தனா, “56-57 செய்யுள்கள் மதுரை அரசன் பற்றிக் கூறுகின்றன. விஜயனின் பரிவாரங்களான எழுநூறு பேரின் வழித்தோன்றல்கள் சிகளர் எனவும் ஆயிரம் குடும்பங்களின் வழித்தோன்றல்களை இக்குழுவிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் போதும், ஆயிரம் குடும்பங்களின் வழித்தோன்றல்கள் சிகளருடன் சேர்த்துக் கொள்ளப்படக்கூடாது என்பதை வம்சத்த பகசினி அழுத்தமாகச் சுட்டுகிறது எனலாம்” எனக் குறிப்பிடுகிறார். அதே வேளை பாண்டிய இளவரசிக்கும் விஜயனுக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இதன் பின் விஜயன்,

60. “அன்பே! குழந்தைகளை விட்டுவிட்டு நீ இப்போது போய்விடு. அமானுய சக்தி படைத்தவர்களைக் கண்டால் மனிதர்கள் எப்போதும் பயப்படுகிறார்கள், என்றான்.

61. இதைக் கேட்டதும் அவளுக்குப் யக்கர்கள் பற்றிய பயம் பற்றிக் கொண்டது. “தாமதிக்காதே, உனக்கு அயிரம் பணம் செலிவட்டு பூஜை போடுகிறேன்” என்று விஜயன் ய~pணியிடம் சொன்னான்.

62. மீண்டும் மீண்டும் அவள் மன்றாடிக் கேட்டது பயனில்லாமற் போகவே தன் இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு லங்காபுரத்துக்கு அதனால் தீங்கு நேரும் என்பதை அவள் அறிந்த போதிலும் சென்று விட்டாள்.ஷ

63. வெளியே குழந்தைகளை விட்டுவிட்டு அவள் மட்டும் நகருக்கள் சென்றாள். நகரத்திலிருந்த ய~ர்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டனர்.

64. அவர்களுடைய பயத்தில் அவளை உளவுகாண வந்தவளாகக் கருதிப் பரபரப்படைந்தனர். முரடனான ஒருவன் மு~;டியினால் ஒரே குத்தில் அவளைக் கொன்றுவிட்டான்.

65. அவளுடைய தாய்மாமனான ஒரு யக்கன் நகரத்துக்கு வெளியே சென்றபோது அங்கு குழந்தைகளை கண்டு அவர்களை “நீங்கள் யாருடைய குழந்தைகள்”? என்று கேட்டான்.

66. அவர்கள் குவன்னாவின் மக்கள் என்பதை அறிந்ததும் அவன் “இங்கே உங்களுடைய தாயாரரைக் கொன்று விட்டார்கள். உங்களைப் பார்த்தால் கொன்று விடுவார்கள்.” என்றான்.

67. விரரைவாக அங்கிருந்து ஓடிய இவர்கள் சுமண கூடத்தை அடைந்தனர். இவர்களில் மகன்தான் மூத்தவன்.

68. உரிய வயதையடைந்ததும் அவன் தன்னுடைய தங்கையையே மனைவியாக்கிக் கொண்டான். நிறையக் குழந்தைகளைப் பெற்றுப் பெருக்கிக் கொண்டு மலயப்பகுதிகயில் அரசனது அனுமதியுடன் அவர்கள் வசித்து வந்தனர். இவர்களிடமிருந்து தோன்றியவர்கள் தான் புலிந்தர்கள்.

வியனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகளின் வாரிசுகாளவே புலிந்தர்களின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. குணவர்த்தனா அவர்கள், வம்சத்தபகசினி, இயக்கர்கள் பற்றிய மேலும் தகவல்கைளத் தருகிறது. இயக்கர்களுடைய தலைவன் மகாகலசேன எனவும் அவன் சிறிசவத்து என்ற இடத்தில் இருந்தான் எனவும் கொண்டா என்ற இயக்கினியின் புதல்வியான பொலமிதாவை அவன் மணமுடித்தான் எனவம் இந்நூல் கூறுகிறது. குவேனியின் இரு பிள்ளைகளும் ஜீவகத்தா, தீபல்ல என அழைக்கப்பட்டனர் எனவும் இது கூறுகிறது” (பக் 69) எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள வரலாற்று நூலில் குவேனியின் சகோதரன் “குமார” வும் எனக்கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்று நூல்களில் யக்கர்கள் பற்றிய விபரிப்பு, அவர்களை அமானுஸ்ய சக்தி படைத்தவர்காளக காட்டுகிறது. புத்தரின் வருகைளின் போது (கி.மு. 500) அவர்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்தவர்கள். விஜயன் வருகையின் போது அவர்கள் இலங்கையில் சிறப்பானதொரு நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். பின்னர், பண்டு அபயன் (கி.மு. 437), துஸ்ட காமினி (கி.மு. 205. – 161) ஆகியோர் பற்றிய விபரிப்புக்களிலும் யக்கர்கள் பற்றிய விபரிப்பு இடம் பெறுகிறது. இவ்வகையில் அவர்களுடைய வரலாறு கி.மு 500 களிலிருந்து கி.மு 160 வரை ஏறக்குறைய 350 வருடங்கள் கொண்டதாக காணப்படுகிறது. எனவே ஒரு இலங்கையின் பண்டைய வரலாற்றில் முக்கியமானதொரு மக்கள் பிரிவினராக இவர்களைக் கருத வேண்டும்.

பௌத்த மதப் பரவலாக்கத்தின் போது அழிந்து போனவர்கள் அவர்கள் என்ற கருத்தினையும் வந்தடைய வேண்டியுள்ளது. சில வேளை இவர்கள் வியஜனுடன் ஆரம்பித்த குடியேற்றவாசிகளுடன் ஒன்று கலந்திருக்க வேண்டும். அல்லது தமது தனித்துவத்தினைப் பேணிக்கொண்டு ஒதுங்கி, அநுராதபுர இராச்சியத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறன பிரதேசம் இலங்கையின் வட – கிழக்கு மற்றும் உருகுணை பிரதேசமாகும்.

பண்டைய இலங்கை வராலற்று நூல்களில், நாகர்கள் பற்றிய தகவல்கள் நட்பு ரீதியிலானதாக விபரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யக்கர்கள்பற்றிய விபரிப்புக்கள் அவர்களை எதிரிகளாக காட்டும் வகையில் இடம் பெறுகிறது.

மகாவம்சம் மட்டுமன்றி, தீபவம்சம், வம்சத்தபகசினி, திவ்யவதனா போன்ற இலங்கையின் பண்டைய வரலாற்றை விளக்கும் நூல்கள் பலவும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இது குறித்து விளக்கும் குணவர்த்தனா, “மேலே காட்டப்பட்ட பெரும்பாலான ஐதீகங்கள் இலங்கையின் முதன்முதலாக இயக்கர்களே இருந்தனர் என்பதைக் கூறுகின்றன. ஆனால் எல்லாக்கதைகளும் இயக்கர் பற்றிய பகை நோக்கினையே கொண்டுள்ளன. புத்தர் இயக்கர்களைத் துரத்தினார் எனத் தீபவம்சம் கூறுகிறது. ஆனால் திவ்யவதனாவும் ஹியன்-சாங்கின் இரண்டாவது கதையும் சிம்களவே அவர்கைளத் துரத்தினான் எனக்கூறுகின்றன.” (பக் 69-70) எனக்குறிப்பிடுகிறார்.

யக்கர்கள் இலங்கைத்திவின் பல பாகத்திலும் வாழ்ந்தவர்கள் – மஹியங்கனையில் ஒன்று கூடுபவர்கள் என்ற மகாவம்சக் கதையினாலும், மஹியங்கனையில் தற்காலத்தில் வேடர்கள் வாழ்ந்து வருவதனாலும் யக்கர்கள் தற்கால வேடர்கள் என்ற முடிவினை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது போலும். மஹியங்கனை மட்டக்களப்பின் மேற்கெல்லiயில் அமைந்திருந்திருப்பதனாலும், மட்டக்களப்பில் பூர்விக குடிகளாக வேடர்கள் வாழ்ந்து வந்தமையாலும் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் இயக்கர்கள் (யக்கர்கள்) என்ற முடிவு ஏற்பட்டிருக்காலம்.

நாகர் என்ற தொடரினால் வரும் ஊர்ப்பெயர்கள் காரணமாக (நாகர் முனை) நாகர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்திருக்காலம் என்ற முடிவினை எட்டியிருக்காலம். ஆனால் மகாவம்சத்தில்,

84. எதிர்காலத்தில் இலங்கையின் உய்வையெண்ணி அப்போது இலங்கையில் இருந்த நாகர்களுக்கும் அசுரர்களுக்கும் அதிகமான அளவு நன்மைகளைச் செய்வதற்காக பேரருள் பெருந்தகை இவ்வாறாக இந்த அழகிய தீவுக்கு மூன்று முறை விஜயம் செய்தார். உண்மையின் ஒளி வீசி ஜொலிக்கும் இத்தீவு அதனால்தான் பௌத்தர்களுடைய பெருமதிப்புக்கு உள்ளானதாயிற்று. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் யக்கர்கள் என்பதற்குப் பதிலாக அசுரர்கள்(யளரசயள) எனக்குறிப்பிடப்பட்டுள்ளமைய அவதானிக்கலாம். எனவே இயக்கர்கள் (யக்கர்கள்) எனும் சொல்லினால் குறிப்பிடப்படுபவர்கள் யார் என்பதனை அறியமுடியாமலுள்ளது. மேலும் 12 ஆம் அத்தியாயத்தில்,

20. இதே போல் இமாலயத்திலுள்ள எண்பத்தி நாலாயிரம் நாகர்களும், ஏராளமான கந்தர்வர்களும், யக்கர்கள், கும்பந்தர்களும் புத்த மார்க்கத்துக்கு வந்தனர். என்ற

குறிப்பும் காணப்படுகிறது. இது போன்ற பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் யக்கர்கள் என்பது, பழங்குடி மக்களைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு சொல்லாக இருக்கலாம் எனக்கருத இடமுண்டு. தற்காலத்தில் யக்கர்கள் இந்திய – இலங்கை தொல் குடியினர் என்றே குறிப்பிடப்படுகிறார்கள். அவ்வாறெனில் உண்மையில் யக்கர்கள் எனக் குறிப்பிடப்பட்டோர் யார் என்பதனை கண்டறிய வேண்டும்.

மகாவம்சத்தில், பண்டு அபயன் பட்டபிசேகம் எனும் 10 ம் அத்தியாயத்தில், 95. வது செய்யுளில் “ … இதற்கு வடக்கே, (சண்டாள கிரமம்) இதற்கும் பாசான மலைக்குமிடையே வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. (அருகிலுள்ளது காமினி வாபி- கரம்பவக்குளம்)” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து யÑர்களும் வேடுவர்களும் வேறுபட்டவர்கள் என மகாவம்சம் காட்டுவதனை அவதானிக்க முடிகிறது. மேலும் தழிர்கள் என்ற சொல்லின் பயன்பாடும் மகாவம்சத்தில் காணப்படுவதனால் யÑர்களும் தமிழர்களும் வேறுபட்டவர்கள் என மகாவம்சம் குறிப்பிடுவதாகவே கருதவேண்டியள்ளது.

எனவே யக்கர்கள் பற்றிய விரிவானதொரு தேடல் மூலமே பல வினாக்களுக்கு விடை கண்டறியலாம்.

இதே வேளை குணவர்த்தனா அவர்கள், இலங்கையில் மூன்று பிரதான மக்கட்குழுக்கள் இருந்ததை விஜயன் பற்றிய ஐதீகம் கூறுகிறது. இது சிங்களருடைய மூலம் பற்றி விரிவாகக் கூறும் அதே சமயம் புலிந்தர்கள், சேவை செய்யும் சாதியினர் ஆகியோர் மூலம் பற்றியும் கூறுகிறது எனவும், “எனினும் இராச்சியத்தில் இருந்த சகல மக்களையும் இணைக்கக்கூடிய சிங்கள உணர்வின் வளர்ச்சியை இக்காலத்தில் தொழிற்பட்ட சில காரணிகள் தடுத்தன என்று தோன்றுகின்றது”(பக்74) எனவும் குறிப்பிடுகிறார். சேவை செய்யும் சாதியினர் என்பது மதுரை இளவரிசியுடன் வந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மட்டக்களப்பில் பூர்விக காலத்தில புலிந்தர்கள் வாழ்ந்தார்கள் என்ற செய்தியும் கவனிப்பிற்குரியது. மதுரை இளவரசியினுடன் வந்த – சேவை செய்யும் குடியினர் பற்றியும் அறிய வேண்டும். இலங்கை வரலாற்று நூல்கள், இடப்பெயர்வுகள் குறித்துக் காட்டிய அக்கறையை உள்ளுர் சனத்தெகைப் பெருக்கம் தொடர்பாக காட்டவில்லை என்ற கருத்தும் கவனத்திற்குரியது.

பண்டு அபாயன் காலம்

மகாவம்சத்தில், “பாண்டு அபயன் பட்டபிசேகம்” எனும் பத்தாம் அத்தியாயத்தில், “பண்டுலா என்னும் பெயருடைய பிராமணன் பணக்காரன். வேதங்களைக் கற்றவன். அவன் தென் பகுதியில் பண்டுலகாமக என்னும் கிராமத்தில் வசித்து வந்தான்” (செய்.20) எனும் செய்யுளில் குறிப்பிடப்படும் தகவலானது வேதங்களைக் கற்ற பிரமணன் தென்பகுதியில் வாழ்ந்து வந்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிராமணனுடைய மகன் சந்தன். இவர்கள் இருவரிடமும் பாண்டு அபயன் ஆட்சி நடத்துவதற்குரிய கலைகளைக் கற்றுக் கொண்டான் எனவும், பண்டுலா, பாண்டு அபயனுக்கு நூறாயிரம் பணத்தைப் படை வீரர்களைத் திரட்டுவதற்கு கொடுத்தார் எனவும், பிராமணனுடைய மகன் சந்தன் என்பவன் பாண்டு அபயனுக்கு உதவியாகசச் சென்றான் எனவும் மகாவம்சச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற பாண்டு அபயன் சந்தனை தனது மந்திரியாக நியமித்தான். பாண்டு அபயன் காலம் கி.மு. 437 ஆகும். பிராமணர்கள் பற்றிய குறிப்பு பல இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

துஸ்டகாமினி காலம்

மகாவம்சத்தில் “ஐந்து அரசர்கள்” எனும் 21 ஆவது அத்தியாயத்தில் “ சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப்பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (செய்.13) எனக்குறிப்பிடப்படுகிறது. தமிழன் ஏலாராவின் காலம் கி.மு. 205. – 161 ஆகும். இக்காலத்தில் உருகுணை இராச்சியம் வளர்ச்சி கண்டது. உருகுணையிலிருந்து படைதிரட்டிய துஸடகாமினி எல்லாளனுடன் போரிட்டு வெற்றி பெற்றான்.

மகாவம்சத்தில் “படைவீரர்களை; திரட்டல்” எனும் 23 ஆவது அத்தியாயத்தில் துஸ்டகாமினி பலமிக்க பத்து துணைவர்களைத் திரட்டிய விபரம் விபரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நந்த மித்திரன் எல்லாளனுடன் தொடர்பு பட்டவனாக கூறப்பட்டுள்ளான். மற்றயோர் நிமிலன், மகா சோனன், கோதாயிரம்பன், தேர புத்ர அபயன், பரணன், வேலு சுமணன், கஞ்ச தேவன், பூஸ தேவன், லபிய வசபன் என்போராவர். இவர்கள் “இரண்டு யோஜனை தூரத்துள் வசிக்கும் பிரபுக் குடும்பத்திலிருந்து” (செய்.18) காவலுக்கு வரவைக்கப்பட்டோராவர். வேலு சுமணன் “குடும்பியங்கானா” கிராமத்தைச் சேர்ந்தவன். இதிலிருந்து உருகுணை இராச்சியத்தில் பல சமூகக் குழுக்கள் வாழ்ந்தள்ளமையை அறிய முடிகிறது. இவர்கள் தமிழர்களா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

தற்போது, திஸ்சமகாரகாமத்துக்கு அருகில் நடைபெற்றுவரும் அகழ்வில் 2200 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்

வணிகர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளமை இத்தகைய ஆய்வின் முக்கியத்துவத்தினை விலியுறுத்துகிறது.

மகாவம்சத்தின், “துஸ்டகாமினியின் வெற்றி” எனும் 25 ம் அத்தியாயத்தில், “அரசன் துஸ்டகாமனி, ‘மார்க்கத்துக்குப் பெருமை தேட’ பெரும படையைத் திரட்டிக் கொண்டு நதியின் மறுகரைக்கச் செல்வதற்கு முடிவெடுத்து, திசமகாராமாவுக்குச் சென்று – பிக்குகளையும் அழைத்துக் கொண்டு , மலையத்திற்குச் சென்று அங்கிருந்து சாலையை(அநுராதபுரத்திற்கான) சீர்படுத்திக் கொண்டு குத்தஹாலாவை அடைந்தான். பின், ( காமினி – கி.மு 101-77 )

7. மஹியங்கானவுக்கு வந்து சேர்ந்த அவன் சத்தன் என்ற தமிழனை(னுயஅடைய ஊhயவவய) வெற்றி கொண்டான். அதே இடத்தில் அவனைக் கொன்று விட்டு அம்ப திட்டகத்துக்கு (யுஅடியவவைவாயமய) வந்தான். அங்கு நதியிலிருந்து ஒரு சுரங்க வாயில் இருந்தது.

8. தித்தம்பன் என்ற தமிழனை  எதிர்த்து அவன் நான்கு மாத காலம் கடுமையாகப் போரிட வேண்டியிருந்தது.

9. பலமுள்ள எதிரியை அவனால் சூழ்ச்சியால்தான் வெற்றி கொள்ளகொள்ள முடிந்தது. தாயாரைக் காட்டி அவனை வெற்றி கொண்டான்.

10. பிறகு நதியைக் கடந்துவந்து அரசன் ஒரே நாளில் ஏழு தமிழர்களை வெற்றி கொண்டு அமைதியை நிலைநாட்டினான். போரில் கொள்ளையடித்த பொருள்களைத் தனது படை வீரர்களுக்குக் கொடுத்து விட்டான். அதனால் அந்த இடத்துக்கு கோமாராமா என்ற பெயர் வந்தது.

11. அந்தர சோபாவில் அவன் மகா கொத்தனை வெற்றி கொண்டான். டோண காவரத்திலும், ஹாலபொல இஸாரியத்திலும், நாழிசோப நாழிகாவிலும் அவனுக்கு வெற்றி கிடைத்தது.

12. தீகாபய கல்லகத்தில் அதே போல் தீகாபயனை வெற்றி கொண்டான். நான்கு மாதங்களுக்குள் கச்ச திட்டத்தில் கபிசீகனை வென்றான்.

13. கோதானகரத்தில் கோதனைப் போரிட்டு வென்றான். வஹித்தலையில் தமிழன் வஹித்தனை முறியடித்தான்.

14. கும்பாகம கும்பா, நந்திகாம நந்திகா, கானுகாமத்தில் கானு, மாமனும் மருமகனுமான தம்பா, உனமா ஆகியவர்களையும் அவன் தோற்கடித்தான்.

15. ஜம்புவும் அவன் வசப்பட்டது. அவன் கைப்பற்றிய ஒவ்வொரு கிராமமும் படைத்தலைவர்களின் பேரால் அழைக்கப்பட்டது.

என்ற விபரிப்புக்களில், மட்டக்களப்பின் மேற்கெல்லையில் உள்ள மஹியங்கனையில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளது.

இக்காலத்திற்கு முன்பு, மதுரை இளவரசியினுடன் வந்த – சேவை செய்யும் குடியினர், அநுராத புரியினை ஆண்ட தென்னிந்திய தமிழ் அரசர்கள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. எல்லாளன் அநுராதபுரியை ஆட்சி செய்தது மட்டுமன்றி மகவாலி கங்கை வரை தனது படைகளை விஸ்தரித்திருந்தான். ஆனால் அவனது படையினைரைச் சேர்ந்தவர்கள்தான் இம் மஹியங்கணையில் வாழ்ந்த தமிழர்கள் என கூறமுடியாதுள்ளது. ஏற்கனவே மஹியங்கணை இயக்கர் ஒன்று கூடும் இடமாக சித்தரிக்கப்பட்டள்ளது. மஹியங்கணையில் அழிக்கப்பட்டவர்கள் பற்றி மகாவம்சத்தில், ‘தன்னைச் சேர்ந்தவர்களையே யாரென்று தெரிந்து கொள்ளாமல் அரசன் தன் மக்களையே கொல்கிறான்” (அத், 25: செய். 16) என்ற மகாவம்சச் செய்யுளினால் அழிக்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.

இச்செய்தி மூலம் மஹியங்கணையிலிருந்து பொலன்னறுவை வரையிலான பகுதியில், மஹியங்கானவில் சத்தன் என்ற தமிழன், அம்பதிட்டகத்தில் தித்தம்பன் என்ற தமிழன், நதிக்கப்பாலிருந்த (கோமாராமா) ஏழு தமிழர்கள், அந்தர சோபாவில் மகா கொத்தன், டோண காவரத்திலும், ஹாலபொல இஸாரியத்திலும், நாழிசோப நாழிகாவிலும் இருந்தவர்கள், தீகாபய கல்லகத்தில்; தீகாபயன், கச்ச திட்டத்தில் கபிசீகன், கோதானகரத்தில் கோதன், வஹித்தலையில் தமிழன் வஹித்தன், கும்பாகம கும்பா, நந்திகாம நந்திகா, கானுகாமத்தில் கானு, மாமனும் மருமகனுமான தம்பா, உனமா மற்றும் ஜம்பு ஆகியோர்கள் வாழ்ந்தமை பற்றி அறிய முடிகிறது. இதில் பலர் தமிழர்கள் ஆவர்.

பொலன்னறுவைக் காலம்

கொடிறின்றன் அவர்கள், “முதலாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைப் பதிவுகள் கன்னடர், கேரளர், தமிழர் ஆகியோரைப் பெயர்கொண்டு குறிக்கின்றன”(பக65) எனக்குறிப்பட்டுள்ளார். முதலாம் பராக்கிரமபாகு கி.பி.1153 முதல் 1186 வரை பொலன்னறுவை இராச்சியத்தின் மன்னாக இருந்தவனாவான். குணவர்த்தனா அவர்களின் கருத்துப்படி, (பக்.91-92) இக்காலத்தில் தென்கிழக்காசியாவிலிருந்து ஐhவகர் குடியேற்றங்கள் நிகழ்ந்தமை பற்றியும் அறிய முடிகிறது. ஆறாம் பராக்கிரமபாகு (1412-67) வின் காலத்தில் தனது தெமல, சிங்கள, மலல, கன்னட, தொலுவர ஆகிய எதிரிகைள முறியடித்து ஒரு பூரண தனியரசை ஸ்தாபித்தான். இக்காலப்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தின் வளரச்சி ஏற்படத்தொடங்குகிறது.

ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளை மணம் செய்தவன் தமிழ் இளவரசன் நன்னுருத்தன் ஆவான். இக்காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழக் கவிதைகளும் பாடங்களும் பிரபலயம் பெற்றிருந்தன. கோகில சந்தேஸ எனும் நூல்pல் தமிழ், பாளி, மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தொகுக்கப்பட் கவிதைகள் ஆறாம் பராக்கிரமபாகுவின் சபாமண்டபத்தில் பாடப்பட்டதகவும் தெரிவிக்கப்படுகிறது. கோகில சந்தேஸ ஆசிரியர் கூற்றுப்படி “மகாவலிகம” எனுமிடத்தில் தமிழப்பாடல்கள் இசைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அத்துடன் கணபதி, பத்தினி ஆகிய தெய்வ வழிபாட்டின் வளர்ச்சியும் ஏற்படுகிறது. கண்டி இராச்சியத்திலும் தமிழ் நூல்கள் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதல் இலங்கைத் தமிழ் நூலான சரசோதி மாலை தென்னிலங்கையில் தோற்றம் பெறுகிறது. கண்டி இராசதானியின் இறுதிக்காலத்தில்(1815இல்) அங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கண்டி இரசாதானி சார்பான பிரதிநிதிகள் தமிழல் கையொப்பமிட்டுள்ளமையும் கவனத்திற்குரியது. கண்டி இரசாதானிக் காலத்தில் மட்டக்களப்பின் தொடர்பு வளரச்சியடைந்திருந்தாக கூறப்படுகிறது. இதனை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு பூர்விகக் குடிகள் பற்றிய கட்டுரைத் தெடரை நிறைவு செய்ய முன் முக்கியமான வினாவொன்றை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் வேடர்கள் என பல மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பின் தெய்வ – வழிபாடு பற்றி விபரிக்கும் நூல்களும் இவ்வாறே கூறுகின்றன. மட்டக்களப்புக் கிராமங்களின் வரலாறு பற்றிய கட்டுரைகளும் இக்கருத்தையே குறிப்பிடுகின்றன. விடயம் தொடர்பான ஆர்வலர்களும் இக்கருத்தையே குறிப்பிடுகின்றன. ஆனால், தகவல்களின் படி இலங்கையில் வாழ்ந்த வேடுவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும், அதிலும் மட்டக்களப்பில் வாழ்ந்த வேடர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பமானதே.

தரவுகளின் படி மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வேடர்கள், வரலாற்று விபரிப்புக்களில் எவ்வாறு பல கோவில்களின், கிராமங்களின் தோற்றத்திற்கு காரணமாயினர். அதே வேளை வேடர்கள் என்ற சொற்பயன்பாடு எவ்வாறு அறிமுகமாகிறது என்பதுவும் கண்டறியப்பட வேண்டும். இதனூடாக மட்டக்களப்பின் பூர்விக குடிகள் – வேடர்கள் – முன்னர் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்களா என்பதனை அறிய வேண்டும். அப்பெயர்கள் இலங்கையின் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களுடன் தொடர்பு பட்டனவா என்பது முக்கியமானதொரு வினாவாகும்.

முன்னைய பதிவுகள் :

மட்டக்களப்பு பூர்விக வரலாறு : இலங்கை வரலாற்று ஆவணங்கள் – தரும் தகவல்கள். பாகம் – 1 : விஜய்
மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும். பகுதி – 2 : விஜய்

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய்

மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய் மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும்

வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய் மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்

 

ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்கள் : வரவர ராவ்

வரவார ராவ்(Varavara Rao) ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) (மாவோயிஸ்டுக்கள்) இன் ஆதரவாளரகவும் பல தடவைகள் அவர்களின் வெளிப்படையான குரலாகவும்  செயற்படுபவர். இலக்கிய விமர்சகர், கவிஞர், அரசியல் பேச்சாளர் என்ற பல்வேறு தளங்களில் செயற்படும் வரவர ராவ் தெலுங்கு இலக்கிய விமர்சகர்களுள் முதன்மையானவர். புரட்சிகர இயக்கங்களோடு கடந்த நாற்பது வருடங்களாகச் செயற்பட்டு வருகிறார். பரந்துபட்ட மக்கள் ஆதரவைப் பெற்றவர்.

பேராசிரியராகவும், அதிபராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றிய வரவர ராவ் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக தனது வாழ் நாளின் பாதிக் காலத்தைச் சிறையில் வாழ்ந்து முடித்தவர்.

மார்க்சிய அறிவியலில் ஆழமான பார்வையைக் கொண்ட வரவர ராவ், இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.

ஈழத்தில் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. வன்னிப் படுகொலைகள் குறுகிய நிலப்பரப்பினுள் ஒரு லட்சம் மனித உயிர்களை நவீன அழிவு ஆயுதங்களைக் கொண்டு கொடிய பேரினவாத அரசு அழித்துப் போட்ட அந்தக் கோர நிகழ்வை மனித குலம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. அதே வேளை இன்று உலகத்தில் காணப்படும் போராட்ட அமைப்புக்களில் ஒழுங்கமைக்கப்பட்டதும் பலம்பொருந்தியதுமாகக் கருதப்படும் இந்திய மாவோயிஸ்டுக்கள் தமது கொல்லைப்புறத்தில் நடைபெற்ற இந்த அழிவிற்கு காத்திரமான எதிர்ப்பை வெளிக்காட்டவில்லையே ஏன்?

இன அழிப்பிற்கு எதிராக மாவோயிஸ்டுக்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாவோயிஸ்டுக்களைப் பொறுத்தவரை இந்திய விஸ்தரிப்பு வாத அரசானது அயல் நாடுகளில் தலையிட்டு அழிவுகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றது என்பதை ஆரம்பத்திலிருந்தே கூறிவந்திருக்கிறார்கள். இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கையை ஆக்கிரமித்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசு, வன்னியில் நட்த்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னணியிலும் செயற்பட்டிருக்கிறது.

மாவோயிஸ்டுக்கள் இந்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.மாவோயிஸ்டுக்கள் இந்தியாவில் தடைசெய்யபட்ட தலைமறைவு இயக்கம். இந்த வகையில் இலங்கை இந்திய அரசுகள் வன்னியில் நடத்திய இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திலும் மாவோயிஸ்டுக்கள் தமது ஆதரவு அமைப்புக்கள் ஊடாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டங்கள் அவர்களுக்க்க் கிடைத்த தகவல்கள், தொடர்புகள், பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றினுள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதே உண்மை.

இன்று மக்களின் உடனடி எதிரி உலகமயமான நிலையைக் காண்கிறோம். ஏகாதிபத்தியங்களை அதன் முகவர்களுக்கு ஊடாக அன்றி நேரடியாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆக, உலகின் புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்களுடனான ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் அவசியமானதாகக் கருதவில்லையா?

நிச்சயமாக. மாவோயிஸ்டுக்கள் இதை நன்கு உணர்ந்துள்ளார்கள். பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் அதிகாரமும் உலகை ஆக்கிரமிக்கும் பொதுவான பிரச்சனைகளை ஒடுக்கப்படும் மக்கள் முகம் கொள்கிறார்கள். இவற்றிற்கு எதிரான உலகம் தழுவிய ஒருங்கிணைவு என்பது அவசியமானது.

புலிகளின் அழிவிற்குப் பின்னான சூழலை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

அங்கு ஒரு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள். இந்திய அரசிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாக அது முன்னெழும். தனி ஈழ அரசு அமைப்பதற்கான போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவேண்டும்.

ஏனைய புரட்சிகர இயக்கங்களின் ஆதரவோடும் புரிந்துணர்வோடும் ஒத்துழைப்போடும் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் இந்தியாவினதும் உலக நாடுகளதும் ஒத்துழைப்புடனேயே நடைபெற்றது. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமே. அந்த வகையில் ஈழப் போராட்டம் முற்போக்கானது. போராட்டம் விட்டுக்கொடுப்பின்றி பேரினவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய இன ஒடுக்குமுறை கூர்மையடைந்துள்ள ஒரு நாட்டில் சுய நிர்ணய உரிமைக்கான போராத்தில் மக்கள் இணைந்து கொள்வார்கள்.

இந்திய மற்றும் சர்வதேச பல்தேசிய நிறுவனங்கள் பேரினவாதத்தின் துணையோடு தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொள்ளையடிக்கின்றது. ஆக, இதற்கு எதிரான மக்களின் போராட்டம் உறுதியான அரசியல் தலைமையின் வழி நடத்தலில் எழுச்சிபெறும்.

சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்துபோகும் உரிமை என்பது பிரிவினைக்கான முழக்கம் என்றும் இதனால் பிரிந்து செல்லாத அல்லது பிரிந்துசெல்வதை நிராகரிக்கும் சுய நிர்ணைய உரிமை என்பதே எமது சூழலுக்கு சரியானது என புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி உட்பட இலங்கையின் இடது சாரிக் கட்சிகள் கூறுகின்றன.இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நீண்ட நாளைய நிலைப்பாடு இவ்வாறு தான் இருந்தது இது குறித்து உங்கள் கருத்து என்ன?

அது அவர்களின் கருத்தாக இருக்கலாம்.கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை சுய நிர்ணய உரிமை என்பதே பிரிந்து செல்லும் உரிமைதான். ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது அது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை நடத்துவது விடுதலைக்கான முன் நிபந்தனையாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் அதனைத் தலைமையேற்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தனியரசை அமைத்துக்கொள்வதற்கான போராட்டதை முன்னெடுக்கும் போதே அது ஒடுக்கும் தேசிய இனங்களுடானான இணைவைக் கூட ஏற்படுத்தும். வியட்னாம் இதற்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படலாம்.

ஆக, ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்களா?

ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டம் என்ற வகையில் மாவோயிஸ்டுக்கள் தமது ஆதரவை எப்போதும் வழங்கியிருக்கிறார்கள். இன்றும் பேரினவாத ராஜப்கச அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் என்ற வகையில் ஈழப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருந்ததால் தான் உலக நாடுகள் முழுவதும் இணைந்து அந்தப் போராட்டதை அழித்தன.

கடந்த காலத்தில் அதன் இயல்பு எவ்வாறு அமைந்திருந்தது என்ற விமர்சனங்களுக்கு அப்பால் எதிர்காலத்தில் அது எழுச்சி பெறுமானால் மாவோயிஸ்டுக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதற்குக் கிடைக்குமா?

நீங்கள் முன்னமே குறிப்பிட்டதுபோன்றே இன்று பொது எதிரிக்கு எதிரான உலகம் தழுவிய பொதுத்தளத்தில் புரட்சிகர இயக்கங்கள் பொதுவான வேலைத்திட்ட அடிப்படையில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது இன்றைய தேவையாகும். அந்தவகையில் அனைவரும் செயற்பாட்டுத் தளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் குறித்து?

தமிழீழ விடுதலைப் புலிகளை எமது விமர்சனங்களுக்கு அப்பால் ஏகாதிபத்திய எதிர்பு இயக்கங்கமாகவே பார்க்கின்றோம். அதன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் காரணமாகவே உலக நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழ விடுத்லைப் புலிகளை அழித்தன.

ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

முன்னையவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தை பரந்துபட்ட தளத்தில் முன்னெடுக்க வேண்டும்.

தொடரும்…

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்

கர்னாடக இசையை ஆதாரமாககக் கொண்டு ஜி.ராமநாதன் .எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எஸ்.வீ .வெங்கட்ராமன் போன்ற மூத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் 1950 களின் இறுதிவரை ராகங்களைஅடிப்படையாகக் கொண்ட ராகங்கள் வெளிப்படையாத் தெரிகின்ற பாடல்களைத் தந்தார்கள்.

1950 களிலேயே மெல்லிசைகளின் ஒளிக்கீற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிய ஆரம்பித்தது.சுப்பராமன் இசைவாரிசுகளாக ஏ.எம் .ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி அந்த திசையில் பயணித்த முக்கியமானவர்களாக இருந்தனர்.பணம் [1953 ] படத்தின்மூலம் அவர்கள் அறிமுகமாகினாலும் சில வருடங்களின் பின்னர் தான் அவர்கள் பிரபலமாகிறார்கள்.

* கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே படம் : மகாதேவி [1957 ] A.M.ராஜா + P.சுசீலா

* துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது படம் : தலை கொடுத்தான் தம்பி [1957 ] A.M.ராஜா + P.சுசீலா

* தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் படம் : பெற்ற மகனை விற்ற அன்னை [1958 ] A.M.ராஜா + P.சுசீலா

* வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே படம் : பதிபக்தி [1959 ] T.M.சௌந்தரராஜன்

* கனிந்த காதல் இன்பம் என்றானே படம் : ராஜாமலையசிம்மன் [1959 ] P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா

* விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே படம் : புதையல் C.S.ஜெயராமன் + P.சுசீலா

* நானன்றி யார் வருவார் படம் : மாலையிட்ட மங்கை [1959 ] T.R.மகாலிங்கம் + A.B.கோமளா

* சின்னஞ் சிறு கண் மலர் செம்பவழ வாய் மலர் படம் : பதிபக்தி [1959 ] P.சுசீலா

போன்ற நல்ல பாடல்களை தந்த நேரத்தில் , மூத்த இசையமைப்பாளர்கள் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுடன் போட்டி போடவும் நேர்ந்தது. எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மூத்த இசையமைப்பாளர்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா போல எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற முடியவில்லை.அதற்காக அவர்கள் நிறைய பாடுபட வேண்டியிருந்தது.கீழே உள்ள படங்களின் பட்டியலை கவனித்தாலே புரியும்.அவர்கள் அந்தக்கால ஜாம்பவான் இசையமைப்பாளர்களுடன் போட்டி போடும் நிலைமை தான் இருந்தது.

1. மிஸ்ஸியம்மா [1955 ] எஸ்.ராஜேஸ்வர ராவ்

2. கோடீஸ்வரன் [1955 ] எஸ்.வீ .வெங்கட்ராமன்

3. கோமதியின் காதலன் [1955 ] ஜி.ராமநாதன்

4. நல்ல தங்கள் [1955 ] ஜி.ராமநாதன்

5. அமரதீபம் [1956 ] டி .சலபதி ராவ்

6. சதாரம் [1956 ] ஜி.ராமநாதன்

7. கோகிலவாணி [1958 ] ஜி.ராமநாதன்

8. நான் பெற்ற செல்வம் [1958 ] ஜி.ராமநாதன்

9. தாய்க்குப் பின் தாரம் [1956 ] கே .வீ . மகாதேவன்

10. இரும்புத்திரை [1958 ] எஸ்.வீ .வெங்கட்ராமன்

11. ரம்பையின் காதல் [1956 ] டி.ஆர்.பாப்பா

12. மதுரை வீரன் [1956 ] ஜி.ராமநாதன்

13. காத்தவராயன் [1957 ] ஜி.ராமநாதன்

14.அம்பிகாபதி [1957 ] ஜி.ராமநாதன்

15 .சமயசஞ்சீவி [1957 ] ஜி.ராமநாதன்

16 .சக்கரவர்த்தித் திருமகள் [1957 ] ஜி.ராமநாதன்

17. நீல மலை திருடன் [1957 ] கே .வீ . மகாதேவன்

18. மக்களைப் பெற்ற மகராசி [1957 ] கே .வீ . மகாதேவன்

19. உத்தமபுத்திரன் [1958 ] ஜி.ராமநாதன்

20. தங்க மலை ரகசியம் [1957 ] டி.ஜி.லிங்கப்பா

21. கடன் வாங்கிக் கல்யாணம் [1958 ] S.ராஜேஸ்வர ராவ்

22. சபாஸ் மீனா [1958 ] டி.ஜி.லிங்கப்பா

23 சாரங்கதாரா [1958 ] ஜி.ராமநாதன்

24. சக்கரவர்த்தித் திருமகள் [1958 ] ஜி.ராமநாதன்

இவர்களுடன் முக்கியமாக கே.வீ .மகாதேவனும் சமதையாக இசையமைத்துக்கொண்டிருந்தார்எனபதும் குறிப்பிடத்தக்கது..எம்.ஜி.ஆர் ,சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி என்ற படத்திற்கு இசையமைத்தவர்கே.வீ.மகாதேவன்.

பொதுவாக அன்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டிருந்தன.எல்லோரும் அருமையான , நல்ல பாடல்களை மட்டும் தருவோம் ” என்று சபதம் செய்தது போல் பாடல்களை தந்து கொண்டிருந்தார்கள்.மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அழகாக சொல்வார் ” வீணான பாட்டே கிடையாது ” என்று.

மகாதேவி [1957 ] படத்தில் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகச் சிறப்பானவை. உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கும் அற்ப்புதமான பாடல்கள் சிலவற்றை தந்தார்கள்.குறிப்பாக

1 . சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே [ பாடியவர்கள் : எம். எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி ]

இந்தப் பாடல் மூலம் தமிழ் திரை இசையில் தாலாட்டு பாடல் அமைப்பில் ஒரு புதிய போக்கு [ new trend ] ஏற்படுத்தியது என்றும் தாலாட்டுப் பாடல் என்றால் அந்த பாடல் அமைக்கப்பட்ட ராகத்தில் [ ஆபேரி ராகம் ] தான் அமைய வேண்டும் என்ற போக்கு பின்னாளில் அதன் விளைவால் ஏற்பட்டது என்பார் ” மெல்லிசை மன்னர் ” திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனாலும் 1954 இல் வெளிவந்த இல்லற ஜோதி என்ற படத்தில் இசைமேதை ஜி. ராமநாதன்

கண்ணல்ல தூங்கம்மா செல்ல
கண்ணல்ல தூங்கம்மா”

என்ற பாடலை ஆபேரி ராகத்தில் அமைத்து ஒரு முன் மாதிரியாக திகழ்ந்தார்.இதைப் போலவே பராசக்தி [ 1952 ] படத்தில் வரும் ” கொஞ்சு மொழி பைங்கிளியே ” என்ற பாடலை தேஷ் ராகத்தில் ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார். தமிழ் செவ்வியல் இசையில் [ கர்னாடக இசை ] தாலாட்டு பாடல்கள் என்றால் இன்ன இன்ன ராகங்ககளில் தான் இருக்க வேண்டும் [ குறிப்பாக நீலாம்பரி , குறிஞ்சி ,ஆனந்தபைரவி போன்ற ராகங்களில் ] என்கிற நியதிகளை அன்றே மீறி இருக்கிறார்கள்.அந்த ராகங்களில் சில ஒலி அதிர்வுகள் இருப்பது உண்மையாக இருக்கலாம்.ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி ஆபேரி போன்ற ராகங்களிலும் தாலாட்டு பாடல்களைத் தந்தார்கள்.

2 . மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு [ பாடியவர் : டி.எஸ்.பகவதி ]

இந்த பாடல் உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல். கதையோட்டத்திற்கு பொருத்தமாக மனதை உருக வைக்கும் ராகங்களில் [ பைரவி , ஹிந்தோளம் , ஆபேரி ] அமைத்து மக்களை இசையால் கட்டி போட்டார்கள்.இந்த பாடல் காட்சியில் நடிகை சாவித்திரியின் முக பாவங்கள் மிக அற்ப்புதமாக இருக்கும்.இசை நாடகங்களுக்கு பயன் படத் தக்க வகையில் மிகச் சிறப்பாக இசையமைக்கப்பட்ட பாடல் இதுவாகும்.இந்த வகை இசை பாணியை நாடகங்களில் பயன் படுத்தி நாம் பயன் அடையலாம்.

இது போலவே கற்ப்புக்கரசி , காத்தவராயன் போன்ற படங்களில் , சில பாடல்களில் இசை மேதை ஜி.ராமநாதன் பாடல்களிலேயே கதை சொல்லும் முறையை கையாண்டு ஒரு சிறந்த முன்னோடியாக விளங்கினார்.

இந்த இசையின் உன்னதங்களை , வெற்றிகளை எல்லாம் நடிகர்களும் ,அவர்களை சார்ந்த அரசியல் இயங்கங்களும் [தி.மு.க ] தங்கள் உயர்வுக்கு பயன் படுத்தினார்கள்.உண்மையில் இந்த வெற்றிகள எல்லாம் இசையமைப்பாளர்கள் பெற்றிருக்க வேண்டியவையே!! எத்தனையோ நூற்றுக்கணக்கான இனிமையான பழைய பாடல்களை ரசிக்கும் நாம் ,அந்தப்பாடல்கள் இடம் பெற்ற படங்களை மிகுந்த சகிப்பு தன்மையுடன் தான் இன்று பார்க்க வேண்டிய நிலை உள்ளது.சில படங்களை பார்க்கும் போது கொடிய தண்டனை அனுபவிப்பது போலிருக்கும்! ஆனாலும் பாடல்களாலேயே அந்த படங்கள் ஞாபகப் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்அந்த பாடல்களை தந்த இசை மேதைகள் பத்தோடு பதினொன்றாக ஆக்கப்பட்டார்கள். நியாயமாக அவர்கள் பெற வேண்டிய அங்கீகாரங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் கடினப்பட்டு உழைத்து உருவாக்கிய பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் பாட்டாகவும் , சிவாஜி பாட்டாகவும் அறியபட்டன.படங்கள் வெற்றி பெற்றால் பாடல்களும் வெற்றி பெறும்.அவர்களுக்கு எந்தவிதமான விருதுகளும் வழங்கப்படவில்லை.இசை மக்களைக் கவர்ந்தது என்றாலும் இசை பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம் என்பதால் அவர்கள் சரியாக கவனிக்கப்படாமல் போயினர்.தங்களுக்கான தனித்துவத்தைப் பேணும் அதே நேரம் , மிகவும் சிறப்பான பாடல்களையும் தந்தார்கள்.பின்னாளைப் போல நடிகர்களின் குழு மனப்பான்மை இல்லாத காலத்தில் இவை நடந்தன எனலாம்.நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டாலும் இசையமைப்பாளர்கள் பாகுபாடின்றி குழு நிலைக்குள் சிக்காமல் இருந்த காலமும் அதுவாகும் எனலாம்.

பாடகர்களிலும் பொதுவாக எல்லோரும் பாடிக்கொண்டிருந்தார்கள்.இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்றில்லாமல் இனிமையான குரலக்ளில் பாடல்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமானவர்கள் பாடியதால் பாடலகள் சுவையாகவும் இருந்தன.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேஷன் போன்ற நடிகர்களுக்கு ஒரே படத்தில் வெவ்வேறு பாடகர்கள் ,வெவ்வேறு விதமான பாடல்களை பாடினார்கள்.ஒரே படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏ .எம்.ராஜாவும் , டி .எம் சௌந்தரராஜனும் , பி.பி.ஸ்ரீநிவாசும் பாடிய படங்களும் உண்டு.அதனால் நல்ல பல பாடல்கள் தொந்தரவாகப் பாடப்படாமல் தப்பித்துக் கொண்டன.

பின்னாளில் துரதிஸ்டமான முறையில் தமிழ் சினிமா இசையில் இருந்து தானே ஒதுங்கி நின்ற, [அல்லது அவ்வாறான ஒரு நிலைக்கு அவரை கொண்டு செல்லப்பட்ட ] மாபெரும் இசைக்கலைஞன் A.M. ராஜா எழுபதுகளின் மத்தியில் ஒரு பேட்டியில் நல்ல பாடல்கள் பற்றி கேட்ட போது பின்வருமாறு கூறினார்.

” இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் , என்ற நிலை மாறவேண்டும். அந்நிலை மாறினால நல்ல பாடல்கள் வர வாய்ப்புக்கள் உண்டாகும்.”

பொதுவாக அந்தக்காலப் படங்கள் ராஜா ராணிக் கதைகளாகவே இருந்தன.அதனாலே விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவர்களும் முன்னவர்களை போன்றே இசையமைக்க வேண்டி இருந்தது.எனினும் அவற்றிலும் கிடைக்கும் காட்சிகளுக்குப் பொருத்தமாக சில பாடல்களில் வெளிநாட்டு இசையை பயன்படுத்தி வந்தார்கள்.குறிப்பாக குலேபகாவலி படத்தில்

ஆசையும் என் நேசமும் இரத்த பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா என்று கே.ஜமுனாராணி பாடும் பாடலில் [ படத்தில் ஆதி வாசிகளுக்கு நடுவே பாடும் பாடல் ]

THE GREEN COCKATOO [ HITS OG 46 ] ROBERTO INGLEZ & HIS ORCHESTRA என்ற லத்தீன் அமெரிக்க பாடலின்ஒரு சிறிய பகுதி சேர்ந்து மறைந்து விடும்.

நல்ல மெட்டுள்ள ஹிந்தி திரைப்படப் பாடல்களை நகல் எடுப்பதும் நடந்தன.செந்தமிழ் தென் மொழியாள் என்ற பாடல் , நௌசாத் இசையமைத்துப் புகழ் பெற்ற பாடலின் நேரடியான தழுவலாகும்.இது கண்ணதாசன் தயாரித்த படமான மாலையிட்ட மங்கை [1959 ] என்ற படத்தில் இடம் பெற்றது.. கண்ணதாசன் ,தனக்கு பிடித்த அந்த ஹிந்தி பாடலின் மெட்டில் , தனது வரிகளை போட்டு மகிழ்ந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் , இதே பாடல் வேறு ஒரு படத்திலும் மோக முத்தம் தருமாம் மலர் கொடியாள் என்ற பாடலாக, மேலே சொன்ன ஹிந்திப் பாடலின் நேரடித் தழுவலாகவும் வெளி வந்தது.

1940 களின் மத்தியில் இந்தி திரை இசையில் இசையமைப்பாளர் சி .ராமச்சந்திரா சாக்ஸபோன் , கிடார் ,ஹார்மோனிகா, ஒபோ , ட்ரம்பெட் ,கிளாரினெட்,பொன்கொஸ் போன்ற மேலைத்தேய வாத்தியங்களை அறிமுகம் செய்தது போல தமிழ் திரை இசையில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மேல் குறிப்பிடபட்ட வாத்தியங்களுடன் ஹிந்துஸ்தானி இசைக்கருவிகளான செனாய், சித்தார் போன்ற புதிய வாத்தியகருவிகளை தமது இசையில் பயன்படுத்தினார்கள்.

 

Shehnai [1947 ] என்ற படத்தில் சி .ராமச்சந்திரா இசையமைத்து சித்தலக்ர் [ Chitalkar ] என்ற பெயரில் அவரே மீனாகபூருடன் பாடிய ” Aanna Mere Jaan Sunday Ke Sunday ” .என்ற நகைசுவை பாடலில் மேலைத்தேய இசையையும் ,வடஇந்திய நாட்டுப்புற இசையையும் இணைத்திருப்பார்.

இதே உத்தியை பதிபக்தி [1959 ] படத்தி மேலைத்தேய இசை வடிவமான் ROCK AND ROLL இசையை ,தமிழ் செவ்வியல் இசையுடன் இணைத்து மேலைத்தேய நடனமும் ,தமிழ் நடனமும் இணைந்த ஒரு நாட்டியப் பாடலை , நகைச்சுவை பாடலாக தந்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.அந்த பாடலை நடிகர் ச்நதிரபாபுவும், V.N.சுந்தரமும் பாடினார்கள்.அந்த பாடலின் பெயர் : ராக் .. ராக் .. ராக் … ராக் அண்ட் ரோல் .[ படம் : பதிபக்தி ]

பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் சொல்வார் ” Westren Influence மெல்ல , மெல்ல வந்த போது K.V.மகாதேவன் சொல்வார் “கொஞ்சம் Western உடன் கலந்தால் அழகிருக்கு , அதில் தப்பில்லை, ..இசைக்கு எல்லை இல்லை ” என்று.

பதிபக்தி [1959 ] விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையருக்கு ” ” என்ற வரிசையில் அமைந்த முதல் படமாகும்.அவர்களின் இசையார்வத்திற்கு நல்ல ஆரம்பமாகவும் அமைந்திருந்தது. சமூகக் கதைகள் சினிமாவில் அதிகம் வெளிவர ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது.சமூகக் கதைகளை மைய்யமாக கொண்ட கதைகளின் வருகையும் ,அதற்கேற்ற புதிய மெல்லிசை பாங்கான இசையின் தேவையும் ஒன்றுக்கொன்று இசைவாக்கம் பெற உதவியது எனலாம்.திரைக் கதையின் சூழ்நிலைக்கு, கதா பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய இசையை மரபிலிருந்தும் , வெளியிலிருந்தும் இணைத்தும் அர்ப்புதங்களை செய்தார்கள். மேலைத்தேய இசை , ஹிந்தித் திரைப்பட இசை ,தமிழ் செவ்வியல் இசை ,ஹிந்துஸ்தானி இசை [ கவாலி , ஹசல் ] போன்ற பல் வகை இசையிலிருந்தும் இனிமையான பாடல்களைத் தரமுடியும் என இந்த இரட்டையர்கள் நிரூபித்தார்கள். குறிப்பாக 1960 களை இவர்களது பொற்காலம் அல்லது தமிழ் திரையிசையின் பொற்காலம் என வரையறுக்கலாம். பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக இருந்தாலும் அதில் இனிமையும் , வார்த்தை எளிமையும் இழைந்திருக்கும். பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக இருந்தாலும் அதில் இனிமையும் , வார்த்தை எளிமையும் இழைந்திருக்கும்.இன்றைய இளைஞர்களும் அவர்களது பாடலகளைப் பாட விளைவது அந்தப் பாடலகளில் இருக்கும் இலகுவான தன்மையினாலேயே! பலவகை இசையிலிருந்து அவர்கள் பெற்ற உந்துதல் [ INSPIRATION ],அவற்றை அவர்கள் நமது இந்திய சூழ்நிலைக்கு பொருத்துமான வகையில் இசைவாக்கியது பெரு வெற்றியளித்தது எனலாம்.படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைத் தந்தார்கள்.

பாடல் மெட்டமைப்பில் மட்டுமல்ல , இடையே வரும் இசையிலும் [ interlute ] சீரிய பார்வை கொண்டவர்களாக விளங்கினார்கள்.எளிமையான மெட்டமைப்பை கொண்ட பாடலாக இருந்தாலும் , புதுமையான , உயர்ந்த தர வாத்திய இணைப்பின் சேர்க்கையோடு பாடலின் இனிமையும் இணையும் போது புது பரிமாணங்களை எட்டி, நம்மை புது நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமைமிக்கதாக பாடல்கள் அமைந்துவிடுகின்றன. தமது சக்திக்கு எட்டிய உலக இசையின் சாத்தியங்களை எல்லாம் நமக்கும் காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.

குறிப்பாக 1950 களின் பின்னால் மேற்கில் வளரச்சியடைந்த பொப் இசை [ pop music ] என்னும் சொல்லாடல் ராக் அண்ட் ரோல் [ Rock and Roll ] இசையின் மூலம் கிடைக்கிறது.பல இசை வடிவங்களை [ Ballad , Gospel , Soul Music , Jazz , Country Music , Rythm of dance music ,Classical Music போன்ற இசை வடிவங்கள் ஒன்றிணைந்த இசை ] உள்வாங்கிய இசையாகவும் ,மின் கருவிகளை இணைத்த புது இசையாகவும் மலர்ந்தது.பொழுது போக்கு இசையில் புது பரிமாணங்களை எட்டிய இந்த வகை இசை மேற்கில் பரந்துபட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது.இந்த போக்குகளுக்கு முன்பே வளர்ந்திருந்த குறிப்பாக 1930,1940 களில் வளர்ச்சியடைந்த Nat King Cole போன்ற ஜாஸ் பியானோ இசைக்கலைஞர்களின் இசையில் மிக்க ஈடுபாடு காட்டியவர்கள் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி. Nat King Cole என்ற அமெரிக்க கறுப்பினஇசைக்கலைஞர். மிகப்பெரிய இசைக்குழுவை நடாத்தியதுடன் , முதன் முதலில் டி ,வீ நிகழ்சிகளிலும் இசை நிகழ்சிகளை நடத்திய முன்னோடியாவார். இவருடைய இசையின் பாதிப்பு [ inspiration ] மெல்லிசைமன்னர்களின் இசையில் அதிகம் உண்டு.

இவருடைய[ Nat King Cole ] வாத்திய குழுவில் பயன்படுத்தப்பட்ட BONGOS என்ற தாள வாத்தியம் தாள லயத்தில் புது மெருகூட்டியது. ஆபிரிக்காவின் அடிமை மக்களால் கொண்டு வரப்பட்ட இந்த வாத்தியம் , 1800 களில் கியூபாவில் நிலை பெற்று , பின் ஆபிரிக்க ,ஸ்பானிய கலப்பு கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது . Changui & Sone என்கிற ஸ்டைலில் வாசிக்கப்பட்டு புகழ் பெறுகிறது.சல்சா [ Salsa ] இசையின் வேர்கள இந்த இசையில் தான் உள்ளது என்பர்.1940 , 1950 களில் BONGOS முன்னணி வாத்தியமாக உயரவும் , வியாபாரா ரீதியில் புகழ் பெற உழைத்த கலைஞர் ” MR. BONGO ” என்று போற்றப்பட்ட Jack Contanzo என்பவராவார். இவர் Nat King Cole இன் வாத்தியக் குழுவில் மிக முக்கிய பங்காற்றினார்.இந்த இசை குழுவின் அமைப்பு முறையை தான் மெல்லிசைமன்ன்ர்கள் முன்மாதிரியாக [ INSPIRATION ] கொண்டு தமிழ் சினிமா இசையில் காட்சிகளுக்குப் பொருத்தமாக சில பாடலகளை தந்தார்கள்.சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் காட்சியில் தோன்றும் விஸ்வநாதனின் இசைக்குழுவும் Nat King Cole இன் வாத்தியக் குழுவினரை போலவே தோற்றமளிக்கும்.
BONGOS என்ற தாள வாத்தியக் கருவியை மிகச் சிறப்பாக மெல்லிசை மன்னர்கள் கையாண்டார்கள்.அதன் இனிய நாதம் தமிழ் திரை இசைக்கு புத்துணர்வுமிக்க புதிய சப்தத்தை வழங்கியது.இன்று ஏ.ஆர் ரகுமான் போல தாளத்தை சகட்டுமேனிக்கு போட்டு ” முழக்காமல் ” மிகவும் கச்சிதமாக திரையில் காட்சிகளுக்கு பொருத்தமாக பயன்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல கியுபாவில் தோன்றி பின் மெக்சிக்கோவில் நிலை பெற்ற நடன முறையில் பயன் பட்ட DENZONES என்ற இசை , ENRIQUE JORRIN என்பவரால உருவாக்கப்பட்டது.ஆங்கில இசையின் கலப்பும் ,கியூபா மற்றும் ஆபிரிக்க தாளத்தின் கலவைகளாக உருவான இந்த இசை பிரஞ்சு காலனித்துவ வாதிகளால் பரப்பபட்டது.இந்த இனிய கலவையின் விளைவாகத் தோன்றியதே CHA CHA CHA என்ற நடன இசை.இந்த இசை 1940 , 1950 களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது.இந்த CHA CHA CHA வை பயன்படுத்தி 1960 களில் வெளிவந்த பல படங்களில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பல வெற்றிப்பாடலகளைத் தந்தார்கள். அவற்றில் சில

1. அன்று வந்ததும் இதே நிலா [படம் : பெரிய இடத்து பெண் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P சுசீலா
இந்த பாடலில் நேரடியாக ”
CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி
இந்த பாடலிலும் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

3. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி …..
இந்தப் பாடலில் நேரடியாக
CHA CHA ” வராது ஆனால் தொனிப்புகளில் மிக துல்லியமாகத் தெரியும்.

அது மட்டுமல்ல ஸ்பானிய , ஆபிரிக்க கலப்பு இசையான இன்னொரு வடிவம் RAMBA MUSIC. இது லத்தீன் அமெரிக்க நடனத்தில் பயன்படும் மென்மையான தாள அசைவுகளை கொண்ட இசையாகும். இதை நல்ல உந்துதலாகக் கொண்டு [ INSPIRATION ] கொண்டும் சில பாடல்களைத் தந்தார்கள்.

போனால் போகட்டும் போடா ” [படம் : பாலும் பழமும் ] பாடியவர்: T.M.:சௌந்தரராஜன் ,,, என்ற பாடலை மிக அழகாக RAMBA MUSIC பாணியில் இசையமைத்திருப்பாரகள் மெல்லிசை மன்னர்கள்.

மேல் சொன்ன BONGOS என்ற தாள வாத்தியக் கருவி , CHA CHA CHA , RAMBA MUSIC போன்ற இசைகளின் கலவைகளான லத்தீன் அமெரிக்க இசையை கொண்டு இனிய பல பாடல்களை தந்தார்கள் மெல்லிசை மன்னர்கள். சில உதாரணங்கள் …இந்தப்பாடல்களில் BONGOS வாத்தியக்கருவி முதுகெலும்பாக இருக்கும். BONGOS வாத்தியம் பயன்பட்ட சில பாடல்கள் இதோ :

1. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

3. படைத்தானே படைத்தானே [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

4. போனால் போகட்டும் போடா [படம் : பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

5. பாலும் பழமும் கைகளில் ஏந்தி [படம் : பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

6. பெண் போனால் இந்த பெண் போனால் [படம் : எங்க வீட்டுப் பிள்ளை ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா

7. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் [படம் : தெய்வத்தாய் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

8. பருவம் போன பாதையில் [படம் : தெய்வத்தாய் ] பாடியவர்: P.சுசீலா

9. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

10.பருவம் எனது பாடல் [படம் : ஆயிரத்தில் ஒருவன் ]பாடியவர்: P.சுசீலா

11. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே [படம் : எங்க வீட்டுப் பிள்ளை ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா

12 .வந்த நாள் முதல் இந்த நாள் வரை [படம் : பாவ மன்னிப்பு ] பாடியவர்: T.M.:சௌந்தரராஜன்

இந்த ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை “ பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும்.தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.

மோகன ராகத்தில் இப்படியும் இசையமைக்க முடியுமா ? என்று எண்ண வைக்கும் வகையில் , முற்றிலும் புதிய , யாரும் எதிர் பார்க்காத கோணத்தில் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகும். ஹம்மிங் , விசில் போன்றவற்றோடு கமகங்கள் குறைக்கப்பட்ட மோகன ராகத்தின் வலிமையும் , கண்ணதாசனின் கவித்துவம் அழுத்தாத எளிமையான வரிகளாலும் அமைக்கப்பட்ட இந்தப் பாடல் இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்து செல்லும் வல்லமை கொண்ட புதுமையான பாடலாகும் , என்பது ஒவ்வொரு முறையும் கேட்கும் போதுஆனந்திக்கும் எனது அனுபவமாகும்.ஆச்சர்யமான முறையில் மோகன ராகத்தைக் கையாண்ட அவர்களது மேதமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மெல்லிசை மன்னர்கள் பற்றி பின்னணிப்பாடகர் பி .பி. ஸ்ரீனிவாஸ் சொல்வார்.. ” இவர்களது வருகையால் இசை இனிய திசைக்குச் சென்றது.” என்று.

உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமை அவர்களைச் சாரும் என்பதை நாம் அவர்களது பாடல்களை இன்று கேட்கும் போதும் உணரக்கூடியதாக இருக்கின்றது.இன்று சர்வ சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் வெளி நாட்டு வாத்தியங்களை எல்லாம் இவர்களே அறிமுகம் செய்தார்கள்.ஒரு மெலோடி [Melody ] யுகத்தை உருவாக்கி அதில் வாத்திய இனிமையையும் ,நவீனத்தையும் , காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தார்கள்.பாடல் மட்டுமல்ல பாடலுக்கு வரும் முகப்பு இசை [Opening Music] இடையில் வரும் வாத்திய இசை [Interlute] போன்றவற்றைப் புதுமையாக அமைத்து பாடலின் எல்லா பக்கத்தையும் இனிமையாக்கினார்கள்.ஹம்மிங் , கோரஸ் , விசில் , பறவை இனங்களின் ஒலிகள் , இரவின் ஒலி போன்ற சப்தங்களை எல்லாம் மிக நுட்பமாக பயன்படுத்தினார்கள்.மனதை கரைய வைத்து நினைவில் இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.காட்சிக்கு பொருத்தமான இசையை பயன்படுத்தி வந்த இரட்டையர்கள் மரபை விட்டு வில்கியவர்களல்ல என்பதும் கவனத்திற்குரியது.வாத்திய சேர்க்கைகளில் புதுமை இருந்தாலும் ராக அடிப்படைகளில் நின்று மனதை வசியம் செய்கின்ற பல பாடல்களை தந்தார்கள்.ராகங்களை “மறைத்து வைக்கும் “அதே நேரத்தில் அதன் குணாம்சங்களை பாத்திரங்களின் உணர்வு நிலைக்கு ஏற்ப கொடுக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள்.சில பாடல்களில் ராகங்கள் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு விதமான மயக்க நிலலையில் , ரகசியமாக ஒளித்து வைக்கும் கலையை கை வரப் பெற்றார்கள் எனலாம்.கனமான ராகங்களில் மெல்லிசை தன்மை ஓங்கி நிற்கும்.பாடல்களைத் தந்து சாதனை படைத்தார்கள். சில சாதனைப் பாடல்கள்…

1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [படம் : கர்ணன் ] பாடியவர்: P.சுசீலா ராகம்: சுத்த தன்யாசி

2. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே [படம் : பார் மகளே பார் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம்: தர்மவதி
3. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் [படம் :பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : சிவரஞ்சனி
4. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [படம் : பாக்கியலட்சுமி ] பாடியவர் : P.சுசீலாராகம் : சந்திர கெளன்ஸ்
5. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல [படம் : பாசமலர் ] பாடியவர்கள் : T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : ஆபேரி
6. தங்கரதம் வந்தது [படம் : கலைக்கோயில் ] பாடியவர்:பாலமுரளி கிருஷ்ணா + P.சுசீலா ராகம் : ஆபோகி
7. மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா [படம் : கற்பகம் ] பாடியவர்: P.சுசீலா ராகம் : கீரவாணி
8. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் ராகம் : ஆபேரி

9. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் ராகம் : கல்யாணி

10.ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்: P.சுசீலா ராகம் : காபி

11. பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா ராகம் : சாருகேசி

12 .பொன் என்பேன் சிறு பூ என்பேன் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி ராகம் : சாருகேசி

13 .தமிழுக்கும் அமுதென்று பேர் [படம் : பஞ்சவர்ணக்கிளி ] பாடியவர்: P.சுசீலா ராகம் : திலங்

14 .நான் உன்னை சேர்ந்த செல்வம் [படம் : கலைக்கோயில் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மோகனக்கல்யாணி

15 .நெஞ்சம் மறப்பதில்லை [படம் : நெஞ்சம் மறப்பதில்லை ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மிஸ்ர மாண்டு

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இவ்விதம் ஏராளமான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


திரையின் கதையமைப்பி
ற்க்கு ஏற்ப எங்கெல்லாம் நல்லிசை இருக்கிறதோ அவற்றை எல்லாம் , நமது சூழலுக்கு பொருத்தமாக , அவற்றை அருவருப்பாக அல்லாமல் கண்ணியமான பாடல்களாகத் தந்தார்கள்.

தங்களது இசையமைப்பு பற்றி மெல்லிசை மன்னர் பின்வருமாறு கூறுகிறார்.

” நாவல்டி.. புதுமை ..அப்படி ஏதாவது செய்யணுமின்னு வெறி இருந்தது.ஆனால், பழமை மாறாத புதுமை பன்னனுமின்னு நினைச்சோம். எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ராகமிருக்கும்.அதை கொஞ்சம் மாடிபை [ MODIFY ] பண்ணி … கொஞ்சம் வெஸ்டர்ன்நைசா { westernise ] பண்ணி .. இப்படி ஒரு விதமா சேஞ் பண்ணினோம்.முழுக்க முழுக்க கிளாசிக்கலா இருந்ததை மாற்றி லைட் கிளாசிக்கலா பண்ணி ஜனரஞ்சகமா கொடுத்தோம் “

அவர்களின் இசையை பற்றி அவர்களது ரசிகன் இளையராஜா சொல்கிறார்.

” எனது இளவயது போனதே தெரியாமல் ,அவருடைய இசையிலேயே நான் கழித்தேன்.எத்தனையோ பாடல்கள் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு உயிரோட்டமாகக் கொடுத்திருக்கிறார். அதில்

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.ஒரு பாடல் என்பது படத்துக்கு மட்டும் உதவினால் பிரயோசனமில்லை , படத்தைத் தாண்டி , பட சூழ் நிலையை தாண்டி ,படத்தில் வரும்கதாபாத்திர மன நிலையத் தாண்டி பாடலைக் கேட்ககூடிய ரசிகர்களை போய் தாக்க வேண்டும். பாலய விவாகம் செய்து கணவனை இழந்த பெண் பாடும் பாடல்.

அதில் எனக்குப் பிடித்த வரிகள் :

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
நினைவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம் ” ………என்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வைத்த அந்தப் பாடலைகண்ணாதாசன் அர்ப்புதமாக் எழுதினார்.விஸ்வநாதன் ,கண்ணதாசன் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாது.இசையை விட்டு வார்த்தையையும் ,
வார்த்தையை விட்டு இசையையும் பிரிக்க முடியாது.அது தான் இசை. பாட்டு என்றால் பாடுகிற படி இருக்க வேண்டும். “

பின்னாளில் இந்ந்தப் பாடலை உந்துதலாகக் [Inspiration] கொண்டு இளையராஜா ஒரு சிறந்தபாடலை அமைத்தார்.மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற அந்தப்பாடல் அமைந்த சந்திரகௌன்ஸ் என்ற ராகத்திலேயே , இளம் விதவை பாடுவதாகத்தான் அமைக்கப்பட்டது அந்தப் பாடல் வைதேகி காத்திருந்தாள் [1985 ]படத்தில் வரும் ”

” அழகு மலராட அபிநயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் ”

என்ற பாடலாகும்.ஒரே ராகமாக இருப்பினும் இரண்டு அற்ப்புதமான இசைப் படைப்புக்களாகும். இரண்டு பாடலும் ஒரே விதமான் உணர்வு நிலையை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் ,அந்த ராகத்தின் ரசம் அந்த உணர்வு நிலையை தொட்ட போதும் ,ஒரு பாட்டைப்போல அடுத்த பாடல் இல்லை.
இசைஞானி இளையராஜா சொல்வார் ” ஹிந்தி திரை இசையமப்பாளர்களான மதன் மோகனும் , ரோஷனும் தங்கள் இசை மூலம் பேசிக்கொள்வார்கள்; ஒருவர் தன பாடல் மூலம் கேள்வி கேட்பார் , மற்றவர் அதற்குத் தன் பாடல் மூலம் பதில் சொல்வார் “ என்று.
அது போன்றே
இசைஞானி இளையராஜா , இசை பொது வெளியில் பல இசைமேதைகளால் விடப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பதை நாம் அவருடைய பல பாடல்களிலிருந்து உதாரணங்களை சொல்ல முடியும்.அந்த வகையில் மெல்லிசை மாமன்னர்எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்ட கேள்விக்கான பதிலே “அழகு மலர் ஆட ..” என்ற பாடாகும்.அகத்தூண்டுதல் [Inspiration] என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

அதே போலவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற

” காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்க வா ” என்ற பாடலுக்கான Inspiration இசை மேதை நௌசாத் இசையமைத்த அக்பர் படத்தில் வரும் ” கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே ” என்ற பாடலிலிருந்து பெற்றது என்று கூறியிருப்பது ஆச்சரியமிக்கதாகும்.

பலவிதமான இசைகளை கேட்டு அவற்றில் லயித்து [Inspire] தாம் பெற்ற இன்பத்தை நமக்கும் தந்த மெல்லிசைம்ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தஅகத்தூண்டுதல் [Inspiration] பற்றி என்ன சொல்கிறார் ?

” இந்த இசையமைப்பு ,பாட்டெழுதுவது என்கிற தொழிலிலே நமக்குப் பிடிச்ச விசயங்கள் எங்கோ நமக்கு அறியாமல் ,ஒளிஞ்சு நிற்கும். வேறுயாராவது கம்போசர்களைக் கேட்டாக் கூட அந்தச் சாயல் வந்திடும் , இல்லை அந்தச் சாயல் அறியாமல் வந்திடும். அதனாலே அதனைத் திருடினேன் என்று சொல்லக் கூடாது.பாக்கியுள்ளவர்கள் திருடினேன் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒழிச்சு வைக்க வேணும்.அதனை ஓபன் ஆகத் திருடினேன் என்றளவுக்கு வைச்சுக்கக் கூடாது. நானும் காப்பி அடிச்சிருக்கேன் .என்னைப் பார்த்து சிலர் காப்பி அடிக்கிறதா சொல்லிக்கிறாங்க! இருக்கலாம் , But அதை ஒழிச்சு வைக்கணும்.அது மாதிரி…
கல்லைத்தான் காய்ச்சித்தான்
மண்ணைத்தான் குடிக்கத்தான்
… என பெரிய Poet அந்தக் காலத்தில் எழுதின ஒரு வரியை வைத்து ” கவிஞர் ” விளையாடினார். “அத்தான் ..என்னத்தான் ” இப்படி எல்லாம் தான் ,தான் என்றே வரும்.இந்த மாதிரி ஒரு பாட்டை எழுதினார்.பாவமன்னிப்பு படத்தில் நல்ல சிட்டுவேசன் மாட்டியது. அப்ப என்கிட்டே சொன்னாரு ..” டேய் தம்பி இப்படி ஒரு பாட்டு வைச்சிருக்கேன்டா ,ரொம்ப ஆசையாய் எழுதி வைச்சிருக்கேன் , இதை யார்யாரோ மியூசிக் டைரைக்டர்களிட்டே கொடுத்துப் பார்த்தேன்.இதுக்கு மெட்டே வராதுன்னுட்டாங்க.. நீ போட்டேன்னா உனக்கும் நல்லது ,எனக்கும் நல்லது என்று கெஞ்சினார்.அதில் என்னென்னா .. கவிதை அவ்வளவு ரசிப்புத்தன்மையுள்ளது.ஒரு ரசிகன் தான் கலைஞாக முடியும்.நான் ஏன் சொல்கிறேன் என்றால் அவர் ரசித்ததை நாம் எல்லோரும் ரசிப்போம் என்கிற நம்பிக்கை அவருக்கு ! என்கிட்டே கொடுத்தாரு , ஏன் வரமாட்டேன் என்று சொன்னாங்க ..ரை பண்ணிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன் …
“அத்தான்..
என் …..அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி ” ….
மத்தியிலே நல்ல காப் [ இடைவெளி ] இருக்கும். AVM செட்டியாரு சொன்னார் ” என்ன பாட்டிது ? மத்தியிலே இவ்வளவு காப் [ gap]இருக்கே , வெத்திலை ,பாக்கு மடிச்சு போடுற நேரம் இருக்கு , இப்பிடி பண்ணிட்டாங்களே விஸ்வநாதனும் ,கண்ணதாசனும்!!
அந்த காப் [ இடைவெளி ]எப்படியாச்சின்னா , வெட்கத்தை குறிப்பிட்டிச்சு.அந்த காப் சொல்லமுடியாத விரகதாபத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திரிச்சு !அதற்குத் தகுந்த மாதிரி பி.சுசீலா பாடும் பொது எல்லோரும் தம்மை மறந்தாங்க.லதா மங்கேஸ்கர் பாராட்டிய பாடல் அது.அந்த வார்த்தை தான் என்னை இன்ஸ்பையர் [ INSPIRE ] ஆக்கியது. ” —எம்.எஸ்.விஸ்வநாதன்.

மனதோடு மனோ இசை நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்கிறார். “… இன்னுமொரு கஷ்டமான சூழ்நிலை ,சிவாஜி ஹீரோ , கஷ்டப்பட்டு ,நொந்து பொய் ,அவஸ்தைப்பட்டு பாடுகிற பாட்டு.மேட்டுப்போட்டோம் ,பாட்டு எழுதினோம்.கம்போஸ் பண்ணினோம் ..சிவாஜி வந்தாரு. நீங்க நடிச்சாவது காட்டுங்க ,ஏதாவது inspiration வருதான்னு பார்ப்போம் என்றோம்.உடனே சிவாஜி நடித்துக் காட்டும் போது ” எங்கே நிம்மதி .. எங்கே நிம்மதி ” என்று நடித்து காட்டுகிறார்.அந்த வார்த்தையை வைத்து பல்லவிஎழுதினார்.ஒரு கவிஞரும் ,இசையமைப்பாளரும் கணவன் மனைவி போல பழகணும்.அப்படி நட்பாக இருந்தால் நல்ல பிள்ளை [ பாடல் ] பிறக்கும்.


ஒரு விதமான ஜனரஞ்சக இசையை [வெகுஜன மக்களிசை ] உருவாக்கி வெற்றி கொடி நாட்டிய அவர்கள், பாமரர்களை ரசிக்க வைத்தது மட்டுமல்ல இசை அறிந்தவர்களும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தார்கள்.

மெல்லிசைமன்னர்கள் உந்துதல் [ INSPIRE ] பெற்ற சில பாடல்களை கீழே தருகிறேன்.

ஹிந்தி திரைப்படப்பாடல்களை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்

01 . பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற
” காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்க வா ” என்ற பாடலுக்கான Inspiration இசை மேதை நௌசாத் இசையமைத்த அக்பர் படத்தில் வரும் ” கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே ” என்ற பாடலிலிருந்து பெற்றது என்று விஸ்வநாதன்
கூறியது ஆச்சரியமிக்கதாகும்.

04 . Chale Aaj Tum Jahan Se [ படம்: Udan Khatola ] இசை : நௌசாத்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ” [ படம்: பாவமன்னிப்பு ] – T.M.சௌந்தரராஜன்

05 . Dukh Bhare din beete re [ படம்: Mother India ] இசை : நௌசாத்

எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி

06 . O..gadiWale [ படம்: Mother India ] இசை : நௌசாத்

மஞ்சள் முகம் நிறம் மாறி ” [ படம்: கர்ணன் ] P.சுசீலா + குழுவினர்

07 . அழகே வா அறிவே வா ” [ படம்: ஆலயமணி ] 1963 – P.சுசீலா
Ruk Ja Rat Theher Ja Re [ படம்: Dil ke Mandir ] 1963 இசை : மதன் மோகன் …இந்தப் பாடலில் அழகே வா பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.

 

08 . Tum Muje Yun Bhula Na ” [ படம்: Pagla Kahin ka ] 1970 …
ஒரே பாடல் உன்னை அழைக்கும் படம்: எங்கிருந்தோ வந்தான் – T.M.சௌந்தரராஜன் ** இசை: எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப்பாடல் நேரடியாகத் துருத்திக்கொண்டு தெரியாது.அந்தப் ப்பாடலின் கடுமையான வாசம் இதில் வீசும்.இந்தப் பாடலில் மேலே உள்ள பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.

09 . DIl ka Haal Sune Dilwala – -Shri420 – Mnnaadey + Lata music: Shanker Jaikishan

* சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரபடம்: புதையல் – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்தப் பாடலின் thaal ஒரே மாதிரி amஇருக்கும்.பாடலில் நிறைய சாயல்கள் தெரியும்.Strong Inspiration.

10 . Mera Pyar Bhi Tu Hai ” [ படம்: ] இசை :

தங்கத்தில் முகம் எடுத்து [ படம்: மீனவ நண்பன் ]

11 . SAWAN KE BADALO UNSE JA KAHO – RATTAN-1944 – ZOHRA BAI & KARAN DIWAN music::NAUSHAD

* உன்னைத்தான் நானறிவேன்படம்: வாழ்க்கைப்படகு – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்த பாடலில் வரும் ” என் உள்ளம் என்னும் மாளிகையில உன்னையன்றி யார் வருவார் ” என்ற வரிகள் மட்டும்தான் எடுத்தாடபட்டிருக்கும்.வேறு எந்த இடங்களிலும் சம்பந்தம் கிடையாது.

12 . Main Aashinq Hoon Bacharonka – Film : Ashiq [1962] – Singer: Mugesh இந்த பாடலில் 01 :51 நிமிசத்தில் கீழே உள்ள பாடலின் சாயல் தெரயும்.

புன்னகையில் கோடி – படம் இதயக்கனி – T.M.சௌந்தரராஜன் மேலே உள்ள பாடலின் செயல் நன்றாக தெரியும்.

13 . Jag Dard E Ishq Jag – Anarkali – Lata Mangeshkar + Hemant Kumar Music: C .Ramachandra இசையமைத்த இந்தப் பாடல் , கீழ் கண்ட பாடல்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த
பாடலாகும்.
* மயக்கும் மலை பொழுதே நீ போ போபடம்: குலேபகாவலி – A.M.ராஜா + ஜிக்கி ** என்ற பாடலும்
* கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்படம்: மீண்டசொர்க்கம் – A.M.ராஜா + P.சுசீலா
* ஆசை பொங்கும் அழகு ரூபம் – – A.M.ராஜா + ஜிக்கி
* தூது செல்லாயோ இளம் ஜோடியாய் உலாவும் நிலவே
படம்: ராஜ சேவை – கண்டசாலா + ஜிக்கி ** போன்ற பல பாடல்களுக்கு மிகவும் முன்னுதாரணமிக்க
பாடலாகும்.மேற் சொன்ன அந்த பாடலின் கடுமையான பாதிப்புக்குள்ளான [ Inspiration ]பாடல்கள் இவை.

14 . Dil Dhal Jaye hai raat – singer : rafi music: S.D.Burman

மௌனமே பார்வையால் ஒரு – கொடி மலர் – பி.பி. ஸ்ரீநிவாஸ்

15 . Aat Socha To – film: Hindustan Ki Zakham – Music: Madan Mohan என்ற இந்த பாடலை அடியொற்றி கீழ் கண்ட பாடலை விஸ்வநாதனும் ,இளையராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள்.

தேடும் கண் பார்வை – மெல்லத்திறந்தது கதவு – எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ் ஜானகி

16 . Pekas Pekram Kijike – Film : mugal Eazam – lata Music : Nausad இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ்

17 . Tu Mera Chand mein tere chandni – Film : Dillagi – Music : Nausad என்ற பாடலில் வரும் ஒரு சிறிய புல்லாங்குழல் இசையை ஆதாரமாகக் கொண்டு

பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை மெல்லிசைமன்னர் மிக அற்ப்புதமாக ,அகத்தூண்டுதல் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைத்திருப்பார். இந்த விஷயத்தை  இசை மேதை நௌசாத் திடம் மெல்லிசைமன்னர் கூறிய போது அவர் ஆச்சரியத்துடன் அப்படியா என்று வியந்ததுடன் , இரு பாடல்களும் வெவ்வேறானவை என்றாராம்.
18 . தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் – படம் : பெற்ற மகனை விற்ற அன்னை பாடியர்கள் : A.M.ராஜா + P.சுசீலா இந்தப் பாடல் கீழ் வருகின்ற இசைமேதை நௌசாத் இசையமைத்த பாடலின் அகத்தூண்டுதலாகும்.
song :tere sadke balam -FIlm :Amar singer : lata

மேற்கத்தேய இசையை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்.
01 . Rhythm of the Rain ” The Cascades- ( Gomme ) 1963

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே [ படம்: எங்கமாமா ] T.M.சௌந்தரராஜன்

02 . Rock Around The clock ” bill Haley & The Comets 1956
விஸ்வநாதன் வேலை வேணும் [ படம்:காதலிக்க நேரமில்லை ]


03 . Lime Light Title Music ” [ படம்: Lime Light ] இசை : Charlie Chaplin

பந்தல் இருந்தால் கொடி படரும் [ படம்: பந்தபாசம் ] T.M.சௌந்தரராஜன் + எஸ் ஜானகி

04 . Stragers in the night Frank Sinatra
நல்லது கண்ணே கனவு கனிந்தது – ராமன் தேடிய சீதை – சௌந்தரராஜன் + சுசீலா

05 . Laura [ Hits of 1945 ] Woody Herman & HIs Orchestra இந்த பாடலில் வரும் ஹம்மிங் அப்படியே

படைத்தானே படைத்தானே ” என்ற பாடலில் [ படம்: நிச்சயதாம்பூலம் ] பயன்டுத்தியிருப்பார்கள்.

06 . Coolwater [ Hits of 1945 ] Vaughn Monroe & Sons of Poineer இந்த பாடலின் வாடை

யாருக்கு மாப்பிள்ளை யாரோ ” [ படம்: பார்த்தால் பசி தீரும் ] இந்தப் பாடலில் background இசையில் மெதுவாக வீசும்.

07 . Besame Mucho [ 1945 ] Jimmy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்

அனுபவம் புதுமை ” என்ற பாடலில் [ படம்: காதலிக்க நேரமில்லை ] என்ற பாடலில் வரும் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே …என்ற வரிகளில் சுகமாக வந்து
போகும்.
08 . The Green Cockatoo [ 1946 ] Roberto Inglez & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
தாபமும் வேகமும் தணித்திடும் பானமடா ” [ படம்: குலேபகாவலி ] இந்தப் பாடலில் அப்படியே வந்து போகும்.

09 . There ‘s No You[ 1945 ] Tommy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் ” [ படம்: சந்திரோதயம் ] என்ற பாடலில் வரும்.

 

09 . Across The Valley From the Alamo – [ 1947 ] The Mills Brothers இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் , குறிப்பாக தாளமும் ,கோரசும்
வீடு நோக்கி ஒடுகின்ற நம்மையே ” [ படம்: பதிபக்தி ] என்ற பாடலில் வரும்
.
10 . Dance At the Gym – Mambo என்ற பாடலில் First Part [ படம்: West Side Story ] music: Leonard Bernstein இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் இருக்கும்.
என்னைத் தெரியுமா ” [ படம்: குடியிருந்த கோயில் ] என்ற பாடலில் …ஆகா ரசிகன் …ஆகா ரசிகன் ..உங்கள் ரசிகன் என்ற வரிகளை பாடும் போது அந்தப் பாடலின் .

வேகம் அப்படியே வரும்

11 . Jezebel [ Million seller 1951 ] Frank Laine The Norman Luboff Choir இந்த பாடலை அடி ஒற்றி கீழே வரும் மூன்று பாடல்கள்

சம்போ சிவ சம்போ ” [ படம்: நினைத்தாலே இனிக்கும் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ” [ படம்: சிவந்த மண் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


12. Rock around the clock – Bill Haley
விஸ்வநாதன் வேலை வேண்டும் – காதலிக்க நேரமில்லை – P
.B.ஸ்ரீநிவாஸ்

13. Do You Wanna Dance – Bobby Freeman
மலர் என்ற முகம் – வெண்ணிற ஆடை – L.R.ஈஸ்வரி

14 . Standing on the corner – Four lads 1956
வீடு நோக்கு ஓடுகின்ற – பதி பக்தி – T.M.சௌந்தரராஜன்

15 . Good Golly Miss Golly – Little Richard 1956
என்ன வேகம் சொல்லு பாமா – குழந்தையும் தெய்வமும் – T.M.சௌந்தரராஜன்

16 . Estrella Morente – my songs and poems

பட்டத்து ராணி பார்க்கும் – சிவந்த மண் – L.R.ஈஸ்வரி

17 . javier solis [ ” payaso” ] இந்த பாடலில் கீழ் கண்ட பாடல்களின் சாயல்கள் தெரியும்.
தேவனே என்னை பாருங்கள் – ஞான ஒளி –
T.M.சௌந்தரராஜன்
அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன் – T.M.சௌந்தரராஜன் இந்தபாடலில் வரும் சிரிப்பு பகுதி மேல் சொன்ன பாடலை ஒத்திருக்கும்.

18 . Teri Pyaari Pyaari surat இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
கண் படுமே பிறர் கண் படுமே –
P.B.ஸ்ரீநிவாஸ்

19 . Damaso Perez Pradd – bailando maribo இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

அவளுக்கென்ன அழகிய முகம் – சர்வர் சுந்தரம் – T.M.சௌந்தரராஜன் + L.R.ஈஸ்வரி

20 .
Jose Padilla இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
அதோ அந்த பறவை போல – ஆயிரத்தில் ஒருவன் –
T.M.சௌந்தரராஜன்

இன்னும் பல எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த சில அமானுஷ்யப் பாடல்கள்.இசையால் நம்மை புது உலகத்திற்கு கொண்டு செல்லுவது போன்ற உணர்வை தருகின்ற பாடல்கள்.வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளை மனதில் கிளர்த்தக்கூடிய பாடல்கள்.

* அழகே வா அறிவே வா படம்: ஆண்டவன் கட்டளை – P.சுசீலா
* நெஞ்சம் மறப்பதில்லை படம்: நெஞ்சம் மறப்பதில்லை P.சுசீலா
* மன்னவனே அழலாமா படம்: கற்பகம் P.சுசீலா
* பூஜைக்கு வந்த மலரே வா
பாதகாணிக்கை ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா
* அம்மம்மா கேளடி தோழி படம்: கருப்புப்பணம் – ஈஸ்வரி
* பார்த்த ஞாபகம் இல்லையோ படம்: புதியபறவை P.சுசீலா
* கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா படம்: ஆலயமணி – T.M.சௌந்தரராஜன் ஈஸ்வரி
* நாம் ஒருவரை ஒருவர் குமரிக்கோட்டம் T.M.சௌந்தரராஜன் ஈஸ்வரி


1952 இல் இணைந்த மெல்லிசை மன்னர்கள் 1965 இல் பிரியும் வரை பல இனிமையான பாடல்களைத் தந்தார்கள்.பின்னர் தனித் தனியே சிறப்பாக இசையமைத்த போதும் முன்பிருந்த இருந்த இசையின் ஈர்ப்பு பின்னர் இருக்கவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.அந்த இருவரின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்தமையே மிகவும் நல்ல பாடல்கள் வரக் காரணமாயின எனலாம்.வேகமாக இசையமைக்கும் ஆற்றல பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னாளில் திரையிசையில் நிலை பெற்றார்.
அதன் காரணமாகவே முன்பு இரட்டையர்களாக இருந்து இசையமைத்த பாடல்களின் இனிமைக்கும் இவரையே தனி பொறுப்பாளர் என்று தவறுதலாக சொல்லப்படுவதுண்டு. விஸ்வநாதனின் சிற்ப்பான பாடல்களை பட்டியல் போடுபவர்கள் , அவர்கள் இரட்டையர்களாக இசையமைத்த பாடல்களை தான் பெரும்பாலும் சொல்வார்கள்.பதிலாக விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று தான் சொல்லப்படுவது நியாயம்.
மெல்லிசைமன்னர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் உள்ள சிறப்பு ,அவருடைய இசை ஆளுமை.அவர் தனது மெட்டுக்களை பாடகர்களுக்கு சொல்லி கொடுக்கும் போது ,அதை பாடகர்கள் உள்வாங்கிப் பாடும் போது அவருடைய பாதிப்பை பாடகர்களால் மறைக்க முடிவதில்லை.பாடகர்கள் பாடும் சில சமயங்களில் ” விஸ்வநாதன் குரலிலேயே ” பாடுவது போலவே அமைந்து விடுவதுண்டு. இந்த சிறப்பு வேறு இசையமைப்பாளர்களிடம் இல்லை என்று துணிந்து கூறலாம்.

பாடல்களை அமைப்பதிலும் ,அதிலுள்ள கமகங்களின் பிரயோகங்களையும் ,வாத்திய அமைப்பையும் வைத்து பல இசையமைப்பாளர்களின் பாடல்களை அடையாளம் கண்டு விடலாம். ஆனால் விஸ்வநாதன் போல ,தான் பாடுவது போலவே பாடகர்களைப் பாட வைக்கும் ஆற்றல் வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் நான் காணவில்லை.தங்கள் குரலின் தனித்துவத்துடன் சிறப்பாகப் பாடல்களை பாடும் பாடகர்கள் கூட விஸ்வநாதன் போல பாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை ISPIRE பண்ணிவிடுவார்.T.M.சௌந்தரராஜன் ,S.P. பாலசுரமணியம் போன்ற பாடகர்கள் பல பாடல்களை இவ்விதம் பாடி இருக்கிறார்கள். இதற்க்கு K.J.யேசுதாஸ் கூட ஆட்பட்டிருக்கிறார்.!!. ” ஆதி என்பது தொட்டிலிலே ” என்ற பாடலில் இது தெளிவாக தெரியும்.
அவர்களுடைய ஆரம்ப கால இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல பாடல்களை எழுதினார்.அவரைத்தொடர்ந்து கண்ணதாசன் கூட்டணியில் வெற்றிப் பாடல்கள வெளிவந்தன.

கண்ணதாசன் விஸ்வநாதன் பற்றி சொல்வார் : ” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும். Light Music இல் அவன் International.”

தங்களது இசையால் தமிழ் மக்களை மகிழ்வித்த மெல்லிசைமன்னர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இசையை மிகச் சிறப்பாக , நமது மரபு இசையுடன் இணைத்து புது பாதையை அமைத்தார்கள்.தமிழ் சினிமாவின் FUSION MUSIC என்று சொல்லப்படுகின்ற கலப்பிசையின் முன்னோடியாக இருந்தனர். உலகின் பல பகுதிகளிலும் உள்ள இசையை தம்மால் முடிந்தளவு தமிழ் மக்களுக்கு இசைவாக பதப்படுத்தி கொடுத்தனர் எனலாம்.மேற்கத்திய பொழுது போக்கு இசையும் , ஹிந்தி திரை இசையும் அவர்களது இசைஉந்துதலுக்கு [MUSIC INSPIRATION ] ஆதாரமாக அமைந்தன எனலாம்.

இவர்களை போன்றே கே .வீ .மகாதேவன் , ஆதிநாராயண ராவ், , கண்டசாலா , ஏ.எம் ராஜா , டி .ஜி.லிங்கப்பா , சி .என் .பாண்டுரங்கன் ,மாஸ்டர் வேணு , டி.வீ.ராஜூ , எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.கோவர்த்தனம். ஜி.தேவராஜன், வீ.தட்சிணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ் , வீ.குமார் ,எம்.பீ.ஸ்ரீநிவாசன் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் நல்லிசை தந்தார்கள்.தணியாத அவர்களது இசை ஆர்வத்தை அடியொற்றியே இசைஞானி இளையராஜா அறிமுகமாகிறார்.

தொடரும்…….

முன்னைய பதிவுகள் :

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T .சௌந்தர்

பணவீக்கம் 11.42% ஆனது : 13 ஆண்டில் இல்லாத உயர்வு

புதுடெல்லி, ஜூன் 28: கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந¢த வாரத்தில், பணவீக்கம் 11.42 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.05 சதவீதமாக இருந்தது. இப்போதும் மேலும் அதிகரித்துள்ளது.

 2009 மார்ச் நிலவரப்படி, பணவீக்கம் 5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் தொடர்ந்து 18 வாரங்களாக 5.5 சதவீதத்தை தாண்டியே பணவீக்கம் இருப்பது கவலை அளிக்கும் சேதி.

பால், டீ, தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் விலை உயர்வால்தான் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை 0.2 சதவீதமும் எரிபொருள் 0.1 சதவீதமும் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு பணவீக்கம் உயரும் என வர்த்தக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் சிதம்பரம் இதே கருத்தை பிரதிபலித்து உள்ளார். இரட்டை இலக்க பணவீக்க விகிதம் அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என அவர் தெரிவித்து உள்ளார்.